Published:Updated:

வொர்க் ஃப்ரம் ஹோம், ஆபீஸில் வேலை... உங்கள் சாய்ஸ் எது? வாசகர்களின் கலகல கமென்ட்ஸ்

I N T E R A C T I O N

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பிரீமியம் ஸ்டோரி

வொர்க் ஃப்ரம் ஹோம் அல்லது அலுவலகத் துக்கு நேரே சென்று பணிபுரிவது... உங்கள் சாய்ஸ் எது? அதற்கான காரணம் என்ன..?” என்று நாணயம் விகடன் ஃபேஸ்புக் (https://www.facebook.com/NaanayamVikatan) மற்றும் ட்விட்டர் (https://twitter.com/NaanayamVikatan) பக்கங்களில் கேட்டிருந்தோம். வாசகர் களும் தங்களது பதில்களைச் சுவாரஸ் யமாகப் பகிர்ந்திருந்தார்கள்.

“ஆபீஸ் போறதுதான் சிறப்பு. ஏன்னா, வொர்க் ஃப்ரம் ஹோம் நைட்டியோட போய்டுது. எடுத்து வைச்ச புது டிரெஸ் எல்லாம் 15 மாசமா அப்டியே இருக்கு. அத கட்றதுக்காகவே ஆபீஸ் போறது தான் சிறப்பு” அப்டின்னு சொல்லி அசத்தியிருக்காங்க வாணி. வித்தியாசமான திங்கிங் மேம்!

“வொர்க் ஃப்ரம் ஹோம்தான் சிறந்தது. காலை, மாலை நேரங்களில் பயண நேரம் சேமிக்கப்படும். சுடச் சுட வீட்டு உணவு சாப்பிடலாம். மாதம் 3,000 ரூபாய் பயணச் செலவு மிச்சம்”னு சொல்லிருக்காரு பிரசன்ன நாராயணசாமி. ஜமாய்ங்க ஜி!

வொர்க் ஃப்ரம் ஹோம், ஆபீஸில் வேலை... உங்கள் சாய்ஸ் எது? வாசகர்களின் கலகல கமென்ட்ஸ்

“எனது சாய்ஸ் வொர்க் ஃப்ரம் ஹோம்தான். ஏனென்றால், அவசர கதியாக அலுவலகம் சென்று வர வேண்டிய டென்ஷன் இல்லை. டிராஃபிக் தொல்லையிலிருந்தும் விடுதலை. தினமும் குடும்ப உறுப்பி னர்களுடன் அமர்ந்து உணவு உண்ணும் திருப்தியே தனி. வொர்க் ஃப்ரம் ஹோமில் ஒரு வேஷ்டி, டீசர்ட் அணிந்திருந்தே பணியை முடித்து விடலாம்”னு சொல்லிருக்காரு ஹரிஷ் நாராயண். 100% உண்மை போங்க...

“ஆபீஸ் போய் வேலை பார்ப்பது தான். ஏன்னா... கஸ்டப்பட்டு சம்பாதிக்கிற சுகமே தனி”னு கமென்ட் பண்ணிருக்காரு ராஜா அன்வர். வேலைன்னு வந்துட்டா இவரு வெள்ளைக்காரனா இருப்பாரு போல இருக்கே!

“நான் விரும்புவது வொர்க் ஃப்ரம் ஹோம்தான். காரணம், போக்கு வரத்து பெட்ரோல் செலவு மிச்சம். அலுவலகம் சென்றுவரும் நேரத்தை மிச்சம் செய்து, சிறுசிறு வீட்டு வேலைகளையும் அவ்வப்போது முடித்துக்கொள்ளலாம். குழந்தை களின் கல்வியிலும் கவனம் செலுத் தலாம். அதேபோல், தினமும் மூன்று வேளை வீட்டுச் சாப்பாட்டு ருசியே தனி”னு சொல்லிருக்காரு கிருஷ்ண குமார். சூப்பரு!

“வேலையிருந்தால் போதும் சார். எங்க வேணும்னாலும் வேலை செய்யத் தயார்”னு சொல்லிருக்காரு ஹரி. உழைப்பாளி!

“ஆபீஸ்தான் பெஸ்ட். ஏன்னா, விடுமுறை நாளாக இருந்தாலும் நெனச்ச நேரம் எல்லாம் மீட்டிங் மீட்டிங்கு’னு சும்மா வரச் சொல்லிட்டே இருப்பாங்க வொர்க் ஃப்ரம் ஹோம்ல! அதனால ஆபீஸ்தான் என் சாய்ஸ்”னு உண்மை யைப் பேசியிருக்காரு ரஞ்சித் குமார். WFH பரிதாபங்கள்!

“கண்ணுக்குள் விரலை விட்டு சுத்தாத ஊழியர்களுக்கு வொர்க் ஃப்ரம் ஹோம் சிறந்த ஒன்று”னு கமென்ட் பண்ணிருக்காரு சிவகார்த்திகேயன். அனுபவம் பேசுது..?!

“வொர்க் ஃப்ரம் ஹோம்தான் நல்லா இருக்கும். ஏன் தெரியுமா... நான் நினைக்கிற நேரம் எல்லாம் தூங்கிடுவேன்”னு சொல்லிருக்காரு எட்வின். ஆத்தீ!

“எனக்கு ஆபீஸ்தான் பெஸ்ட். வொர்க் ஃப்ரம் ஹோம்ல வீட்டு வேலையையும் சேர்த்துச் செய்யச் சொல்றாங்க”னு குமுறியிருக்காரு க்ரிஷ். டோன்ட் வொரி சார். சீக்கிரம் ஆபீஸ் ஓப்பன் பண்ணிடுவாங்க..!

“வாரத்துல மூணு நாள் வொர்க் ஃப்ரம் ஹோம். இரண்டு நாள் அலுவலகத்துக்குச் சென்று வேலை பார்க்குற மாதிரி இருந்தா நல்லா இருக்கும்”னு சொல்லிருக்காரு இளையராஜா. சார், நீங்க அமெரிக்காவுல இருக்க வேண்டிய ஆளு..!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு