கார்ஸ்
பைக்ஸ்
Published:Updated:

கோவாவில் மட்டும்தான் நடக்கணுமா? - சென்னையில் பைக் திருவிழா நடத்திய பீஸ்ட் ரைடர்ஸ்!

பைக் கொண்டாட்டம்
பிரீமியம் ஸ்டோரி
News
பைக் கொண்டாட்டம்

நிகழ்ச்சி: பைக் கொண்டாட்டம்

- பிரபாகரன்

இன்றைக்கு பைக்குகளைக் கொண்டாடுகிறவர்கள் அதிகம். கிட்டத்தட்ட வீட்டில் வளர்க்கிற செல்லப் பிராணிகள் போல்தான் அவையும். ரேஷன் கார்டுல பேர் சேர்க்காதது மட்டும்தான் குறை. அப்படி பைக்குகளைக் கொண்டாடுபவர்கள் எல்லாம் ஒரே இடத்தில் சந்தித்துக் கொண்டால் அந்தத் திருவிழாவுக்குப் பேர்தான் Celebration of Biking.

`கோவாவில் மூன்று நாட்கள் கோலாகலமாக நடைபெறும் Indian Bike Week கொண்டாட்டம் சென்னையில் நடந்தால் எப்படி இருக்கும்’ என பீஸ்ட் ரைடர்ஸ் ஒருங்கிணைத்ததுதான் Clebration Of Biking திருவிழா. பைக்குகளைக் கொண்டாட ஒரு விழான்னா அங்க மோட்டார் விகடன் இல்லாமலா இருக்கும். ஆபிசியல் மீடியா பார்ட்னராக நாமும் கலந்து கொண்டோம்.

கோவாவில் மட்டும்தான் நடக்கணுமா? - சென்னையில் பைக் திருவிழா நடத்திய பீஸ்ட் ரைடர்ஸ்!

சென்னை MMRT ரேஸ் டிராக்கில் டிசம்பர் 11-ல் இந்த விழா நடைபெற்றது. தமிழ்நாடு மட்டுமில்லாமல், நமது பக்கத்து மாநிலங்களில் இருந்தும் கிட்டத்தட்ட 1500 பைக்கர்களுக்கு மேல் கலந்து கொண்டார்கள். நிச்சயம் இது பெரிய எண்ணிக்கைதான். இவர்களில் தமிழ்நாட்டில் இருந்து லடாக் போகும் இன்ஸ்டாகிராம் குரூப் தொடங்கி, காலங்காலமாக ஆல் இந்தியா முழுவதும் சுற்றிக் கொண்டிருக்கும் லெஜென்ட்ஸ் வரை அடக்கம்.

கோவாவில் இல்லாத, இங்க சென்னையில் நடந்த செலிப்ரேஷனின் ஹைலைட் என்னன்னா, ரேஸ் டிராக்கில் நடைபெற்ற ரைடுதான். இந்த விழாவில் கலந்து கொண்ட பைக்கர்கள், தங்களது சொந்த பைக்கிலேயே ரேஸ் டிராக்கில் ரைடு போகலாம். ரேஸ் ட்ராக்கில் எல்லோரும் ஓட்ட முடியாது. அதற்கென்று பிரத்யேகப் பயிற்சி பெற்றவர்கள் அதுவும் குறிப்பிட்ட வகை பைக்குகளில் மட்டுமே ஓட்ட முடியும். ஆனால், செலிப்ரேஷன் அன்றைக்கு ஸ்கூட்டி தொடங்கி RX100, ஹிமாலயன் வரை விதவிதமான வண்டிகளில் பைக்கர்கள் ரவுண்டு அடித்தார்கள். மொத்தம் 5 ரவுண்ட். பைக்கர்கள் அந்த ரைடை மகிழ்ச்சியோடு கொண்டாடித் தீர்த்தார்கள்.

கோவாவில் மட்டும்தான் நடக்கணுமா? - சென்னையில் பைக் திருவிழா நடத்திய பீஸ்ட் ரைடர்ஸ்!

பைக் உபகரணங்கள் தொடர்பான ஸ்டால்கள் ஏராளாமாக அமைக்கப்பட்டிருந்தன. கேஸ்ட்ரால் ஆயில் இந்த விழாவில் ஸ்பான்சர் என்பதால், அவர்களின் ஆயில் குறித்து விரிவாக விளக்கும் நிகழ்ச்சியும் இருந்தது. செலிப்ரிட்டீஸ், இன்ஃப்ளூயன்சர்ஸ் எனப் பலரும் கலந்து கொண்ட இந்த விழாவின் மற்றொரு சிறப்பம்சம், அன்றைக்கு மாலை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மியூசிக் ஃபெஸ்ட். விளக்குகள் மின்ன அதிர்ந்த இசையில் ஆட்டம் போடத் தவறவில்லை நமது பைக்கர்கள்.

ஒரு நாள் விழாவாக இருந்த போதும், சாப்பாட்டில் தொடங்கி ஏற்பாடு செய்யப்பட்ட ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் பீஸ்ட் ரைடர்ஸின் மெனக்கெடல் தெரிந்தது. ஆயிரக்கணக்கான பைக்குகள், பைக்கர்கள், பைக்கை நேசிப்பவர்கள் எனக் களை கட்டிய திருவிழா ஒரே நாளில் முடிந்தது கண்டு ஏமாற்றம் இருந்தாலும், உற்சாகத்தோடு தங்கள் ஊர்களுக்குப் புறப்பட்டனர் பங்கேற்பாளர்கள்.

கோவாவில் மட்டும்தான் நடக்கணுமா? - சென்னையில் பைக் திருவிழா நடத்திய பீஸ்ட் ரைடர்ஸ்!

இதில் கலந்து கொள்வதற்கு முன்பே பதிவு செய்ய வேண்டியது அவசியம். பைக்கர்களுக்கு ஸ்ட்ரிக்ட்டாகச் சொல்லப் பட்டிருந்த ரூல் என்னவென்றால் - பாதுகாப்புக் கவசங்கள், ரைடிங் கியர்ஸ் இல்லாமல் யாரும் வர வேண்டாம் என்பதே! பாதுகாப்பாகவும் கொண்டாட்ட மாகவும் திருவிழா முடிந்ததில் எல்லோருக்கும் மகிழ்ச்சியே. அடுத்த வருஷம் இன்னும் பிரம்மாண்டமாக இந்த விழா நடக்க, மோட்டார் விகடன் சார்பாக குழுவினருக்கு வாழ்த்துக்கள்.