Published:Updated:

முதல்முறையாக வேலைக்குச் செல்கிறீர்களா..? முக்கிய பொறுப்புக்கு வரத் தயாராகுங்கள்...

vikatan
பிரீமியம் ஸ்டோரி
vikatan

C A R E E R D E V E L O P M E N T

முதல்முறையாக வேலைக்குச் செல்கிறீர்களா..? முக்கிய பொறுப்புக்கு வரத் தயாராகுங்கள்...

C A R E E R D E V E L O P M E N T

Published:Updated:
vikatan
பிரீமியம் ஸ்டோரி
vikatan

ஆங்கிலத்தில் ‘ஃபர்ஸ்ட் இம்பரஷன் இஸ் பெஸ்ட் இம்பரஷன்’ என்பார்கள். படித்து முடித்து முதல் முறையாக வேலைக்குச் செல்பவர் களுக்கு இது மிக மிக அவசியமான ஒன்று. வேலைக்குச் சென்ற புதிதில் வேலையிலும் இயல்பிலும் அவர்கள் எப்படி நடந்துகொள்கிறார்களோ, அதைப் பொறுத்துதான் அலுவலகத் தில் அவர்களுடைய வளர்ச்சி இருக்கும். எப்படி வேலை செய்ய வேண்டும், எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று விளக்கமாக எடுத்துச் சொல்கிறார் மனிதவள மேம்பாட்டாளர் விஜயலட்சுமி.

விஜயலட்சுமி
விஜயலட்சுமி

சாமர்த்திய உழைப்புக்கு இது காலமல்ல...

‘‘கடின உழைப்பைவிட ‘ஸ்மார்ட் வொர்க்’ என்று சொல்லப்படுகிற சாமர்த்திய உழைப்புக்கு தேவைப் படுகிற இடத்தில் முக்கியத்துவம் தர வேண்டும்தான். ஆனால், புதிதாக வேலைக்குச் சேர்ந்த புதிதில் கடின உழைப்புக்குத்தான் முதலிடம் தர வேண்டும். ‘எட்டு மணி வரைதானே வேலை நேரம்... அதற்குமேல் நான் ஏன் வேலைப் பார்க்க வேண்டும்’ என்ற நேரக் கணக்கிடுதல் எல்லாம் மனதுக்குள் எட்டிப் பார்க்கக் கூடாது.

ஆறு மாதமா..? வேண்டவே வேண்டாம்...

புதிதாக வேலைக்குச் சேரும்போது, டெக்னாலஜி தொடர்பான வேலை களுக்கு முதல் ஆறு மாதங்களைக் கற்றுக்கொள்ளும் காலமாக நிறுவனம் உங்களுக்கு வழங்கும். டெக்னாலஜி அல்லாத வேலைகள் எனில், உங்களிடம் உடனடியாகப் பலனை எதிர்பார்ப்பார்கள். அதனால், ஆறு மாதங்களில் கற்றுக்கொள்வதை மூன்று மாதத்திலேயே கற்றுக்கொண்டு உங்களை நிரூபிக்க ஆரம்பித்தாலோ, வேலைகளை வெகு சீக்கிரம் கற்றுக் கொண்டாலோ நிறுவனம் தன்னுடைய ‘குட் புக்’கில் உங்கள் பேரை எழுதி வைத்துக்கொள்ளும்.

அலுவலகத்தில்...
அலுவலகத்தில்...

குழு மனப்பான்மை முக்கியம்...

புதிதாக வேலையில் சேர்ந்த வர்களுக்குக் குழு மனப்பான்மை மிகவும் முக்கியம் என்பதற்கு ஒரு சம்பவத்தைச் சொல்கிறேன். வேலைக்கு ஆள் எடுப்பதற்கான குழு விவாதம் ஒன்று நடந்துகொண் டிருந்தது. அதில் ஐந்து மனிதவள மேம்பாட்டாளர்கள் உட்கார்ந் திருந்தார்கள். அந்தக் குழு விவாதத்தில் இரண்டு பேர் மிகமிக நன்றாகப் பேசியிருந்தார்கள். ஆனால், அவர்கள் தேர்வு செய்யப்படவில்லை. காரணம், அவர்கள் நன்றாகப் பேசினார்களே தவிர, மற்றவர்களைப் பேச அனுமதிக்கவே இல்லை. இப்படிப் பட்டவர்கள் தங்களுடைய வளர்ச்சி யில்தான் கவனமாக இருப்பார்கள். தாங்கள் வேலை பார்க்கிற குழுவின் வளர்ச்சியில் அக்கறை எடுத்துக் கொள்ள மாட்டார்கள் என்பதற்காக அவர்கள் தேர்வு செய்யப்படவில்லை. புதிதாக வேலைக்குச் சேர்கிறவர் களிடம் இந்த இயல்பு இருந்தால், அதை மாற்றிக்கொள்ளுங்கள்.

நேர மேலாண்மையும் ஆடையும்...

வேலைக்குச் செல்பவர்களிடம் இருக்க வேண்டிய முதல் ஒழுக்கம், தினமும் நேரத்துக்கு அலுவலகம் செல்வது. இந்த ஒழுக்கத்தை எந்தக் காரணத்துக்காகவும் கைவிடாதவர் களாக இருப்பது ஆரம்ப நாள்களில் மிகவும் அவசியம். நேரத்துடன், உங்கள் அலுவலகத்துக்கென்று இருக்கிற ‘ஆடை விதி’யை கண்டிப் பாகப் பின்பற்றுங்கள்.

நெகிழ்வுத்தன்மையுடன் இருங்கள்...

புதிதாக வேலைக்குச் சேர்ந்தவர் களில் சிலர் பயத்தின் காரணமாக இறுக்கமாக இருப்பார்கள். அதனால் எல்லோரிடம் இருந்தும் சற்று ஒதுங்கியோ தானுண்டு தன் வேலையுண்டு என்றோ தரப்பட்ட வேலைகளைச் செய்துகொண்டு இருப்பார்கள். இதனால், உங்கள் டீம் லீடர் அல்லது மேனேஜர்கூட உங்களிடம் இயல்பாகப் பேச முடியாமல் இருந்துவிடுவார். இதற்குப் பதில், உங்களிடம் யார் வேண்டு மானாலும் எப்போது வேண்டு மானாலும் அலுவலக விஷயங்கள் பேசலாம் என்கிற அளவுக்கு நெகிழ்வுத்தன்மையுடன் இருங்கள்.

சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்ளுங்கள்...

வேலைதொடர்பான சந்தேகங்கள் வந்தால், ‘இந்த சந்தேகத்தைக் கேட்டா, இதுகூட தெரியாத முட்டாள்னு நம்மள நினைச்சுப்பாங்களோ’ என்று தயங்கிக்கொண்டு இருக்காதீர்கள். சந்தேகத்துடன் வேலையைத் தொடர்ந்தால் அதில் உங்கள் முழுத் திறமையையும் கண்டிப்பாகக் காட்ட முடியாது.

சிறுபிள்ளைத்தனங்களைத் தவிர்த்திடுங்கள்...

படித்து முடித்தவுடன் வேலைக்குச் செல்பவர்களிடம், படிக்கும்போது இருந்த சில குறும்புத் தனங்கள் மிச்சமிருக்கும். அவை அவர்களையும் அறியாமல் வெளிப்படவும் செய்யும். ‘ஃப்ரெஷர்’ என்ற எண்ணத்தில் மேலதிகாரிகள் பெரும் பாலும் இதைத் தவறாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள். என்றாலும், வேலை விஷயத்தில் அவற்றைத் தவிர்த்தால், உங்கள் இமேஜ் வளர்ச்சி காணும்.

தலைமையிடம் நல்ல பெயர் வாங்குங்கள்...

உங்கள் மேலதிகாரியிடம் நீங்கள் தாமதமாக அலுவலகம் வந்ததற்கு பேருந்து தாமதமாக வந்தது, டாக்ஸி கிடைக்கவில்லை என்று தொடர்ந்து பொய் சொல்லிக்கொண்டு இருக்காதீர்கள். அலுவலக விஷயங் களில் வெளிப்படையாக இருங்கள். தலைமையிடம் வாங்குகிற நல்ல பெயர்தான் உங்களை அடுத்தகட்ட வளர்ச்சிக்கு உயர்த்தும்.

‘என்னால் முடியாது’ என்கிற வார்த்தைகள் வேண்டவே வேண்டாம்!

‘இந்த வேலையை என்னால செய்ய முடியுமா’ என்கிற வார்த்தையைத் தவறியும் சொல்லி விடாதீர்கள். புதிதாக வேலையில் சேர்ந்தவர்களுக்குப் பல வேலைகள் தெரியாமல்தான் இருக்கும். அவற்றைக் கற்றுக்கொள்வதுதான் தீர்வு. ‘என்னால் முடியாது, எனக்குத் தெரியாது’ என்று சொல்வதை நிர்வாகம் எப்போதும் ஏற்காது.

சம்பளத்தைப் பற்றி யோசிக்காதீர்கள்...

வேலைக்குச் சேர்ந்த முதல் இரண்டு வருடங்களுக்கு சம்பளத் தைப் பற்றி யோசிக்கவே யோசிக் காதீர்கள். அந்த இரு வருடங்களும் நீங்கள் கற்றுக் கொள் வதற்கான காலகட்டம் என்று நினைவில் வையுங்கள்.

நிறுவனம் மாறாதீர்கள்...

குறைந்தது மூன்று வருடங்கள் வரைக்கும் ஒரே கம்பெனியில் வேலையைப் பாருங்கள். ஆறு மாதத்திலேயே அடுத்த வேலை என்று இருந்தீர் களென்றால், உங்கள் வளர்ச்சி சீராக இருக்காது. இதனால், இளம் வயதில் லீடர்ஷிப் ரோலுக்கு வர முடியாமலும் போகலாம்.

மூன்று ‘P’க்களைக் கடைப்பிடியுங்கள்...

எல்லா கம்பெனிகளிலும் Process, Policy, Procedure என மூன்று ‘P’க்கள் இருக்கும். அந்த மூன்றையும் கடைப்பிடித்தீர்களென்றால், முதல் நிறுவனத்திலேயே நீங்கள் முக்கிய மான பொறுப்புக்கு வருவதற்கு நிறைய வாய்ப்பிருக்கிறது’’ என்று முடித்தார்.

ஆல் தி பெஸ்ட் ஃப்ரெஷ்ஷர்ஸ்..!

பிட்ஸ்

வெளிநாட்டு போர்ட் ஃபோலியோ முதலீட் டாளர்கள் (FPI) இந்திய பாண்ட் சந்தையில் இருந்து கடந்த மார்ச்சில் மட்டும் ரூ.36,952 கோடி அளவுக்கு முதலீட்டைத் திரும்ப எடுத்திருக் கிறார்கள்!