அதிக திறமை கொண்ட வர்களை அதிக அளவில் உங்களுடைய குழுவில் இருக்குமாறு எந்த அளவுக்குப் பார்த்துக்கொள் கிறீர்களோ, அந்த அளவுக்கு உங்களுடைய குழு வெற்றி அடையும் வாய்ப்பும் அதிகமாகிறது’’ என்று சொல்லி ஆரம்பிக்கிறது மார்க் மில்லர் என்பவர் எழுதிய ‘டாலன்ட் மேக்னட்’ என்ற இந்தப் புத்தகம்.

திறமையான பணியாளர்களை எப்படிக் கண்டுபிடிப்பது?

அதிக திறமையான பணியாளர் களைக் கண்டுபிடித்து அவர்களைப் பணியில் அமர்த்தி வேலையில் தொடர்ந்து இருத்திக்கொள்வதே பல நிறுவன மேனேஜர்களுக்கும் மிகப் பெரிய சவாலாக இருக்கிறது. இப்படி எல்லா நிறுவனங்களும் திறமை, திறமை என்று தேட ஆரம் பித்த காரணத்தினாலேயே திறமை யான ஆட்களுக்கான தேவை அதிகரித்து, நிறுவனங்களுக்கு இடையே திறமையான ஆட்களைப் பிடிப்பதற்கான போர் நடப்பது போன்ற சூழ்நிலையே உருவாகி விட்டது. இந்தச் சூழலில் நிறுவனங்கள் எப்படித் தங்களுக்குத் தேவைப்படும் வெகுதிறமையான நபர்களைக் கவர என்ன செய்ய வேண்டும் என்பதைச் சொல்கிறது இந்தப் புத்தகம்.

சாரசரி திறமை கொண்ட நபர்களை ஒரு நிறுவனம் கவர்வதற் கான காரணிகளைவிட மிகச்சிறந்த திறமை கொண்ட நபர்களைக் கவர் வதற்கான காரணிகள் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கிறது. இந்தப் புத்தகம் இந்த இரண்டுக்கும் இடையே உள்ள வித்தியாசத்தையும் விளக் கமாகச் சொல்கிறது.

சி.இ.ஓ-க்களின் கவலை...

‘வேலைக்கு ஆள் கிடைப்பது என்பது ஒரு பிரச்னையே இல்லை. என்றாலும் கிடைக்கிற ஆளின் திறமை என்பதுதான் மிகவும் கவலை அளிக்கும் ஒன்றாக இருக்கிறது’ என்று பல நிறுவனத்தின் சி.இ.ஓ-க்கள் புலம்புகின்றனர். இதற்கு என்ன அர்த்தம்? இது நிறுவனங்களின் மனிதவளப் பிரிவு மேலாளரின் பிரச்னை மட்டுமல்ல. சி.இ.ஓ-க் களின் தலையாய பிரச்னை என்ற அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறிவிட்டதைத்தானே இந்தப் புலம்பல் நமக்குக் காட்டுகிறது!

அதிக திறமை கொண்டவர்களுக்கு ஒரு நிறுவனத்தில் பணிக்குச் சேர என்னதான் வேண்டும்? ‘நல்ல சம்பளம், விடுமுறை, மருத்துவக் காப்பீடு இத்யாதிகள் எல்லாம் தருகிறோம். இருந்தாலும், எங்கள் நிறுவனத்தால் அதிக திறமை கொண்டவர்களைக் கவர முடிய வில்லை’ என்பதுதான் பல நிறுவனங் களும் சலிப்புடன் சொல்லும் ஒரு விஷயமாக இருக்கிறது. இப்படிப்பட்ட அதிக திறமை கொண்ட நபர்களைக் கவர்ந்திழுப்பது எப்படி, எப்படி ஒரு நிறுவனம் இருந்தால், அதிக திறமை உள்ள நபர்கள் வந்து பணியில் சேர்வதற்காக வரிசையில் நிற்பார்கள் என்ற கேள்வி அனைவரின் மனதிலுமே தோன்றத்தான் செய் கிறது.

திறமையான பணியாளர்கள் ஏன் தேவை?

இந்தக் கேள்விக்குப் பதில் சொல்லும் முன் எதற்காக அதிக திறமை கொண்ட நபர்கள் ஒரு நிறுவனத்துக்குத் தேவைப்படு கின்றனர் என்று பார்ப்பது அவசியம்.

* அதிக திறமை கொண்ட நபர்களைக் கொண்டிருப்பதன் மூலம் ஒரு நிறுவனம் போட்டி நிறுவனங்கள் மத்தியில் நல்லதொரு அனுகூலத்துடன் திகழ்கிறது.

* இவர்கள் நிறுவனத்தை மிகவும் சுறுசுறுப்பாக இயங்கச் செய்கின்றனர். இவர்களால் செய்யப்படும் காரியங்கள் சிறந்த ரிசல்ட்டுகளைக் கொண்டு வருகிறது. குழப்பம் அதிக மாக இருக்கும் சூழ்நிலையில் இவர்கள் சரியான நடவடிக்கைகளை எடுக் கின்றனர்.

* அதிக வளர்ச்சியை நோக்கிய பயணத்தை இவர்கள் எப்போதுமே செய்ய முயல்கின்றனர். நிறுவனத்தின் பிராண்டின் பிரதிநிதியாக இவர்கள் (கொண்டிருக்கும் அதிக திறன்) பார்க்கப்படுகின்றனர். நிறுவனம் வேகமான வளர்ச்சியை அடையச் செய்வதில் முக்கியமான பங்களிப்பை அளிக்கின்றனர். நிறுவனத்துக்கான சிறந்த எதிர்காலத்தை உருவாக்குகிறனர்.

* நிறுவனத்தின் செயல்பாட்டு சக்தியை இவர்கள் அதிகரிக்கின்றனர். இவற்றையெல்லாம் செய்வதன் மூலம் மேலும் அதிக திறமை கொண்ட நபர்களை நிறுவனம் கவருமாறு செய்கின்றனர்.

* அதிக திறமை கொண்ட நபர்களால் இத்தனை அனுகூலங்கள் நிறுவனங் களுக்குக் கிடைப்பதனாலேயே அதிக திறமைக்கு நிறுவனங்கள் ஆலாய்ப் பறக்கின்றன.

ஆரம்பத்திலேயே கண்டுபிடிப்பது எப்படி?

ஆரம்பநிலைப் பணியாளர்களின் இடையே திறமையானவர்களைக் கண்டறிந்து சேர்ப்பது ஒரு குதிரைக் கொம்பான விஷயம். இதற்கு என்ன வழி என்று கேட்டால், ஒரு நிறுவனம், ‘நாங்கள் தங்கசுரங்கத்தில் எப்படி எக்கச்சக்கமாகத் தோண்டினால் அதில் மிகக் குறைவான அளவே தங்கம் கிடைக்கிறதோ, அதே போன்ற வழிமுறையைக் கையாள்கிறோம். எக்கச்சக்கமான ஆட்களை வேலைக்குச் சேர்த்து ஒரே நாள், ஒரு வாரம், ஒரு மாதம் என்று வகை தொகை இல்லாமல் வேலையை விட்டு மீதமிருக்கும் திறமை யானவர்களை நிலையாக வேலையில் இருக்குமாறு பார்த்துக்கொள்கிறோம்’ என்றது. இது சரியா, இதில் வேறு பிரச்னை ஏதும் இல்லையா என்று கேட்டால், அவர்கள் சொன்ன பதில், ‘அது என்ன மாயமோ தெரியவில்லை. சமீப காலமாக எங்களுக்குத் திறமையான ஆட்களே கிடைக்க மாட்டேன்’ என்கிறார்கள் என்பதுதான்.

இதிலிருந்து என்ன தெரிகிறது, கையில் கிடைக்கும் ஆட்களை எல்லாம் வேலைக்கு எடுத்து பின்னர் சலித்து சலித்து, திறமையை நிறுத்தி திறமையற்றவர் களைத் துரத்தும் நிறுவனத்தால் ஒரு கட்டத்துக்கு மேல் திறமை யான பணியாளர்களைக் கவர முடிவதில்லை என்பதைத் தானே?’ என்று கேட்கிறார் ஆசிரியர்.

நிறுவனம் செய்ய வேண்டியது...

‘இந்த நிறுவனத்தில் வேலை செய்வதால் என்னுடைய எதிர் காலத்துக்கு நான் எப்படித் தயார் செய்யப்படுவேன்’ என்ற கேள்வியை அதிக திறமை கொண்ட நபர்கள் மனதில் கொண்டிருக்கின்றனர்.

ஆனால், நிறுவனங்களோ எப்படி அதிக திறமை கொண்டவர்களைக் கவர்ந்திழுப்பது என்பதைக் கற்றுக் கொள்வதில் ஆர்வமாக இருக்கின்றனரே தவிர, எப்படி அவர்களுக்கான எதிர்காலத்தை வடிவமைப்பது என்பது குறித்து சிந்திப்பதில்லை.

நல்ல நிறுவனங்கள் திறமை யான பணியாளர்களைக் கவர்வதற்காக வைத்திருக்கும் தாரக மந்திரம், ‘எங்களுடைய நிறுவனத்தில் பணிபுரியும்போது நீங்கள் கற்றுக்கொள்ளும் விஷயங்கள் உங்களுடைய எதிர் காலம் சிறப்பாக அமைவதற்கு உதவுவதாக இருக்கும்’ என்பதைத் தெளிவாகச் சொல்லும் குணத் துடன் இருக்கின்றன.

ஏனென்றால், சரியான பணியாளர்களைத் தேர்வு செய்துவிட்டால் தொழில்ரீதியான ஏனைய விஷயங்கள் பலவும் சுலபமான ஒன்றாக மாறிவிடும் என்பதை இந்த நிறுவனங்கள் பரிபூரணமாக உணர்ந்துகொண்டிருக்கின்றன.

நல்ல கலாசாரமும் நற்பெயர் கொண்ட பிராண்டும்...

சராசரியான திறமை கொண்ட நபர்களைக் கவர நிறுவனங்கள் பணியாளர் களுக்குத் தரும் அடிப்படை விஷயங்கள், நல்ல கலாசாரம் மற்றும் நற்பெயர் கொண்ட பிராண்ட் என்ற மூன்றையும் கொண்டிருப்பதே போது மானதாக இருக்கிறது.

அதே சமயம், அதிக திறமை கொண்ட நபர்களைக் கவர்ந்திழுக்க இந்த மூன்றையும் தாண்டி நல்ல தலைமைப்பண்பு கொண்ட நிர்வாகிகள், தனிநபர் வளர்ச்சிக்கான குழப்பங்கள் அற்ற தெளிவான பணியிடச் சூழல், நிறுவனத்தின் நோக்கம் மற்றும் எதிர்காலம் குறித்த திட்டமும், அந்த நிறுவனம் சமுதாயத்தின்மீது கொண் டிருக்கும் தாக்கம் போன் றவையுமே காரணமாக இருக்கின்றன.

சிறந்த தலைமை (லீடர்ஷிப்), ஒளிமயமான எதிர்காலம் (தனிநபர் வளர்ச்சிக்கு வழி வகுக்கும் வகையில் ஆனது), எதிர்காலம் குறித்த விரிவான பார்வை (நிறுவனத் தின் நோக்கம் மற்றும் சமுதாயத்தின் மீதான தாக்கம்) என்ற மூன்றுமே அதிக திறமை கொண்டவர் களைக் கவர்ந்திழுப் பதில் முதன்மைக் காரணிகளாக இருக்கின்றன.

திறமைக்கேற்ற சரியான சம்பளம், போட்டி நிறுவனங் களைவிட அதிகமான வசதிகள், துடிப்பான கலாசாரம் என்ற மூன்றும் இரண்டாம் அடுக்கில் முக்கிய காரணியாக இருக்கிறது. இதில் கலாசாரம் என்பது வெறுமனே ஆரம்பித்து வைத்துவிட்டால் மட்டும் போதுமானது இல்லை. எந்த அளவுக்குக் கலாசாரம் இருக்க வேண்டும் என்று ஆரம்பத்தில் திட்டமிட்டோமோ, அந்த அளவுக்குத் தொடர்ந்து இருக்கிறாற்போல் நிறுவனம் தொடர்ந்து பார்த்துக் கொள்ளவும் வேண்டும். ஏனென்றால், பணிக்கு வரும்போது இந்தச் சூழலை நாங்கள் தருவோம் என்ற வாக்குறுதியை நிறுவனங்கள் பணியாளர்களுக்கு அளிக்கின்றன என்பதால், அந்த வாக்குறுதியை தொடர்ந்து நிறைவேற்றவும் வேண்டும்.

திறமையானவர்களே ஜெயிப்பார்கள்

சரி, ‘இவற்றையெல்லாம் கடைப்பிடிக்கிறோம் என்று தெரிந்தால், திறமை குறைவானவர்களும் இதைப் புரிந்து கொண்டு சுகமாக இருந்துவிட மாட்டார் களா’ என்ற கேள்வி உங்களுக்குத் தோன்றவே செய்யும். இங்கேதான் வித்தியாசமே. நிறுவன த்தின் இந்தக் குணாதிசயங்கள் அனை வருக்கும் புரிந்தாலுமே அதற்கான சரியான எதிர் வினையை ஆற்றுவது அதிக திறன் கொண் டவர்களால் மட்டுமே முடியும்’’ என்று சொல்லி முடியும் இந்தப் புத்தகத்தை எம்.பி.ஏ படிக்கும் மாணவர்கள் மட்டுமல்ல, அனைவருமே ஒருமுறை தாராளமாகப் படிக்கலாம்!

- நாணயம் விகடன் டீம்

புத்தகத்தின் பெயர்: Talent Magnet: How to Attract and Keep the Best People

ஆசிரியர்: Mark Miller

பதிப்பாளர்: Berrett-Koehler Publisher

பிட்ஸ்

எல் அண்ட் டி நிறுவனம் 2021-ல் 1,100 பொறியாளர் களை வேலைக்கு எடுக்க உள்ளது. இந்த நிறுவனம் ஏற்கெனவே ஐ.ஐ.டி -களிலிருந்து 250 பேரை அண்மையில் பணிக்கு எடுத்துள்ளது.