Election bannerElection banner
Published:Updated:

``இன்ஜினீயரிங் படிச்சுட்டு டீ ஆத்தலாமானு கேட்டாங்க!" - கரூரில் டீக்கடை நடத்தும் கார்த்திக்

டீ ஆற்றும் இன்ஜினீயர் கார்த்திக்
டீ ஆற்றும் இன்ஜினீயர் கார்த்திக் ( நா.ராஜமுருகன் )

எலெக்ட்ரிக்கல் அண்டு எலெக்ட்ரானிக்ஸ் இன்ஜினீயரிங் படித்த கரூரைச் சேர்ந்த கார்த்திக், கரூர் பேருந்துநிலையம் அருகில் உள்ள கடையில் டீ ஆத்துகிறார்.

ஒரு காலத்தில் இன்ஜினீயரிங் என்பது இளைஞர்களின் கனவாகவும், அவர்களுக்கு மரியாதையையும் சம்பளத்தையும் அள்ளித்தரும் படிப்பாகவும் பார்க்கப்பட்டது. ஆனால், இப்போது இன்ஜினீயரிங் படித்தவர்களுக்கு சமூகத்திலும் கம்பெனிகளிலும் 'மவுசு' குறைந்திருக்கிறது.

கடையில் கார்த்திக்
கடையில் கார்த்திக்
நா.ராஜமுருகன்

எலெக்ட்ரிக்கல் அண்டு எலெக்ட்ரானிக்ஸ் இன்ஜினீயரிங் படித்த கரூரைச் சேர்ந்த கார்த்திக் என்ற இளைஞர், கரூர் பேருந்துநிலையம் அருகில் உள்ள கடையில் டீ ஆத்துகிறார். பிரபல கம்பெனிகளில் பணிபுரிந்த அவருக்கு, மாதம்தோறும் 15,000 ரூபாய்க்கு மேல் சம்பளம் கிடைக்காமல் போக, தன் தந்தை நடத்தி வந்த, டீ மற்றும் கூல்ட்ரிங்ஸ் கடையைப் பொறுப்பேற்று திறம்பட நடத்தி வருகிறார். அவரைச் சந்தித்தோம்.

அட்டகாசமான ஒரு டீ கொடுத்து, தன் கதையை ஆரம்பித்தார் கார்த்திக்.

"எனக்குச் சொந்த ஊர் கரூர் காந்திநகர். அப்பா, அம்மா, அக்கா. அளவான குடும்பம். அப்பா கரூர் நகராட்சிக்குச் சொந்தமான இந்தக் கடையை வாடகைக்குப் பிடிச்சு, 25 வருஷமா டீ மற்றும் கூல்ட்ரிங்ஸ் கடையை நடத்திட்டு வர்றார். பெரிய அளவில் ஆரம்பத்துல வருமானம் இல்லைன்னாலும், குடும்ப தேவைகளை இந்தக் கடை வருமானம் பூர்த்தி செஞ்சுச்சு. இருந்தாலும், இந்தக் கடையை நடத்த 24 மணிநேரமும் மெனக்கடணும். அதனால, எங்கப்பா, 'நாம படுற கஷ்டத்தைப் பிள்ளைங்க படக்கூடாது'னு என்னையும் அக்காவையும் நல்லா படிக்க வச்சார். என்னை இங்குள்ள பிரபல பொறியியல் கல்லூரியில 5 லட்சம் கடன் வாங்கி படிக்க வச்சார்.

கார்த்திக்
கார்த்திக்
நா.ராஜமுருகன்
என் வளர்ச்சியைப் பார்த்துட்டு, 'இவன் தேவையில்லாத வேலை பார்க்குறானோ?'னு பயந்த அம்மாவும் அப்பாவும், 'இப்போதான்டா நம்பிக்கை வந்திருக்கு. நீ நல்லா வருவ. வியாபாரத்துல நினைச்சத செய். நாங்க ஃபுல் சப்போர்ட் பண்றோம்'னு நம்பிக்கையா தட்டிக்கொடுக்கிறாங்க.
கார்த்திக்

நானும் சின்ன வயசுல, கடை விஷயத்துல கவனம் இல்லாமதான் இருந்தேன். அதனால், 'நல்லா படிச்சு, நல்ல வேலைக்குப் போகணும்'னு நினைச்சு படிப்புல முழு கவனம் செலுத்தினேன். 2012–ல் இன்ஜினீயரிங் படிச்சேன். உடனே, சென்னைக்கு வண்டி ஏறிட்டேன். பிரபல நெட்வொர்க் கம்பெனியில 8,000 ரூபாய் சம்பளத்துக்கு வேலைக்குச் சேர்ந்தேன்.

டீ ஆற்றும் இன்ஜினியர் கார்த்திக்
டீ ஆற்றும் இன்ஜினியர் கார்த்திக்
நா.ராஜமுருகன்

பிறகு, பெங்களூர்ல சாஃப்ட்வேர் கம்பெனியில வேலைக்குச் சேர்ந்தேன். அங்கேயும், வேலை கடுமையா இருந்துச்சு. ஆனா, சம்பளம் குறைவு. அதனால், கரூர்ல உள்ள அரசு ஆலையில அப்ரண்டிஸா சேர்ந்தேன். 15,000 கொடுத்தாங்க. அது என் தேவைகளுக்கே பத்தலை. படிப்புக்காக வாங்கிய கடனைக் கட்ட முடியலை. வேலையை கன்ஃபார்ம் பண்ணவும் இல்லை. அடுத்து, தமிழ்நாடு இ.பி–யில இன்ஜினீயரா வேலைக்குச் சேர முயற்சி பண்ணினேன்.

Vikatan

15 லட்சம் வரை கேட்டாங்க. 'போதும் சாமி, உங்க இன்ஜினீயரிங் படிப்பு மூலமா கிடைக்கும் வேலை'னு வெறுத்துட்டேன். அதனால், 2016–ல, 'அப்பா பார்க்கும் டீக்கடையைக் கையில் எடுப்போம்'னு வெளியில் வந்துட்டேன்.

கடையில் கார்த்திக்
கடையில் கார்த்திக்
நா.ராஜமுருகன்

வீட்டுல முதல்ல, 'ஏன் இந்த வேண்டாத வேலை. இதுக்காகவா உன்னை இவ்வளவு செலவுசெஞ்சு படிக்க வச்சோம்'னு சொன்னாங்க. நண்பர்கள், தெரிஞ்சவங்களும், 'இன்ஜினீயரிங் படிச்சுட்டு, டீ ஆத்தலாமா?'னு தடுத்தாங்க. நான் நம்பிக்கையோட இருந்தேன். 'படிச்ச படிப்புக்கு கிடைச்ச வேலையில எவ்வளவு உழைச்சாலும், பெரிய அளவில் வருமானம் இல்லை. ஆனா, சொந்த கடையில் உழைக்க உழைக்க வருமானம். அதோட, யாருக்கும் பயப்படாம, நானே ராஜா, நானே மந்திரினு வாழலாம்'னு மனதில் உறுதியை வளர்த்துக்கிட்டேன்.

கடகடன்னு கடையில் மாற்றங்களைக் கொண்டு வந்தேன். விதவிதமான கூல்ட்ரிங்க்ஸ், ஸ்நாக்ஸ், டீ, காபி, பலகாரங்கள்னு பல விஷயங்களை ஒரே இடத்தில் விற்பனை செய்ய ஆரம்பிச்சேன். நானே டீ, காபி போட கத்துக்கிட்டேன். நல்ல வருமானம் வருது. படிப்புக்கு வாங்கின கடனையும், இந்தக் கடை டெவலப் பண்ண வாங்கின கடனையும் அடைச்சிட்டோம். வீட்டுலயும் என் மேல நம்பிக்கை வந்திருக்கு.

டீ ஆற்றும் இன்ஜினியர் கார்த்திக்
டீ ஆற்றும் இன்ஜினியர் கார்த்திக்
நா.ராஜமுருகன்

நண்பர்களும் 'சூப்பர்டா'னு உற்சாகப்படுத்துறாங்க. இப்போதான் எனக்கே, 'நாம சரியான வழியில்தான் போய்ட்டு இருக்கோம்'னு நம்பிக்கை வந்திருக்கு. அடுத்து, உணவு சம்பந்தமா பெரிய அளவில் தொழில் தொடங்குற முயற்சியில இருக்கிறேன். அதுலயும் ஜெயிப்பேன்!’’ என நம்பிக்கையுடன் முடித்தார் கார்த்திக்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு