Published:Updated:

சூப்பர் வாய்ப்புகளை உருவாக்கும் ‘சுய பயிற்சி’ சூட்சுமங்கள்!

செல்ஃப் டெவலப்மென்ட்
பிரீமியம் ஸ்டோரி
செல்ஃப் டெவலப்மென்ட்

செல்ஃப் டெவலப்மென்ட் புக்ஸ்

சூப்பர் வாய்ப்புகளை உருவாக்கும் ‘சுய பயிற்சி’ சூட்சுமங்கள்!

செல்ஃப் டெவலப்மென்ட் புக்ஸ்

Published:Updated:
செல்ஃப் டெவலப்மென்ட்
பிரீமியம் ஸ்டோரி
செல்ஃப் டெவலப்மென்ட்

உங்களுடைய பணி வாழ்க்கை (கரியர்) எப்படிப்போகிறது என்ற கேள்விக்குப் பெரும்பான்மையானவர்கள் சொல்லும் பதில் என்ன? ‘‘மாற்றம் என்பதே நிரந்தரமாகி விட்டது’’, ‘‘வேலை தரும் அழுத்தத்தில் நான் தினம் செத்துப் பிழைக்கிறேன்’’ என்கிற பதில்களே அதிகம் வருகின்றன.

புத்தகத்தின் பெயர்:
You Coach You
ஆசிரியர்கள்: 
Helen Tupper and Sarah Ellis
பதிப்பகம்:‎ 
Penguin Business
புத்தகத்தின் பெயர்: You Coach You ஆசிரியர்கள்: Helen Tupper and Sarah Ellis பதிப்பகம்:‎ Penguin Business

தேவை ஒரு கரியர் கைடு...

இன்றைக்கு நம்முடைய கரியரின் போக்கு கடந்த நூறு ஆண்டுகளில் வாழ்ந்த நம் மூதாதை யர்களின் பணி வாழ்க்கையில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருக்கிறது. ஏனெனில், அன்றைய காலகட்டத்தில் பணி வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்கள் செய்த சில விஷயங்களைக் கண்ணும் கருத்துமாகப் பின்பற்றினால், நிச்சயம் வெற்றி கண்டுவிட முடியும் என்கிற நிலை இருந்தது.

இன்றைக்கு, அது மாதிரி எல்லாம் செய்து முன்னேற்றம் கண்டுவிட முடியாது. ஏனெனில், நம்முடைய கரியர் சார்ந்த விஷயங்கள் அனைத்தும் மிகச் சிக்கலான விஷயங்களாக மாறியுள்ளன. உங்களில் சிலர் அந்தச் சிக்கல் களைத் தெளிவாகப் புரிந்துகொண்டு, பயனடைந்திருப்பீர்கள். காரணம், சிக்கலான இந்த கரியர் வாழ்க்கை நமக்குப் பல்வேறு வாய்ப்புகளைத் தருவதாகவும் இருக்கிறது.

ஆனால், இந்தப் புரிந்துகொள்ளல் எல்லோருக்கும் எளிதில் கிடைத்துவிடுவ தில்லை. இந்தச் சிக்கலான விஷயங்களைப் புரிந்துகொள்ள ஒரு கரியர் கையேடு போன்ற ஒன்று நமக்கு வேண்டும். அல்லது அதற்கான பயிற்சியாவது நமக்கு அளிக்கப்பட வேண்டும். இந்தப் பயிற்சியை நமக்கு நாமே தருகிற மாதிரி இருந்தால் எப்படி இருக்கும்? என்று கேட்கும் ஆசிரியர்கள், அதற்கான நடைமுறைகளை இந்தப் புத்தகத்தில் தெளிவாக எடுத்துச் சொல்லியிருக்கின்றனர்.

சூப்பர் வாய்ப்புகளை உருவாக்கும்
‘சுய பயிற்சி’ சூட்சுமங்கள்!

பயிற்சி என்னும் சாவி...

எட்டு அத்தியாயங்களாகப் பிரிக்கப்பட்டு எழுதப்பட்டுள்ளது இந்தப் புத்தகம். முதல் அத்தியாயத்தில் பயிற்சி அளிப்பதற்கு தேவை யான மனநிலை மற்றும் திறமை குறித்து விளக்குகிறது. பயிற்சி என்பது பலவற்றையும் திறக்க உதவும் ஒரு சாவி என்பார்கள். உங்களுடைய திறனை வெளிக்கொணர உதவும், உங்களுக்குத் தேவையான வாய்ப்பு களை வெளிக்கொணர உதவும், நீங்கள் சிக்கியிருக்கும் சிக்கல்களில் இருந்து உங்களுக்கு வெளியேறும் வழியைக் காட்ட உதவும் சாவி பயிற்சியே ஆகும்.

பயிற்சி அளிப்பது ஒரு கலை. இந்தக் கலையை அனைவருமே கற்றுக்கொள்ளவும், கற்றுக்கொண்டபின் நடைமுறைப்படுத்தவும் முடியும். உங்களுக்கு நீங்களே கற்றுக் கொடுப்பது என்றால் என்ன என்ற கேள்விக்கு ஆசிரியர்கள் பின்வரும் விளக்கத்தைத் தருகின்றனர். அந்த விளக்கம் நமக்குப் புது நம்பிக்கையைத் தருவாக இருக்கிறது.

‘‘உங்களைப் பற்றி நீங்கள் தெளிவாகப் புரிந்துகொள்ள உதவும் கேள்விகளைக் கேட்டு அந்தக் கேள்விகளுக்கான பதிலைக்கொண்டு முன்னேற்றத்துக்குத் தேவையான நேர்மறை நடவடிக்கைகளை எடுப்பது என்பதைத்தான் உங்களுக்கு நீங்களே பயிற்சி அளித்துக்கொள்வது (coaching yourself) என்கிறோம்’’ எனச் சொல்கின்றனர் ஆசிரியர்கள்.

உங்களுக்கு நீங்களே பயிற்சியை வழங்கிக்கொள்வதற்கான திறன் என்பது நீங்கள் உங்களுடைய கரியரில் தற்போது அடைந்து இருக்கும் பதவியாலோ எத்தனை வருட அனுபவம் உங்களுக்கு உள்ளது என்பதில் இருந்தோ வருவதில்லை. உங்களுக்கு நீங்களே பயிற்சி அளித்துக் கொள்வதில் நீங்கள் எவ்வளவு கவனம் செலுத்துகிறீர்கள் மற்றும் எவ்வளவு நேரம் ஒதுக்குகிறீர்கள் என்பதில் இருந்தே அது நிர்ணயிக்கப்படுகிறது. ஃபர்பெக்ட் கோச் என்ற ஒரு நிலை இதில் கிடையவே கிடையாது. மனநிலை (Mindset), தேவையான திறன் (skillset) மற்றும் தேவையான விஷயங்கள் (Toolkit) என்ற மூன்றுமே உங்களுக்கு நீங்களே பயிற்சி அளித்துக்கொள்ளத் தேவையான தலையாய விஷயங்களாகும்.

பயிற்சி என்பது உங்களுக்குள் ஒரு மாற்றத்தைக் கொண்டு வருவதற்கான விஷயம். இந்த மாற்றம் என்பது உங்களுடைய பதவி உயர்வாக இருக்கலாம்; உங்களுடைய மேலதிகாரியிடம் இருக்கும் மோசமான உறவைச் சீர்செய்து நல்லுறவைப் பேணுவதாக இருக்கலாம்; ஏன், நீங்கள் பார்க்கும் வேலையில் ஓர் அர்த்தத்தை (purpose) காணுவதாகக்கூட இருக்கலாம்.

இந்தப் புத்தகத்தைப் பொறுத்தவரை, நீங்கள் ஒரு சிக்கலான சூழ்நிலையை எதிர்கொள்ளும்போது, ‘‘எனக்கு இதை எப்படிச் செய்வது என்பது தெரியாது. ஆனால், இதை எப்படிச் செய்வது என்பதைக் கற்றுக்கொள்ள என்னால் முடியும் என்பதை முழுமையாக நம்புகிற மனநிலை அவசியம் வேண்டும்’’ என்கின்றனர் ஆசிரியர்கள். இந்த விதமான மனநிலையைக் கொண்டிருப்பதே சிக்கலான சூழ்நிலைகளில் ‘‘இதற்கான தீர்வு எனக்குத் தெரியவில்லை’’ என்பதற்குப் பதிலாக, ‘‘இதற்கான தீர்வை நான் இன்னும் கண்டடையவில்லை” என்று உங்களைச் சொல்ல வைக்கும்.

சுயநம்பிக்கையை வளர்க்கும்...

மேலும், முன்னேற்றம் தொடர்ந்து தடைபடும்போது நம்முள்ளே ஒளிந்துகொண்டிருக்கும் சுயவிமர்சகர் (critic) நாமெல்லாம் இதற்கு லாயக்குப்பட மாட்டோம் என்கிற விமர்சனத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக நம்முன்னே வைத்து வளர்த்தெடுப்பார். இந்தக் குரலை நாம் கேட்ட வுடனேயே நம்மிடம் இருக்கும் பாசிட்டிவ்வான விஷயங்களை எல்லாம் விட்டுவிட்டு, நெகட்டிவ்வான விஷயங்களைப் பூதக்கண்ணாடி கொண்டு பார்க்க ஆரம்பித்துவிடுவோம். இதைத் தவிர்க்க நம்முடைய மனநிலையை முழுமையாக மாற்றி அமைக்க வேண்டும் என்கின்றனர் ஆசிரியர்கள்.

இருவகைப் புரிந்துகொள்ளல்...

நமக்கு நாமே பயிற்சி அளித்துக்கொள்ளும் திறன் என்று ஆசிரியர்கள் கூறுவது மூன்று விஷயங்களை. நம்மைப் பற்றிய சரியான சுய புரிதல்களைக் கொண்டிருத்தல், நம்மைப் பற்றி நாம் நம்முள்ளே இருந்தே சரிவர புரிந்துகொள்ளத் தேவையான முயற்சிகளை எடுத்தல் (Inner listening) மற்றும் இவை குறித்த சரியான கேள்விகளை நம்மை நாமே கேட்டுக்கொள்ளும் திறன் என்பவையே அந்த மூன்று விஷயங்களாகும்.

இதில் நம்மைப் பற்றிய சுயபுரிதல் என்பதில் உட்புறப் புரிதல் (Internal) மற்றும் வெளிப் புறப் புரிதல் (External) என்ற இரண்டு உட்பிரிவுகள் உள்ளன.

உட்புறப் புரிதல் என்பது நம்முடைய பலம், பலகீனம், உணர்வுகள், ஆசைகள் மற்றும் நம்முடைய எண்ணம் மற்றும் உணர்வுகளை சரிவரப் புரிந்து கொள்வதாகும்.

வெளிப்புறப் புரிதல் என்பது நம்மைச் சுற்றி இருப்பவர்கள் நம்மை எந்த மாதிரியாகப் பார்க்கின்றனர் என்பதைப் புரிந்துகொள்வதாகும். உதாரண மாக, நம்மைச் சுற்றி இருப்பவர்கள் நம்முடைய பலம் என்று எதை நினைக்கின்றனர் என்பதும் இதில் அடங்கும்.

இதில், உட்புறப் புரிதல் என்பது வேலை மற்றும் பணியிட உறவுகளை மேம்படுத்தவும், நம்முடைய ஏக்கம் மற்றும் மன அழுத்தத்தைக் குறைக்கவும் உதவும்.

வெளிப்புறப் புரிதல் என்பது மற்றவர்களுடைய உணர்வு களைப் புரிந்துகொள்ளவும், அவர்கள் பார்வையில் இருக்கும் அர்த்தத்தைப் புரிந்துகொள்ளவும் உதவும் என்கிறார்கள் ஆசிரியர்கள்.

வைராக்கியத்துடன் போராடும் குணம்...

ஒவ்வோர் அத்தியாயத்திலும் அந்த அத்தியாயத்தில் கூறப் பட்டுள்ளவற்றைப் பயிற்சி செய்வதற்கான டூல்கிட்டுகளும் இந்தப் புத்தகத்தில் தரப்பட்டு உள்ளன.

நாம் நினைத்த மாதிரியாக விஷயங்கள் நடக்காமல் போகும் போது எப்படி அமைதியாக, வைராக்கியத்துடன்கூடிய மீள்தன்மையுடன் இருப்பது (Resilience) பற்றி விளக்கமாக ஓர் அத்தியாயத்தில் கூறியுள்ளார்கள் ஆசிரியர்கள். இந்தக் குணாதிசயம் உங்களிடத்தில் எந்த அளவுக்கு உள்ளது என்பதைத் தெரிந்துகொள் வதற்கான ஒருசில கேள்விகள் அடங்கிய பட்டியலையும் தந்துள்ளனர். இந்த அத்தியாயத் தில் குறிப்பிட்டுள்ளவற்றைப் பின்பற்றினால், உங்களுடைய அவநம்பிக்கை உங்களுக்குத் தடையாக இருப்பதை முழுமை யாகத் தவிர்க்க முடியும் என்று உறுதியாகச் சொல்கிறார்கள்.

நோக்கத்தை அறிந்துகொள்வது...

நேரத்தை மேலாண்மை செய்வது, நம்மீது நாமே அளவற்ற நம்பிக்கை கொள்வது, அலுவல கத்தில் உறவுமுறையை மேம்படுத்து வது, நம்முடைய பார்வையில் நமக்கேற்ற வளர்ச்சி என்ன என்பதைப் புரிந்துகொள்வது, பணி சார்ந்த விஷயங்களில் நம்முடைய நோக்கத்தை எப்படி அளவிடுவது என்பது பற்றித் தனித்தனி அத்தியாயங் களில் எளிய நடையில் விளக்கமாகத் தருகிறது இந்தப் புத்தகம்.

இறுதி அத்தியாயத்தில் வெற்றிகரமான ஒலிம்பிக் வீரர்கள், ஆசிரியர்கள், படைப்பாளிகள் என்பது போன்ற பல்வேறு தரப்பினரிடமிருந்து உங்களுக்கு நீங்களே பயிற்சி அளித்துக்கொள்வது குறித்தும் கரியர் குறித்தும் பெறப்பட்ட ஆலோசனைகள் தரப்பட்டுள்ளது.

உங்கள் அனுபவங்களைப் பகிருங்கள்...

‘‘இந்தப் புத்தகத்தைப் படித்து அதில் கூறப்பட்டுள்ள நடைமுறைகள் மூலம் உங்களுடைய கரியரில் மாற்றத்தைக் கொண்டுவருவதுடன் நின்றுவிடாதீர்கள். நீங்கள் பெற்ற பலனையும் அதற்காக நீங்கள் எடுத்த முயற்சிகளையும் குறித்து உங்களுடைய (முந்தைய) சூழ்நிலையில் வாழும் நபர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள். அந்தவிதப் பகிர்தல் அவர்களுக்கும் உங்களுக்கும் மிகவும் உதவியாக இருக்கும்’’ என்று கூறி முடிவடைகிறது இந்தப் புத்தகம்.

நமக்கு நாமே பயிற்சி அளித்தல் எனும் புரட்சிகரமான கருத்தை விளக்கமாகவும் எளிமையாகவும் பல்வேறு நிஜவாழ்க்கை உதாரணங்களுடனும் கூறுகிற இந்தப் புத்தகத்தை அனைவரும் ஒருமுறை படித்துப் பயன் பெறலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism