Published:Updated:

சாக்லேட் விற்பனை அதிகரிப்புக்கு இதுதான் காரணம்...

Chocolate ( pixbay )

சுமார் 1.2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை வருவாய் ஈட்டியுள்ளது. இந்த ஆண்டு Cadbury சாக்லேட்களின் விற்பனை மட்டும் 1 பில்லியன் டாலரைக் கடந்துள்ளது என்று நிறுவனம் அறிவித்துள்ளது.

சாக்லேட் விற்பனை அதிகரிப்புக்கு இதுதான் காரணம்...

சுமார் 1.2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை வருவாய் ஈட்டியுள்ளது. இந்த ஆண்டு Cadbury சாக்லேட்களின் விற்பனை மட்டும் 1 பில்லியன் டாலரைக் கடந்துள்ளது என்று நிறுவனம் அறிவித்துள்ளது.

Published:Updated:
Chocolate ( pixbay )

இனிப்புகளை யாருக்குத்தான் பிடிக்காது, அதிலும் சாக்லேட்களை.. `நல்ல விஷயம் செய்றதுக்கு முன்னாடி ஸ்வீட் சாப்பிடணும், ஒண்ணும் செய்யாமல் இருந்தாலும் ஸ்வீட் சாப்பிட வேண்டும்’ என சாக்லேட் சாப்பிடுவதற்கான நேரங்களை உடைத்து, எப்போது வேண்டுமானாலும் சாப்பிடலாம் என்ற விளம்பரங்கள் வெளியானது. அதன் ஒரு தொடர்ச்சியோ என்னவோ மக்கள் தங்களின் மனவழுத்தத்தின் போதும், பணவீக்கத்தின் மத்தியிலும் அதிக சாக்லேட்களை சாப்பிட்டுள்ளனர் என்கிறது Mondelez India. 

சாக்லேட் விற்பனை அதிகரிப்புக்கு இதுதான் காரணம்...

இந்திய நாட்டின் மிகப்பெரிய சாக்லேட் தயாரிப்பு நிறுவனம் தான், மன்டிலேஸ் இந்தியா (Mondelez India). 5 ஸ்டார், கேட்பரி, போர்ன்விடா,டெய்ரி மில்க், சாக்கோபேக்ஸ், நட்டிஸ், ஜெம்ஸ், ஹால்ஸ், ஓரியோ, டாங் போன்ற பல பிராண்ட் தயாரிப்புகளை விற்பனை செய்து வருகிறது. 

இந்நிலையில் இந்நிறுவனத்தின் சாக்லேட் விற்பனையில் வலுவான வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. சுமார் 1.2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை வருவாய் ஈட்டியுள்ளது. இந்த ஆண்டு Cadbury சாக்லேட்களின் விற்பனை மட்டும் 1 பில்லியன் டாலரைக் கடந்துள்ளது என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

இது குறித்து இந்நிறுவனத்தின் தலைவர் தீபக் ஐயர் கூறுகையில், ``கடுமையான லாக்டவுன் சமயத்தில், முதலில் அதிலிருந்து விடுபடவே நினைப்போம். ஆனால், கவலைக்குரிய நேரங்களில் சாக்லேட் ஆறுதல் அளிக்கும் உணவாக உள்ளது.

O ஃபார் Oreo!
O ஃபார் Oreo!

ஓரியோ மற்றும் போர்ன்விடாவின் விற்பனையில் புதுமையான சாக்லேட்களை அறிமுகம் செய்து, அதைப் பல இடங்களுக்கும் கொண்டு போய் சேர்த்ததன் விளைவாகக் கிராமப்புறங்களையும் எட்ட முடிந்தது. இதன் விளைவாக, கிராமப்புறம் இப்போது சாக்லேட்டின் ஒட்டுமொத்த விற்பனையில், ஐந்தில் ஒரு பங்கைக் கொண்டுள்ளது. இது கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இருந்த 10- 12 சதவிகிதத்துடன் ஒப்பிடும்போது, கிட்டத்தட்ட இருமடங்கு அதிகம். விற்பனையை அதிகரிக்க வாடிக்கையாளர்கள் குறித்து கவனம் செலுத்துவோம். அனைவரும் விரும்பும் விதமாக பிராண்ட் இருக்க வேண்டும், அனைவருக்கும் மலிவு விலையில் கிடைக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்துகிறோம்" என்றார்.