Published:Updated:

விகடன் மாணவப் பத்திரிகையாளர் திட்டம்... புறப்பட்டது புதிய படை!

 மாணவப் பத்திரிகையாளர்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
மாணவப் பத்திரிகையாளர்கள்

அறிமுகம்

விகடன் மாணவப் பத்திரிகையாளர் திட்டத்தின் புதிய படை புறப்பட்டிருக்கிறது. இந்த 2021-22 ஆண்டு விண்ணப்பித்திருந்த 2,234 மாணவர்களில், பலகட்டத் தேர்வுக்குப் பிறகு தேர்வு செய்யப்பட்ட 53 பேர், ‘ஸ்மார்ட் பத்திரிகையாளர்’ களாக ஊடக உலகில் நுழைந் துள்ளனர். இவர்களுக்கான கூட்டுப்பயிற்சி முகாம் சென்னையில் ‘ஆனந்த விகடன்’ அலுவலகத்தில் நவம்பர் 27, 28 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.

‘விகடன்’ குழுமத்துக்குள் இணைந்த மாணவப் பத்திரிகை யாளர்களுக்குத் தனது அறிமுக உரை மூலம் வரவேற்றார், விகடன் குழும நிர்வாக இயக்கு நரும் ‘ஆனந்த விகடன்’ ஆசிரியருமான பா.சீனிவாசன். ‘இன்றைய ஊடகம்’ என்கிற தலைப்பில் மாணவர்களுடன் கலந்துரையாடினார் ‘டைம்ஸ் நவ்’ செய்தித் தொலைக்காட்சி யின் துணை ஆசிரியர் ஷபீர் அகமது.

விகடன் மாணவப் பத்திரிகையாளர் திட்டம்... புறப்பட்டது புதிய படை!

‘சீரியஸ் டோனி’ல் இருந்த மாணவர்களை ‘சில்அவுட்’ செய் வதற்காகத் துள்ளலும் துடிப்பு மாக வந்திறங்கினார் பிரபுதேவா. மாணவர்களின் சரமாரிக் கேள்விகளுக்கு, அவரது ஆட்டத்தைப் போலவே பதில்கள் அநாயாசமாக வந்து விழுந்தன.

பயிற்சி பெற வந்திருந்த மாணவப் பத்திரிகையாளர்கள் ஏழு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, தலைமைச் செயலகம், மெட்ரோ ரயில் அலுவலகம், வானிலை மையம், அறப்போர் இயக்க அலுவலகம், ‘தமிழும் சரஸ்வதியும்’ சீரியல் படப் பிடிப்புத் தளம், பிராட்வே ஆகிய இடங்களுக்கும், நடிகையும் பா.ஜ.க தேசிய செயற்குழுவின் சிறப்பு அழைப்பாளருமான குஷ்புவைப் பேட்டி எடுக்க அவரது இல்லத்துக்கும் ‘ஸ்பாட் விசிட்’ சென்றது வித்தியாசமான அனுபவம்.

வீடியோ தயாரிப்பு, டேட்டா ஜர்னலிசம், தகவல் அறியும் உரிமை உட்பட பல்வேறு விஷயங்களைப் பற்றித் தெரிந்து கொண்ட மாணவப் பத்திரிகையாளர்கள், ‘இனி நாங்களும் களத்தில் இறங்கி கலக்கப்போறோம்’ என்கிற உற்சாகத்துடன் புறப்பட்டுச் சென்று, பட்டையைக் கிளப்பி வருகின்றனர்.