Published:Updated:

ஓய்வூதியத்தை விரைவாகப் பெற ஐஆர்டிஏ செய்த மாற்றம்... இனி என்.பி.எஸ் பென்ஷன் ரொம்ப ஈஸி..!

 என்பிஎஸ் பென்ஷன்
News
என்பிஎஸ் பென்ஷன்

தற்போது காப்பீட்டு மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை ஆணையம் (ஐஆர்டிஏஐ) NPS நடைமுறையை எளிமைப்படுத்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி ஊழியரின் ஆதார் நம்பரை இணைத்து எளிமையான முறையில் படிவத்தை சமர்ப்பிக்க முடியும்.

ஓய்வூதியத்தை விரைவாகப் பெற ஐஆர்டிஏ செய்த மாற்றம்... இனி என்.பி.எஸ் பென்ஷன் ரொம்ப ஈஸி..!

தற்போது காப்பீட்டு மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை ஆணையம் (ஐஆர்டிஏஐ) NPS நடைமுறையை எளிமைப்படுத்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி ஊழியரின் ஆதார் நம்பரை இணைத்து எளிமையான முறையில் படிவத்தை சமர்ப்பிக்க முடியும்.

Published:Updated:
 என்பிஎஸ் பென்ஷன்
News
என்பிஎஸ் பென்ஷன்

ஓய்வூதியம் பெறுவதற்கு செய்யப்படும் முதலீடுகளில் என்பிஎஸ் (NPS) முதன்மையான திட்டமாக உள்ளது. அரசு அலுவலகங்களில் பணிபுரியும் பெரும்பாலான ஊழியர்கள் இந்தத் திட்டத்தில் உறுப்பினர்களாக உள்ளனர். வருமான வரிகளில் கூடுதல் சேமிப்பு என்.பி.எஸ் திட்டத்தில் செய்யப்படும் முதலீட்டுக்கு அளிக்கப்படுவதால் பல தனியார் துறை ஊழியர்களும் விரும்பி இந்தத் திட்டத்தில் சேர்ந்துள்ளனர்.

ஓய்வு
ஓய்வு

இந்தத் திட்டத்தில் சேர்ந்துள்ள ஊழியர்கள் பணியில் இருந்து ஓய்வு பெறும்போது தற்போதைய நடைமுறையில் இரண்டு படிவங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். அதன்படி முதல் படிவத்தில் என்.பி.எஸ் திட்டத்திலிருந்து வெளியேறும் படிவத்தையும், காப்பீட்டு நிறுவனத்திடம் ஓய்வூதியம் பெறுவதற்கு மற்றொரு படிவத்தையும் சமர்ப்பிக்க வேண்டும்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தற்போது காப்பீட்டு மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை ஆணையம் (ஐஆர்டிஏஐ) அந்த நடைமுறையை எளிமைப்படுத்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்தப் புதிய அறிவிப்பின்படி ஓய்வு பெறும் நபர் என்பிஎஸ் திட்டத்திலிருந்து வெளியேறும் படிவத்தை மட்டும் சமர்ப்பித்தால் போதும்.

 அந்தப் படிவத்தை வைத்து அந்த ஊழியரின் ஓய்வூதியம் குறிப்பிட்ட காப்பீட்டு நிறுவனத்திடம் வழங்கப்படும். மேலும் அந்த ஊழியரின் ஆதார் நம்பரை இணைத்து எளிமையான முறையில் படிவத்தை சமர்ப்பிக்க முடியும்.

பணி ஓய்வு
பணி ஓய்வு

தற்போது ஓய்வூதியம் பெரும் ஊழியர் என்.பி.எஸ் தொகுப்பில் முதலீடு செய்திருந்த மொத்தத் தொகையில் குறைந்தபட்சம் 40% ஓய்வூதியத்துக்கு ஒதுக்க வேண்டும். மீதித் தொகை ஊழியருக்கு  பணமாக வழங்கப்படும்.

தற்போதைய இந்த அறிவிப்பின்படி ஓய்வூதியம் பெறும் நடைமுறைகள் எளிமையாக்கப்பட்டுள்ளது. மேலும் ஓய்வூதியம் குறித்த தகவல்கள் டிஜிட்டல் முறையில் ஊழியர்கள் தரவிறக்கம் செய்யும் வசதியும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

 ஓய்வுக் காலத்தில் ஊழியர்கள் விரைவாக ஓய்வூதியம் பெறும் வகையில் நடைமுறையில் மாற்றத்தைக் கொண்டு வந்துள்ள ஐ.ஆர்.டி.ஏ.ஐ-ன் இந்தப் புதிய உத்தரவு வரவேற்கத்தக்கதாக அமைந்துள்ளது.