Published:Updated:

அதானி விவகாரம்: செபிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு... என்ன காரணம்?

உச்ச நீதிமன்றம்

அதானி விவகாரத்தை விசாரிக்க உச்ச நீதிமன்றம் 6 பேர் கொண்ட குழுவை அமைப்பதற்கு முன்பே செபி தனது விசாரணையைத் தொடங்கியிருந்தது. எனில், அதானி விவகாரத்தில் குற்றச்சாட்டுகள் தொடர்பான ஆதாரங்களையும், ஆவணங்களையும் செபி கைப்பற்றியிருக்க அதிக வாய்ப்புள்ளது.

Published:Updated:

அதானி விவகாரம்: செபிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு... என்ன காரணம்?

அதானி விவகாரத்தை விசாரிக்க உச்ச நீதிமன்றம் 6 பேர் கொண்ட குழுவை அமைப்பதற்கு முன்பே செபி தனது விசாரணையைத் தொடங்கியிருந்தது. எனில், அதானி விவகாரத்தில் குற்றச்சாட்டுகள் தொடர்பான ஆதாரங்களையும், ஆவணங்களையும் செபி கைப்பற்றியிருக்க அதிக வாய்ப்புள்ளது.

உச்ச நீதிமன்றம்

அதானி மீதான குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணைக்கு மேலும் 6 மாத காலம் அவகாசம் வேண்டும் என்று கேட்ட செபிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பங்கு மோசடி, பண மோசடி என்று பல குற்றச்சாட்டுகளை உள்ளடக்கி அதானி குழுமத்தின் மீது ஹிண்டன்பர்க் நிறுவனம் பிப்ரவரியில் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. இந்த அறிக்கை பெரிய அளவில் பரபரப்பாகி அதானி குழுமப் பங்குகள் அனைத்தும் கடும் வீழ்ச்சியைச் சந்தித்தன. பங்குச் சந்தையும் கடுமையான சரிவைச் சந்திக்க நேர்ந்தது. முதலீட்டாளர்கள் பெரும் இழப்பை ஏற்படுத்தியதோடு, பல்வேறு சட்டவிரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்ட அதானி குழுமம் மீது செபி விசாரணை மேற்கொள்ள வேண்டுமென மார்ச் 2-ம் தேதி உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது.

செபி
செபி

இரண்டு மாதத்துக்குள் விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டுமென கூறப்பட்டிருந்த நிலையில், செபிக்கு வழங்கப்பட்ட இரண்டு மாத கால அவகாசம் முடிவடைந்தது. இந்நிலையில், உச்ச நீதிமன்றத்திடம் செபி தனது தரப்பு வாதத்தைப் பதிவு செய்தபோது, ``இதுவரையிலான விசாரணையில் அதானி குழும நிறுவனங்களில் மோசடி நடந்ததற்கான ஆதாரங்கள் கிடைக்கவில்லை. இந்த விவகாரத்தில் ஆதாரங்களைக் கண்டுபிடிப்பது கடினமான வேலை. இதற்கு இரண்டு மாத கால அவகாசம் போதாது. எனவே, 6 மாத கால அவகாசம் வேண்டும்" எனக் கூறியிருந்தது.

செபியின் இந்தக் கோரிக்கைக்கு எதிராக வழக்கறிஞர் விஷால் திவாரி என்பவர் பொது நல மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் அதானி விவகாரத்தை விசாரிக்க உச்ச நீதிமன்றம் 6 பேர் கொண்ட குழுவை அமைப்பதற்கு முன்பே செபி தனது விசாரணையைத் தொடங்கியிருந்தது. எனில், அதானி விவகாரத்தில் குற்றச்சாட்டுகள் தொடர்பான ஆதாரங்களையும் ஆவணங்களையும் செபி கைப்பற்றியிருக்க அதிக வாய்ப்புள்ளது. தற்போது அதானி நிறுவனம் பயனடையும் நோக்கத்தில் விசாரணையை நீண்டகாலத்துக்கு இழுக்க செபி முயற்சி செய்கிறது. எனவே, செபியின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் ஏற்கக் கூடாது" என்று மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

அதானி
அதானி

ஏற்கெனவே அதானி குழுமப் பங்குகள் அவற்றின் இறக்கத் திலிருந்து மீண்டுவிட்டன. இதற்கெல்லாம் மத்தியில் அதானி என்டர்பிரைசஸ் நான்காம் காலாண்டு முடிவுகளும் சிறப்பாகவே வந்திருக்கின்றன. அதன் நிகர லாபம் 137% உயர்ந்துள்ளது. மேலும் இந்நிறுவனத்தின் தகுதியான பங்குதாரர்களுக்கு ரூ.1.20 டிவிடெண்டும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அதானி விவகாரத்தில் முடிவு எப்படி இருக்கப்போகிறது என்பது தெரிய நீண்டகாலம் ஆகலாம். எதற்கும் அதானி பங்குகளில் முதலீட்டாளர்கள் கவனமுடன் இருப்பது நல்லது.