Published:Updated:

இந்தியாவில் ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் முதலீடு செய்யும் அமேசான் வெப் சர்வீசஸ்..! நன்மைகள் என்ன?

அமேசான் வெப் சர்வீசஸ் | aws

மத்திய அரசின் digilocker, cowin செயலிகள் அமேசான் வெப் சர்வீசஸ் (AWS) தளத்தில் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. தற்போது அமேசான் இந்தியாவில் 2 டேட்டா சென்டர்கள் மட்டுமே இயங்கி வருகின்றன.

அமேசான் நிறுவனத்தின் துணை நிறுவனமான Amazon Web Services, (AWS), இந்தியாவில் கிளவுட் தொடர்பான உள்கட்டமைப்பில் 2030-க்குள் சுமார் 1,05,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.

அமேசான் வெப் சர்வீசஸ் நிறுவனமானது தனியார் நிறுவனங்கள், அரசு நிறுவனங்கள், மாநில அரசுகள், மத்திய அரசு என அனைத்து தரப்பு நிறுவனங்களுக்கும் தேவைக்கேற்ப கிளவுட் கம்ப்யூட்டிங் தளத்தை வழங்குகிறது.

இந்தியாவில் ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் முதலீடு செய்யும் அமேசான் வெப் சர்வீசஸ்..! நன்மைகள் என்ன?

கிளவுட் சேவைகளுக்கான வாடிக்கையாளர்களின் அதிகரித்து வரும் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த முதலீட்டை செய்கிறது. இந்த முதலீட்டின் மூலம் ஆண்டுதோறும் இந்தியாவில் சராசரியாக 1,31,700 முழுநேர வேலைவாய்ப்புகள் உருவாக்கும் என எதிர்பார்க்கின்றனர்.

மத்திய அரசின் digilocker, cowin செயலிகள் அமேசான் வெப் சர்வீசஸ் (AWS) தளத்தில் இணைக்கப்பட்டு செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. தற்போது அமேசான் இந்தியாவில் 2 டேட்டா சென்டர்கள் மட்டுமே இயங்கி வருகிறது. ஒன்று மும்பையிலும் மற்றொன்று ஹைதராபாத்திலும் உள்ளது. அமேசான் வெப் சர்வீசஸின் இந்த பெரிய முதலீடு இந்தியாவில் புதிய டேட்டா சென்டர்களை உருவாக்கப் பயன்படும்.

இது குறித்து, அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், ``கிளவுட் சேவைகளுக்கான வாடிக்கையாளர் தேவை இந்தியாவில் அதிகரித்து வருகிறது. இந்த தேவையைப் பூர்த்தி செய்யும் நோக்கில் 2030-க்குள் ரூ.1,05,600 கோடியை கிளவுட் கட்டமைப்புகளில் முதலீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் முதலீடு செய்யும் அமேசான் வெப் சர்வீசஸ்..! நன்மைகள் என்ன?

இது, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) ரூ.1,94,700 கோடி பங்களிப்பை வழங்கும். இந்தியாவில் டேட்டா சென்டர் உள்கட்டமைப்பில் மேற்கொள்ள திட்டமிடப்பட்ட இந்த முதலீட்டின் மூலம் ஒவ்வோர் ஆண்டும் வர்த்தக நடவடிக்கைகளில் சராசரியாக 1,31,700 பேருக்கு முழுநேர வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, கட்டுமானம், பராமரிப்பு, பொறியியல், தொலைத்தொடர்பு ஆகிய துறைகளில் இளைஞர்களுக்கு அதிக அளவில் வேலைவாய்ப்புகள் ஏற்படும்" எனத் தெரிவித்துள்ளது.