Published:Updated:

உங்களுக்குத் தகுதியான சம்பளத்தைப் பெறும் ‘செல்ஃப் மார்க்கெட்டிங்’ வழிமுறைகள்!

வேலைவாய்ப்பு
பிரீமியம் ஸ்டோரி
வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு

உங்களுக்குத் தகுதியான சம்பளத்தைப் பெறும் ‘செல்ஃப் மார்க்கெட்டிங்’ வழிமுறைகள்!

வேலைவாய்ப்பு

Published:Updated:
வேலைவாய்ப்பு
பிரீமியம் ஸ்டோரி
வேலைவாய்ப்பு

வேலையில் எத்தனை திறமைசாலியாக இருந் தாலும், எவ்வளவு சிறப்பாக நேர்முகத் தேர்வை எதிர் கொண்டிருந்தாலும், சம்பள விவகாரத்தில் பலரும் கோட்டை விட்டுவிடுவார் கள். நிறுவனம் மாறும்போது, தான் மனதுக்குள் நிர்ணயித்து வைத்திருக்கிற மாத வருமானத்தை நிஜமாக்கு கிறவர்கள் வெகு சிலரே..! அப்படியெனில், மற்ற வர்கள்..? அவர்களுக்காகத் தான் இங்கே சில ‘செல்ஃப் மார்க்கெட்டிங்’ வழிமுறை களைச் சொல்கிறார் மூத்த மனிதவள மேம்பாட்டாளர் ஜாஃபர் அலி.

உங்களுக்குத் தகுதியான சம்பளத்தைப் பெறும் ‘செல்ஃப் மார்க்கெட்டிங்’ வழிமுறைகள்!

பயம் வேண்டாம்...

சம்பளம் குறித்துப் பேசுகையில் பலரும் செய்கிற தவறு, பயத்துடன் ‘கலந்து பேசி முடிவு செய்யலாம்’ (Negotiate) என்பார்கள். ‘சுயவிவரத்தில் எதிர்பார்க்கும் சம்பளத்தைக் குறிப்பிட்டால் தன்னை நிராகரித்துவிடுவார் களோ’ என்ற பயத்தில் ‘கலந்து பேசி முடிவு செய்யலாம்’ என்று சொல்கிறார்கள். உங்களுடைய தகுதிக்கும், திறமைக்கும், அனுபவத்துக் கும் சமமான சம்பளத்தைத் தான் கேட்கிறீர்கள். அதைப் பயத்துடன் செய்யாதீர்கள்.

விலை பேசுங்கள்...

முந்தைய நிறுவனத்தில் பெற்ற அனுபவம், கற்ற தனித் திறமை ஆகிய அனைத்தை யும் அடுத்த நிறுவனத்துக்கு வழங்கவிருக்கிறீர்கள். அதற்கு என்ன விலை பேச வேண்டும் என்பதைத் தீர்க்கமாக முடிவெடுத்துக்கொண்டு நேர் காணலுக்குச் செல்லுங்கள். உங்கள் மதிப்பை நீங்களே சரியாக அளவிட்டால் மட்டுமே அதற்கான சம்பளத் தைக் கேட்க முடியும்.

ஹோம்வொர்க் முக்கியம்...

ஒரு நேர்காணலின் கடைசி விஷயம், சம்பளத்தைத் தீர்மானிப்பதுதான். இதில், நீங்கள் நினைத்ததைப் பெற வேண்டுமெனில், ஹோம் வொர்க் செய்துகொண்டு செல்வது அவசியம். உதாரண மாக, நீங்கள் ரசாயனத் தொழில் நிறுவனங்களில் வேலை தேடுபவர் எனில், உங்கள் நிறுவனத்தின் போட்டி நிறுவனங்களில், தற்போது எந்தப் பதவிக்கு, என்ன சம்பளம் தந்து வருகிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

துறைதோறும், குறைந்த பட்சம் இரண்டு வருடங் களுக்கு ஒருமுறை ‘காம்பன் சேஷன் சர்வே’ வெளியிடு வார்கள். இதன் மூலம், போட்டி நிறுவனங்களின் தற்போதைய சம்பள நிலவரத் தைத் தெரிந்துகொள்ள முடியும். இப்படித் தெரிந்து கொண்டு நேர்முகத் தேர்வுக்குச் செல்லும்போது, தற்போது குறைவான சம்பளம் பெற்றுவந்தாலும், சமீபத்திய ‘காம்பன்சேஷன் சர்வே’-வுக்கு ஏற்றாற்போல சம்பளம் கேட்கலாம்.

எந்த நிறுவனத்தின் நேர்முகத் தேர்வுக்குச் சென்றாலும், அதற்கு முன் அந்த நிறுவனத்தின் போட்டி நிறுவனம் உங்கள் பதவிக்கு என்ன சம்பளம் தருகிறது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். அப்போதுதான், அவர்களால் உங்கள் தகுதிக்குக் குறைவான சம்பளத்துக்கு உங்களை சம்மதிக்க வைக்க முடியாது.

ஜாஃபர் அலி
ஜாஃபர் அலி

நீங்கள் நூறில் ஒருவரா..?

ஒரு பெரிய நிறுவனத்தில் நூறு மேலாளர் பதவிகள் இருந்தாலும், சில துறைக்கான மேலாளர் பதவிகள் மட்டுமே மிக முக்கியமானதாக இருக்கும். அந்தப் பதவிக்கு நீங்கள் விண்ணப்பித்திருக்கிறீர்கள் எனில், கிட்டத்தட்ட நீங்கள் கேட்டதுதான் சம்பளமாக இருக்கும். உதாரணமாக, ஐந்து நட்சத்திர ஹோட்ட லின் பொது மேலாளரைவிட அங்கு வேலைபார்க்கும் தலைமைச் சமையலருக்கு அதிக சம்பளம் வழங்கப் படும். அந்தளவுக்கு உங்கள் பதவி நிறுவனத்துக்கு முக்கியமானதாக இருந்தால், நீங்கள் விரும்பிய வருமானம் கிடைப்பது நிச்சயம்.

செய்தவற்றை விவரியுங்கள்...

‘என்னைத் தேர்ந்தெடுத்தீர்கள் எனில், நான் உங்கள் நிறுவனத்துக்கு என்னவெல்லாம் செய்வேன்’ என்பதை மெலிதாக கோடிட்டுக் காட்டுங்கள். அதே நேரம், தற்போது வேலை பார்த்துவரும் நிறுவனத்தில் வழக்கமான வேலையைத் தவிர்த்து, நிறுவன முன்னேற்றத்துக்காக நீங்கள் செய்த பணிகளையும் பங்களிப்புகளையும் விவரித்துச் சொல்லுங்கள். இதைக் கேட்கையில், ‘இவரைத் தவறவிடக் கூடாது; இவர் கேட்டதைக் கொடுத்துவிடுவோம்’ என்கிற எண்ணம் ஏற்பட வேண்டும். அதைச் சரியாகச் செய்தால், நீங்கள் கேட்ட சம்பளம் கிடைக்கும்.

ஒத்திகையும் அவசியம்...

சம்பளம் தொடர்பாகப் பேச அழைக்கிறார்கள் எனில், அவர்கள் எப்படியெல்லாம் கேள்வி கேட்பார்கள்; அதற்கு நாம் எப்படி புத்திசாலித்தனமாகப் பதிலளிப்பது என்பதை ஒத்திகை பார்த்துக்கொண்டு சென்றால், நேர்முகத்தேர்வை தன்னம்பிக்கையுடன் அணுகலாம். அதேபோல், தற்போது இருக்கிற வேலையில் மாற்றம் அவசியமில்லாத நிலையில் இருந்தீர்கள் என்றாலும், உங்கள் தகுதிக்குச் சமமான சம்பளத்தைப் பெறுவதில் உறுதியாக நிற்கலாம்.

இதுவொரு யுக்தி...

உங்கள் தகுதிக்கும், அனுபவத்துக்கும் ஒரு லட்சம் கேட்கலாம் எனில், ‘ரூ.80,000-லிருந்து ரூ.1 லட்சம் வரை எதிர்பார்க்கிறேன்’ என்று சொல் லாதீர்கள். குறைந்தபட்ச தொகையான ரூ.80,000 தான் தருவார்கள். ‘ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.1.2 லட்சம் வரை எதிர்பார்க்கிறேன்’ என்று கேட்டால், குறைந்தபட்சமான ரூ.1 லட்சம் தர வாய்ப்பு அதிகம்.

ஒரு ‘செய்’ ; ஒரு ‘செய்யக் கூடாது!’

உங்கள் தகுதிக்குப் போட்டி நிறுவனங்களில் இருக்கிற வாய்ப்பையும், அதைத் தாண்டி தற்போது நேர்முகத்தேர்வு செய்யும் நிறுவனத்தில் நீங்கள் இணைய விரும்புவதற்கான காரணத்தையும் சற்று அழுத்திச் சொல்லலாம். ‘நீங்க கொடுக்கலைன்னா இன்னொரு கம்பெனியில கொடுக்கத் தயாரா இருக்காங்க’ என்று மட்டும் பேசவே கூடாது.

உங்களுக்குத் தகுதியான சம்பளத்தைப் பெறும் ‘செல்ஃப் மார்க்கெட்டிங்’ வழிமுறைகள்!

பேச்சு பேச்சாக இருக்க வேண்டும்!

சம்பளம் நிர்ணயிப்பது தொடர்பான விவாதத்தில், நிறுவனரின் ஈகோவை தூண்டி விடக்கூடாது. ஏனென்றால், இன்னொரு நாள் அதே நிறுவனத் துக்கு வர வேண்டிய நிலைமை வரலாம். தவிர, சம்பள விவகாரம் சரிப்பட்டு வரவில்லை எனில், அந்த விவாதத்தை நாசுக்காக நிறுத்திவிட்டு, மரியாதையான உடல்மொழியுடன் நன்றி சொல்லிவிட்டுக் கிளம்புங்கள். இதை எப்படிச் செய்வது என்பதையும் முன்கூட்டியே ஒத்திகைப் பார்த்து வைத்துக் கொள்ளுங்கள்.

எழுத்திலும் இருக்க வேண்டும்!

சில நிறுவனங்களில் நீங்கள் கேட்கிற சம்பளம் மற்றும் இதர சலுகைகளுக்கு ஒப்புக்கொள் வார்கள். ஆனால், அவை எல்லாம் ஆஃபர் லெட்டரில் இருக்காது. அதனால், விவாதித் தது எல்லாம் எழுத்தில் வந்து விட்டதா என்பதைச் சரிபார்த்து விடுங்கள். இல்லை எனில், ஒரு நாள் அல்லது இரண்டு நாள் என நேரம் வாங்கிக்கொண்டு அது தொடர்பாக மின்னஞ்சல் அனுப்பித் தெளிவு பெறுங்கள். ஏனெனில், உங்களை நேர்காணல் செய்து சம்பளம் மற்றும் இதர சலுகைகளை நிர்ணயித்த அதிகாரி, நீங்கள் வேலைக்குச் சேரும்போது அந்த அலுவலகத் தில் இல்லாமலும் போகலாம். அதனால் ‘நீங்க ஜாயின்ட் பண்ணிடுங்க; அப்புறம் பண்ணிடுறேன்’ என்பது போன்ற வாய் வாக்குறுதிகள் உதவாது. எல்லாமும் எழுத்தில் இருக்க வேண்டும் என்பது கட்டாயம்!’’