Published:Updated:

போட்டி நிறுவனங்களுடன் `Moonlighting’: 300 ஊழியர்களை அதிரடியாக நீக்கிய விப்ரோ!

விப்ரோ

``எங்கள் பிரச்னை, இந்த பணியாளர்கள் வேறு ஏதோ நிறுவனத்திற்காக பணிபுரிகிறார் என்பதல்ல. ஆனால் எங்களின் நேர் எதிர் போட்டியாளர் நிறுவனத்தில், எங்களுக்குத் தெரியாமல் ரகசியமாக பணிபுரிவதுதான்.”

போட்டி நிறுவனங்களுடன் `Moonlighting’: 300 ஊழியர்களை அதிரடியாக நீக்கிய விப்ரோ!

``எங்கள் பிரச்னை, இந்த பணியாளர்கள் வேறு ஏதோ நிறுவனத்திற்காக பணிபுரிகிறார் என்பதல்ல. ஆனால் எங்களின் நேர் எதிர் போட்டியாளர் நிறுவனத்தில், எங்களுக்குத் தெரியாமல் ரகசியமாக பணிபுரிவதுதான்.”

Published:Updated:
விப்ரோ

விப்ரோ நிறுவன தலைவர் ரிஷத் பிரேம்ஜி, தங்கள் நிறுவனத்தை சேர்ந்த சுமார் 300-க்கும் மேற்பட்ட ஊழியர்கள், ரகசியமாக ஒன்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்களில் வேலைபார்த்த (ஆங்கிலத்தில் இது Moonlighting எனப்படும்) காரணத்துக்காக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

wipro
wipro

இதுதொடர்பாக, அனைத்து இந்திய மேலாண்மை சங்கத்தில் நடந்த தேசிய மேலாண்மை மாநாட்டில் ரிஷத் பிரேம்ஜி பேசுகையில், ``உண்மை என்னவென்றால், இன்று விப்ரோவில் பணிபுரிபவர்கள் பலர், எங்களின் சில போட்டி நிறுவனங்களில் நேரடியாக வேலை செய்கிறார்கள். கடந்த சில மாதங்களில் அப்படி பிற நிறுவனங்களுக்கு வேலை செய்வோர் குறித்து கணக்கெடுத்தபோது 300 பேர் அவ்வாறு இருப்பதை கண்டுபிடித்துள்ளோம். அதன்படியே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நிறுவனத்தின் ஒருமைப்பாட்டை மீறிய செயலில் ஈடுபட்ட குற்றத்துக்காக அவர்கள் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மேலும் அவர் அந்த மாநாட்டில் பேசியபோது, ``இப்படியானவர்கள் வார இறுதியில் வேறொரு நிறுவனத்திலோ, குழுவிலோ பணி செய்யத் தொடங்கும்போது, வெளிப்படைத்தன்மையின் ஒரு பகுதியாக அதுகுறித்து மனம் திறந்து உரையாடல்களை நிறுவனத்திலேயே நடத்தலாம். நிறுவனமும், ஊழியரை புரிந்து கொண்டு யாரையும், எதுவும் பாதிக்காமல் இருக்க வழிவகை செய்யும்.

எங்கள் பிரச்னை, இந்தப் பணியாளர்கள் வேறு ஏதோ நிறுவனத்திற்காக பணிபுரிகிறார் என்பதல்ல. ஆனால் எங்களது நேர் எதிர் போட்டியாளர் நிறுவனத்தில், எங்களுக்குத் தெரியாமல் ரகசியமாக பணிபுரிவதை ஏற்க இயலாது. நேரடி போட்டியாளருக்கு பணிபுரிவதென்பது, சட்ட மீறுதலாகும். தொழில்நுட்ப துறையில் பணி செய்வோர், இப்படி ஒன்றுக்கும் மேற்பட்ட நிறுவனத்தில் பணி செய்வது குறித்து ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்து சொல்வார்கள். ஆனால் இதை எளிமையாக சொல்லவேண்டுமென்றால், இது ஏமாற்று வேலை. அவ்வளவுதான்” என்றுள்ளார்.

ஐடி துறை- representational image
ஐடி துறை- representational image

இதுதொடர்பாக வல்லுநர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். டெக் மஹிந்திரா தலைமை நிர்வாக அதிகாரி சிபி குர்னானி, மூன் லைட்டிங்கிற்கு ஆதரவாக சமீபத்தில் ட்வீட் செய்திருந்தார். அதில், `காலத்திற்கு ஏற்ப மாறிக்கொண்டே இருப்பது அவசியம். உண்மையில் இதை நான் வரவேற்கிறேன்’ என்று கூறினார்.

அதே நேரம், இன்ஃபோஸிஸ் நிறுவனம், ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்களில் பணிபுரிவதை தவறென்றே கூறுகின்றது. இந்த நிலையில், தற்போது 300-க்கும் மேற்பட்டோரை விப்ரோ நிறுவனம் பணியிடை நீக்கம் செய்துள்ளது, தகவல் தொழில் நுட்பத்துறை பணியாளர்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

- இன்பென்ட் ஷீலா