Published:Updated:

``ரூ.20,000 கோடி முதலீட்டுடன் தொழில்துறை அமைச்சர் பதவி ஏற்பு" - டி.ஆர்.பி.ராஜாவை புகழ்ந்த முதல்வர்!

தமிழ்நாடு அரசு - ஹுண்டாய் ஒப்பந்தம்

ஹூண்டாய் நிறுவனம் 2032-ம் ஆண்டு வரையில் ரூ.20,000 கோடி முதலீட்டில் தமிழ்நாட்டில் மின்சார வாகனங்களை உற்பத்தி செய்ய உள்ளது. மேலும், அடுத்த 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் 33 நகரங்களில் 100 சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்போவதாகவும் கூறியுள்ளது.

Published:Updated:

``ரூ.20,000 கோடி முதலீட்டுடன் தொழில்துறை அமைச்சர் பதவி ஏற்பு" - டி.ஆர்.பி.ராஜாவை புகழ்ந்த முதல்வர்!

ஹூண்டாய் நிறுவனம் 2032-ம் ஆண்டு வரையில் ரூ.20,000 கோடி முதலீட்டில் தமிழ்நாட்டில் மின்சார வாகனங்களை உற்பத்தி செய்ய உள்ளது. மேலும், அடுத்த 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் 33 நகரங்களில் 100 சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்போவதாகவும் கூறியுள்ளது.

தமிழ்நாடு அரசு - ஹுண்டாய் ஒப்பந்தம்

தமிழ்நாடு அமைச்சரவை மாற்றப்பட்டதுதான் இன்றைய ஹாட் டாபிக். கடந்த சில வாரங்களாகவே அமைச்சரவை மாற்றம் குறித்த பேச்சுகள் அடிபட்டுவந்தது. குறிப்பாக, நிதியமைச்சராக இருந்த பழனிவேல் தியாகராஜனின் ஆடியோ கிளப்பிய சர்ச்சைக்குப் பிறகு, அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படுவ தாகப் பேச்சுகள் இருந்தன. இந்நிலையில் அமைச்சரவையில் மாற்றம் செய்வதற்கான ஒப்புதலை ஆளுநர் வழங்கியதாகத் தகவல் வெளியானது.

முதல்வர் ஸ்டாலின் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சி.வி.கணேசன்
முதல்வர் ஸ்டாலின் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சி.வி.கணேசன்

அந்தத் தகவலில் பால்வளத்துறை அமைச்சர் நாசரை அமைச்சரவையிலிருந்து நீக்கிவிட்டு, டி.ஆர்.பாலுவின் மகன் டி.ஆர்.பி.ராஜாவை அமைச்சரவையில் சேர்க்க இருப்பதாகக் கூறப்பட்டது. அதன்படி ராஜ் பவனில் இன்று காலை 10.30 மணிக்கு இலக்கா மாற்றப்பட்ட அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.

மிகவும் பாராட்டப்பட்டு வந்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் நிதித்துறை, அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு மாற்றப்பட்டிருக்கிறது. இதனால் தங்கம் தென்னரசு வசம் இருந்த தொழில்துறை, புதிதாக அமைச்சரவையில் சேர்ந்துள்ள டி.ஆர்.பி.ராஜாவுக்கு ஒதுக்கப்பட்டது. அமைச்சர் மனோ தங்கராஜ் வசம் இருந்த தகவல் தொழில்நுட்பத்துறை பழனிவேல் தியாகராஜனுக்கு மாற்றப்பட்டது. நாசர் கவனித்து வந்த பால்வளத்துறை மனோ தங்கராஜுக்கு ஒதுக்கப்பட்டது.

புதிய இலக்காக்களுக்குப் பதவி ஏற்றுக்கொண்ட அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, டி.ஆர்.பி.ராஜா பதவியேற்ற கையோடு ஹுண்டாய் நிறுவனத்துடன் ரூ.20,000 கோடி முதலீடுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்திட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் ஹூண்டாய் மோட்டர் நிறுவனம் கடந்த 27 ஆண்டுகளாக கார் உற்பத்தியை மேற்கொண்டுவருகிறது. இந்நிலையில், தற்போது மின்சார வாகனங்கள் உற்பத்திக்காக ரூ.20,000 கோடி நீண்டகால அடிப்படையில் முதலீடு செய்வதற்கான தொழில் ஒப்பந்தத்தை தமிழ்நாடு அரசுடன் ஹூண்டாய் நிறுவனம் மேற்கொண்டுள்ளது. இதற்கான செய்தியாளர்கள் சந்திப்பில் முதல் அமைச்சர் ஸ்டாலின், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, டி.ஆர்.பி.ராஜா ஆகியோர் கலந்துகொண்டனர்.

``ரூ.20,000 கோடி முதலீட்டுடன் தொழில்துறை அமைச்சர் பதவி ஏற்பு" - டி.ஆர்.பி.ராஜாவை புகழ்ந்த முதல்வர்!

அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின், ``புதிதாகத் தொழில்துறை அமைச்சர் பதவியை ஏற்றுள்ள டி.ஆர்.பி.ராஜா முதல் நாளே ரூ.20,000 கோடி முதலீட்டை தமிழ்நாட்டுக்குக் கொண்டு வந்திருக்கிறார். அவருக்குப் பாராட்டுகள். தலைவர் கலைஞர் தமிழ்நாட்டில் ஹூண்டாய் நிறுவனத்தின் தொழிற்சாலை அமைய 1996 டிசம்பரில் அடிக்கல் நாட்டினார்.

அதன்பிறகு இரண்டாவது தொழிற்சாலையையும் கலைஞர் 2008-ல் தொடங்கி வைத்தார். ஹூண்டாய் நிறுவனத்தின் 1 கோடியாவது காரை 2021-ல் முதலமைச்சராக நான் அறிமுகப்படுத்தி வைத்தேன். அந்த வகையில் ஹூண்டாய் நிறுவனத்துக்கும் தமிழ்நாடு அரசுக்கும் நீண்டகால தொழில் வர்த்தக உறவு இருந்துவருகிறது.

தமிழ்நாட்டை தொழில்துறையின் முன்னிலை மாநிலமாகவும், தொழில் செய்வதற்கும் முதலீடு செய்வதற்கும் முன்னிலை மாநிலமாகவும் மாற்றுவதற்காக எடுக்கப்பட்ட தொடர்ச்சியான முயற்சிகளால்தான் தொடர்ந்து நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடுகளைக் குவித்து வரக் காரணம். தொடர்ந்து தமிழ்நாடு அரசு தொழில்துறை வளர்ச்சிக்காகப் பாடுபடும்" என்று பேசினார்.

ஹூண்டாய்
ஹூண்டாய்

ஹூண்டாய் நிறுவனம் 2032-ம் ஆண்டு வரையில் ரூ.20,000 கோடி முதலீட்டில் தமிழ்நாட்டில் மின்சார வாகனங்களை உற்பத்தி செய்ய உள்ளது. மேலும், அடுத்த 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் 33 நகரங்களில் 100 சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப் போவதாகவும் கூறியுள்ளது. பேட்டரி அசெம்பளிக்கான தொழிற்சாலையையும் நிறுவத் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.