Published:Updated:

சரத்பவார் மகள் ரூ.74 லட்சத்துக்கு வாங்கிய அதானி பங்கு... ரூ.11 கோடியிலிருந்து ரூ.3 கோடியாக சரிவு!

கணவருடன் சுப்ரியா

சரத்பவார் மகள் சுப்ரியா சுலே அதானி நிறுவனத்தில் ரூ.74 லட்சத்துக்கு வாங்கிய பங்குகள் 3 ஆண்டில் ரூ.11 கோடியாக அதிகரித்தது. ஆனால், ஹிண்டன்பர்க் சர்ச்சையால் ரூ.3 கோடி ரூபாயாக சரிந்துவிட்டது.

Published:Updated:

சரத்பவார் மகள் ரூ.74 லட்சத்துக்கு வாங்கிய அதானி பங்கு... ரூ.11 கோடியிலிருந்து ரூ.3 கோடியாக சரிவு!

சரத்பவார் மகள் சுப்ரியா சுலே அதானி நிறுவனத்தில் ரூ.74 லட்சத்துக்கு வாங்கிய பங்குகள் 3 ஆண்டில் ரூ.11 கோடியாக அதிகரித்தது. ஆனால், ஹிண்டன்பர்க் சர்ச்சையால் ரூ.3 கோடி ரூபாயாக சரிந்துவிட்டது.

கணவருடன் சுப்ரியா

தொழிலதிபர் கௌதம் அதானியின் கம்பெனிகள் குறித்து அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் என்ற பொருளாதார ஆராய்ச்சி நிறுவனம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தது. அந்த அறிக்கையால் அதானி நிறுவன பங்குகள் கடுமையான சரிவை சந்தித்தன. அதானி தனது கம்பெனியின் பங்குகளின் விலையை செயற்கையாக அதிகரிக்கச் செய்வதாகவும், போலி கம்பெனி மூலம் பணமோசடி செய்திருப்பதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியிருக்கின்றன. அதோடு இப்புகார் குறித்து பாராளுமன்றக் கூட்டுக்குழு விசாரிக்க வேண்டும் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. ஆனால், மத்திய அரசு அதற்கு உடன்படவில்லை.

கௌதம் அதானி
கௌதம் அதானி

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரும் பாராளுமன்றக் கூட்டுக்குழு விசாரணை தேவையற்றது என்று குறிப்பிட்டு இருந்தார். அதானி நிறுவனத்தின் பங்குகளில் சரத்பவார் மகள் சுப்ரியா சுலேயும் பெருமளவு முதலீடு செய்திருந்தார். 2019-ம் ஆண்டு அதானி நிறுவனத்தின் ஆறு கம்பெனிகளில் 74.61 லட்சத்துக்கு பங்குகள் வாங்கி இருந்தார். இது தொடர்பாக சுப்ரியா சுலே தான் தேர்தலில் போட்டியிட்டபோது மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.

ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியாகும் முன்பு ,அதாவது கடந்த டிசம்பர் மாதம் சுப்ரியா சுலே வாங்கிய பங்குகளின் மதிப்பு ரூ.11.68 கோடியாக அதிகரித்தது. ஆனால், ஜனவரி மாதம் ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியான பிறகு, அதானி நிறுவனங்களின் பங்குகள் கடுமையான சரிவை சந்தித்தது. இதன் மூலம் சுப்ரியா சுலேயின் பங்குகள் மதிப்பு ரூ.2.84 கோடியாக சரிந்துள்ளது. 2014-ம் ஆண்டு சுப்ரியாவும், அவரின் கணவர் சதானந்த்தும் அதானியின் மூன்று நிறுவனங்களில் 21,000 பங்குகள் வாங்கி இருந்தனர். அவற்றின் மதிப்பு ரூ.1.85 லட்சமாகும்.

அம்ருதா பட்னாவிஸ்
அம்ருதா பட்னாவிஸ்

அதைத்தொடர்ந்து சுப்ரியாவும், அவரின் கணவரும் தொடர்ந்து 2019-ம் ஆண்டு வரை அதானியின் அனைத்து நிறுவனங்களிலும் பங்குகளை வாங்கினர். மொத்தம் 45,000 பங்குகள் வாங்கி இருந்தனர். இதே போன்று மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மனைவி அம்ருதா பட்னாவிஸும் அதானி போர்ட் நிறுவனத்தில் 2019-ம் ஆண்டுக்கு முன்பு 70 பங்குகள் வாங்கி இருந்தார். அப்போது அதன் மதிப்பு 46270 ரூபாயாகும். அம்ருதாவின் பங்குகளும் சரிவை சந்தித்துள்ளன.