நம் செயல்களைத் தீர்மானிப்பது நம்முடைய எண்ணங்கள்தான்! பாசிட்டிவ்வான சிந்தனைப் போக்கை உடையவர்கள் எல்லா இடங்களிலும் அடுத்தடுத்த நிலைக்கு முன்னேறிச் செல்கிறார்கள். அவர்கள் ஸ்மார்ட்டாக உழைத்து, அடுத்தடுத்து உயர்பதவிகளையும் பெறுகிறார்கள். இந்த பாசிட்டிவ் அணுகுமுறைக்குக் காரணம் அவர்களிடம் இருக்கும் ‘புரோ ஆக்டிவ் திங்கிங்’தான்.(Proactive Thinking). இந்த சிந்தனைப் போக்கு அலுவலகப் பணியில் நம்மை மேம்படுத்திக்கொள்ள எப்படி உதவுகிறது என மனிதவள மேம்பாட்டுப் பயிற்சியாளர் ரவி திலகனிடம் கேட்டோம்.

“நம் அன்றாட வாழ்க்கையில் ஏதேனும் ஒரு செயல் நிகழும்போது அதற்கான எதிர்செயல் நம்மிடமிருந்து வெளிப்படும். உங்களின் டீம் லீடர் உங்களைப் பாராட்டும்போது வெளிப்படும் மகிழ்ச்சியும், யாரோ ஒருவர் உங்களைத் தரக்குறைவாக நடத்தும்போது ஏற்படும் கோபமும் இதற்கான எடுத்துக்காட்டுகள். நீங்கள் வெளிப்படுத்தும் உணர்வுகளுக்கான பின்விளைவுகள் உங்களின் தனிப் பட்ட மற்றும் அலுவலக வேலை களைப் பாதிக்காதபட்சத்தில் இருந்தால் பிரச்னை இல்லை. அதுவே உங்கள் அலுவலகப் பணியைப் பாதிக்கும்பட்சத்தில் அந்த உணர்வு களைக் கட்டுப்படுத்த வேண்டியது அவசியம். இந்த உணர்வுகளை எப்படிக் கட்டுப்படுத்துவது? ‘திங்கிங்’ எனப்படும் சிந்தித்து, முடிவெடுக்கும் திறனை மாற்றினால் போதும், நீங்கள் உங்கள் உணர்ச்சிகளுக்கு எஜமான்!

சிந்தித்துச் செயல்படும் விதம் இரண்டு வகை. ஒன்று, ரியாக்ஷன் (Reaction). மற்றொன்று, புரோ ஆக்ஷன். ஏதேனும் ஒரு சம்பவம் நடந்தவுடன் பின்விளைவுகளை யோசிக்காமல் எதிர்வினையாற்றுவது ‘ரியாக்ஷன்.’ அதுவே, இதற்கு இப்படி ரியாக்ட் செய்தால், இந்தப் பின்விளைவுகளை எல்லாம் சந்திக்க நேரிடும் என்று முன்கூட்டியே சிந்தித்து ரியாக்ட் செய்வது ‘புரோ ஆக்ஷன்’ எனப்படும். பிற்காலத்தில் ஏற்படக்கூடிய விளைவுகளை முன்கூட்டியே தீர்க்கமாக யோசித்துச் செயல்பட வைக்கும் சிந்தனைதான் ‘புரோ ஆக்டிவ் திங்கிங்.’ இக்கட்டான சூழலிலும் நிதானமாக யோசித்துச் சரியான முடிவெடுக்க ‘புரோ ஆக்டிவ் திங்கிங்’ உதவுகிறது. இந்த வகையான சிந்தனைப் போக்கு உள்ளவர்கள் எப்போதும் முன்னேற்பாடுகளுடன் இருப்பார்கள். அவர் களால் எந்தச் சூழலையும் எதிர்கொள்ள முடியும். நேரத்தின் அருமை அறிந்து செலவிடுவார்கள்.

ஒருவர் தான் பணி புரியும் துறையில் சிறப்பாகச் செயல்பட இந்த ‘புரோ ஆக்டிவ் திங்கிங்’ கைகொடுக்கிறது. இந்தச் சிந்தனைப்போக்கு உடையவர்கள் தங்களது பணியில் முழுக்கவனம் செலுத்துவார்கள்; சக பணியாளர்களைத் தாண்டியும் தனித்துத் தெரிவார்கள். மிக விரைவிலேயே அடுத்தகட்ட வளர்ச்சியை நோக்கிச் செல்வார்கள். பணியிடங்களில் அநாவசியமான பிரச்னைகளில் ஈடுபட மாட்டார்கள். இவர்களின் ஒவ்வொரு முடிவும் நிகழ்காலம், எதிர்காலம் இரண்டையும் கருத்தில்கொண்டே எடுக்கப்படும்.

‘புரோ ஆக்டிவ் திங்கிங்’ என்ற சிந்தனைப் போக்கை உங்களிடம் உருவாக்கிக் கொள்ள நீங்கள் பெரிதாக மெனக்கெடத் தேவை இல்லை. உங்கள் வேலை யில் கொஞ்சம் நிதானத்தை கடைப்பிடித்தாலே போதும். ‘பதறாத காரியம் சிதறாது’ என்கிற மாதிரி, இக்கட்டான சூழலில் பதற்றப்படாமல் பொறுமையாக யோசித்து முடிவெடுக்கும் கலையை வசமாக்கிக் கொண்டால், நீங்களும் ‘புரோ ஆக்டிவ் திங்கிங்’ உதவியுடன் மேலும் மேலும் முன்னேற முடியும்!