Published:Updated:

ஜிஎஸ்டி வருவாய்: ஆண்டுக்கு 13% வளர்ச்சி; மார்ச் 2023 மொத்த வசூல் ரூ.1,60,122 கோடி!

ஜி.எஸ்.டி

தொடர்ந்து 12 மாதங்களாக மாதாந்தர ஜிஎஸ்டி வருவாய் ரூ1.4 லட்சம் கோடிக்கு அதிகமாக வசூலாகியுள்ளது. ஜிஎஸ்டி தொடங்கப்பட்டதில் இருந்து 2வது முறையாக ரூ.1.6 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Published:Updated:

ஜிஎஸ்டி வருவாய்: ஆண்டுக்கு 13% வளர்ச்சி; மார்ச் 2023 மொத்த வசூல் ரூ.1,60,122 கோடி!

தொடர்ந்து 12 மாதங்களாக மாதாந்தர ஜிஎஸ்டி வருவாய் ரூ1.4 லட்சம் கோடிக்கு அதிகமாக வசூலாகியுள்ளது. ஜிஎஸ்டி தொடங்கப்பட்டதில் இருந்து 2வது முறையாக ரூ.1.6 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜி.எஸ்.டி

தொடர்ந்து 12 மாதங்களாக மாதாந்தர ஜி.எஸ்.டி வருவாய் ரூ1.4 லட்சம் கோடிக்கு அதிகமாக வசூலாகியுள்ளது. ஜிஎஸ்டி தொடங்கப்பட்டதில் இருந்து 2வது முறையாக ரூ.1.6 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. இது குறித்து மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  

Nirmala Sitharaman - மத்திய நிதி அமைச்சகம்.
Nirmala Sitharaman - மத்திய நிதி அமைச்சகம்.

2023 மார்ச் மாதத்தில் மொத்த ஜி.எஸ்.டி வருவாய் ரூ.1,60,122 கோடி வசூலாகியுள்ளது. இதில் சிஜிஎஸ்டி ரூ.29,546 கோடி, எஸ்ஜிஎஸ்டி ரூ.37,314 கோடி, பொருள்களின் இறக்குமதியில் வசூலான ரூ.42,503 கோடி உட்பட ஐஜிஎஸ்டி ரூ.82,907 கோடி மற்றும் பொருள்களின் இறக்குமதியில் வசூலான ரூ.960 கோடி உட்பட செஸ் வருவாய் ரூ.10,355 கோடி ஆகும்.

நடப்பு நிதியாண்டில் நான்காவது முறையாக மொத்த ஜி.எஸ்.டி வசூல் ரூ.1.5 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது. ஜிஎஸ்டி அமலுக்கு வந்ததில் இருந்து இரண்டாவது அதிகபட்ச வசூலை பதிவு செய்துள்ளது. இந்த மாதம் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக ஐஜிஎஸ்டி வசூலைக் கண்டுள்ளது.

ஐஜிஎஸ்டியிலிருந்து சிஜிஎஸ்டிக்கு ரூ.33,408 கோடியும், எஸ்ஜிஎஸ்டிக்கு ரூ.28,187 கோடியும் வழக்கமான தீர்வாக அரசு வழங்கியுள்ளது. தீர்வுக்குப் பிறகு மார்ச் 2023-ல் மத்திய மற்றும் மாநிலங்களின் மொத்த வருவாய் சிஜிஎஸ்டிக்கு ரூ.62,954 கோடியும், எஸ்ஜிஎஸ்டிக்கு ரூ.65,501 கோடியும் ஆகும்.

2023 மார்ச் மாதத்துக்கான வருவாய் கடந்த ஆண்டு இதே மாதத்தில் ஜிஎஸ்டி வருவாயைவிட 13% அதிகமாகும். மார்ச் 2023-ல் ரிட்டர்ன் தாக்கல் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமாக உள்ளது.

ஜி.எஸ்.டி
ஜி.எஸ்.டி

2022-23-ம் ஆண்டுக்கான மொத்த வசூல் ரூ.18.10 லட்சம் கோடியாகவும், முழு ஆண்டுக்கான சராசரி மொத்த மாத வசூல் ரூ.1.51 லட்சம் கோடியாகவும் உள்ளது. 2022-23-ல் மொத்த வருவாய் கடந்த ஆண்டைவிட 22% அதிகமாகும்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கடந்த ஆண்டு மார்ச் மாதம் ரூ. 8,023 கோடி வசூலாகியிருந்தது. இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இது ரூ.9,245 கோடியாக உயர்ந்துள்ளது. வளர்ச்சி 15.24% ஆகும்.

புதுச்சேரி கடந்த ஆண்டின் மார்ச் மாத வசூலான ரூ.163 கோடியைவிட, இந்த ஆண்டு மார்ச் மாதம்  ரூ.204 கோடி வசூலாகியுள்ளது. இது 24.78% அதிகமாகும் என்று தெரிவித்துள்ளது.