லைஃப்ஸ்டைல்
என்டர்டெயின்மென்ட்
தன்னம்பிக்கை
Published:Updated:

2K kids: கரன்சி கொண்டுவரும் ‘கன்டன்ட் ரைட்டிங்’ வேலை!

vikatan
பிரீமியம் ஸ்டோரி
News
vikatan

- சுபலெட்சுமி இராமச்சந்திரன்

கொரோனா காலத்துல ஸ்கூல், காலேஜ் முடிக்கிறவங்களுக்கு அடுத்து என்னங்கிற தடுமாற்றம் கொஞ்சம் அதிகமாவே இருக்கு. அப்படித்தான் நானும் ஸ்கூல் முடிச்சிட்டு திருதிருனு முழிச்சிட்டு இருந்தேன். கொரோனா சூழல்களால கல்லூரி அட்மிஷனே தள்ளாடித் தள்ளாடிதான் நடந்துச்சு. ஸ்கூல் முடிஞ்சு ஆறு மாசங்கள் வீட்டுல இருந்துட்டு ஒருவழியா காலேஜுல ஃபீஸைக் கட்டினா, ஆன்லைன் கிளாஸ்ல படிங்கனு சொல்லி வீட்டுக்கு அனுப்பிட்டாங்க.

2K kids: கரன்சி கொண்டுவரும் ‘கன்டன்ட் ரைட்டிங்’ வேலை!

ஆனாலும், தேடல் இருந்தா எவ்வளவு கஷ்டமான சூழல்லயும் நமக்கான வாய்ப்பை நாம கண்டடையலாம்னு பெரியவங்க சொன்னது பொய்யில்லை. எனக்கும் அது நடந்தது. ‘இந்தக் கொரோனா இப்போதைக்கு சரி ஆகுற மாதிரி தெரியல... நாம ஏதாச்சும் பார்ட் டைம் வேலைகளைப் பார்ப்போம்’னு நினைச்சப்போ, ‘எல்லாருக்கும் இருக்குற வேலையே போயிட்டு இருக்கு, உனக்கு லாக்டௌன்ல பார்ட் டைம் வேலை கிடைக்குதாக்கும்?’னு எனக்குள்ளயே மைண்ட் வாய்ஸ் கேட்டுச்சு. இருந்தாலும் தெரிஞ்சவங்ககிட்ட எல்லாம், ‘ஏதாச்சும் புரா ஜெக்ட்ஸ் இருந்தா சொல்லுங்க’னு சொல்லி வெச்சேன்.

ஒருநாள் என் அக்காவோட தோழர் மூலமா, ஒரு ஷோரூமுக்கு கன்டன்ட் ரைட்டிங் எழுதுற வாய்ப்பு எனக்குக் கிடைச்சது. சில கன்டன்ட் எழுதி சாம்பிளுக்குக் கொடுத்தேன். அவங்களுக்குப் பிடிச்சுப்போக, அடுத்த மாசத்துல இருந்து தொழில்ரீதியா அவங்களுக்குக் கன்டன்ட் எழுத ஆரம்பிச்சுட்டேன். நான் எழுதுற கட்டுரையோட தரத்தைப் பொறுத்து எனக்கு பேமென்ட் கொடுத்தாங்க. ப்ளஸ் டூ மட்டுமே முடிச்சிருந்த எனக்கு, கொரோனா காலத்துல கிடைச்ச பெரிய வாய்ப்பு இது. என் தன்னம்பிக்கையும் தாறுமாறா அதிகரிச்சது.

இந்த கன்டன்ட் ரைட்டிங்கை என்னால மட்டும் இல்லப்பா... உங்களாலயும் செய்ய முடியும். ‘படிச்சிட்டு இருக்கேன்’, ‘படிப்பை முடிச்சிட்டு வீட்டுல இருக்கேன், போர் அடிக்குது’னு சொல்றவங்க எல்லாம், உங்களோட முத்தான நேரத்தை மொத்தமா பணமா மாத்த, இதோ கன்டன்ட் ரைட்டிங் எக்ஸ்பர்ட், ‘புராகிரெஸ்ஸிவ் லேர்னர்’ (Progressive Learner) நிறுவனத்தின் தலைவர் காந்த் வழிகாட்டுறார்.

‘கன்டன்ட் ரைட்டர்’ என்றால் என்ன?

‘‘நிறுவனங்களுக்கு அவங்களோட விற்பனைப் பொருள்கள் அல்லது அவங்க வழங்குற சேவைகளைப் பத்தி இதழ்கள்லேயும், வலைதளங்கள்லேயும் பிரசுரிக்கத் தகுந்த விளம்பரக் கட்டுரைகளை எழுதித் தர்றது கன்டன்ட் ரைட்டரோட வேலை.

2K kids: கரன்சி கொண்டுவரும் ‘கன்டன்ட் ரைட்டிங்’ வேலை!

யாரெல்லாம் கன்டன்ட் ரைட்டர் ஆகலாம்?

நிறுவனங்களின் தேவைக்கேற்ப தமிழ், ஆங்கிலத்துல நல்லா எழுதுற யாரும் கன்டன்ட் ரைட்டர் ஆகலாம். மாணவர்கள், வேலைக்குப் போறவங்க, ஹோம் மேக்கர்ஸ்னு எல்லாரும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கலாம். குறிப்பா, ஃப்ரீ டைம் இருக்குறவங்களுக்கு இந்த பார்ட் டைம் வேலை பெரிய உதவியா இருக்கும். சமூக ஊடகங்கள் பத்தியும் வலைதளங்களின் யுக்திகள் பத்தியும் தெரிஞ்சுக்கிறது அவசியம்.

வருமானம் என்ன கிடைக்கும்?

பொதுவா, ஒரு வார்த்தைக்கு ஐந்து ரூபாயில் இருந்து நிறுவனங்களைப் பொறுத்து 15 ரூபாய் வரை கிடைக்கும்.

வாய்ப்புக்கு வழி?

LinkedIn, Fiverr, Blogger போன்ற பல ஆன்லைன் தளங்கள்ல உங்க விவரங்கள் மற்றும் கட்டுரைகளைப் பதிவேற்றம் பண்ணலாம். உங்க கன்டன்ட் வணிக விற்பனையாளர்களுக்குப் பிடிச்சிருந்தா, அவங்க அதை உங்ககிட்ட பணம் கொடுத்து வாங்கிப் பாங்க.’’

பாத்தீங்களா மக்களே... நம்ம கீபோர்டுலேயே வாய்ப்பு மறைஞ்சு கிடக்கு. அதை முழுமையா பயன் படுத்திக்கிற திறமையும் முனைப்பும் உங்களுக்கு இருந்தா, வெற்றிதான்!