நடப்பு
பங்குச் சந்தை
தொடர்கள்
Published:Updated:

பெண்கள், குழந்தைகளுக்கும் லுங்கி... ஏற்றுமதியில் அசத்தும் காஞ்சிபுரம் தொழிலதிபர்!

முத்துக்குமரன்
பிரீமியம் ஸ்டோரி
News
முத்துக்குமரன்

‘‘மலேசியா, இலங்கை, மியான்மர் நாடுகள்ல ஆண்கள், அலுவலகம் மற்றும் வெளிநிகழ்ச்சிகளுக்குப் போகும்போதுகூட லுங்கியை உடுத்துறாங்க...’’

காஞ்சிபுரம் என்றாலே பட்டுப்புடவைதான் பலருக்கும் நினைவுக்கு வரும். ஆனால், பட்டு நகரத்தில் லுங்கி வர்த்தகத்தைப் பிரபலப்படுத்தி வருகிறார் முத்துக்குமரன். இவரின் ‘வீரா எக்ஸ்போர்ட்ஸ்’ நிறுவனத்தின் மூலமாகப் பல நாடுகளுக்கும் லுங்கிகள் ஏற்றுமதி ஆகின்றன. ஆண்களுக்கான லுங்கிகள் மட்டுமன்றி, குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான லுங்கிகள், சுருங்காத லுங்கிகள் எனக் கவனம் ஈர்க்கும் உத்திகளுடன் தொழிலை வளர்த்தெடுக்கும் முத்துக்குமரனை சந்தித்தோம்.

முத்துக்குமரன்
முத்துக்குமரன்

“தமிழகத்துல ஆரணி, இளம்பிள்ளை, பல்லடம் மாதிரியான பல பகுதிகள்ல பட்டுப்புடவைகள் தயாரிக் கப்பட்டாலும், காஞ்சிபுரத் தைதான் பட்டு நெசவுக்கு அடையாளமா சொல்வாங்க. ஏன்னா, இந்தப் பகுதியிலதான் பட்டு நெசவுக் கூடங்கள் அதிக அளவுல இருக்கு. அது போல, நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம், பள்ளிப் பாளையம் பகுதிகள்ல விசைத்தறிக் கூடங்கள் அதிக அளவுல இருக்கிறதால, லுங்கிக்கான கேந்திரமா அந்தப் பகுதிகளைச் சொல் வாங்க.

அதே நேரம், காஞ்சிபுரம் சுற்றுவட்டாரப் பகுதிகள்ல லுங்கி உற்பத்தி அதிகமா நீண்ட காலமாவே நடந்துகிட்டிருக்கு. இந்தச் சூழலைப் பயன்படுத்தி, 1950-கள்ல லுங்கி வியாபாரத்தை ஆரம் பிச்சார் என் தாத்தா. அவர் காலத்துல கைத்தறிகள் மூலமா லுங்கிகள் உற்பத்தி செய்யப்பட்டன. அவரைத் தொடர்ந்து எங்கப்பாவும் எங்க குடும்பத் தொழிலுக்கு வந்தார். அவர் காலத்துல கைத்தறிகள் மூலமா லுங்கி உற்பத்தி குறைய ஆரம்பிச்சு, விசைத்தறிகளின் பயன்பாடு அதிகரிச்சது.

காஞ்சிபுரம் சுற்றுவட்டார விசைத்தறித் தொழிலாளர் களை நம்பிதான் இப்பவரைக் கும் நாங்க வர்த்தகம் பண் றோம். ஆனா, என் தாத்தாவும் அப்பாவும் சென்னையில இருந்தபடியேதான் இந்தத் தொழிலை நடத்தினாங்க. சென்னையில வளர்ந்த நான், காலேஜ் முடிச்சதும் 1998-ல் குடும்பத் தொழிலை நிர்வகிக்க ஆரம்பிச்சேன். உற்பத்தி மற்றும் விற்பனை வேலைகளை விரைவுபடுத்த, எங்க நிறுவனத்தைக் காஞ்சி புரத்துக்கு நான் மாத்தினேன்.

‘நாயக்’ என்ற பிராண்டு பெயர்ல உள்நாட்டுல அதிகமா விற்பனையான எங்க நிறுவனத்தின் லுங்கிகள், ஓமன் நாட்டுக்கு மட்டும் அப்போ ஏற்றுமதி செய்யப் பட்டுச்சு. தொழிலை விரிவு படுத்துற முயற்சியில பல நாடுகளுக்கும் வர்த்தகம் செய்ய ஆரம்பிச்சேன்” என் பவர், இலங்கை, சிங்கப்பூர், துபாய், மலேசியா, மியான்மர், இந்தோனேசியா ஆகிய நாடுகளுக்கு லுங்கிகளை ஏற்றுமதி செய்கிறார்.

ஆடவருக்கான ஆடையாகவே இருந்துவந்த லுங்கி களை, குழந்தைகள் மற்றும் பெண்களுக்கானதாகவும் மாற்றியிருக்கும் முத்துக்குமரன், இந்த நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாகவும், தலைமை வடிவமைப்பாளராகவும் இருக்கிறார். நிறுவனத்தின் வளர்ச்சிக்குக் கைகொடுத்த செயல்பாடுகள் குறித்து சொன்னவர், பேக்கிங் யூனிட்டையும் சுற்றிக் காட்டினார்.

“உற்பத்தியை அதிகரிக்கிறதும் வருமானத்தை அதிகப்படுத்துறதும் மட்டுமே ஒரு நிறுவனத்தின் வளர்ச்சிக்கு உதவாது. வருங்காலத் தேவையை உணர்ந்து புதுப்புது முயற்சிகளை மேற்கொள்ளணும். அந்த வகையில, நான் பிசினஸுக்கு வந்த புதுசுலயே 4 – 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கான பிரத்யேக லுங்கிகளைத் தயாரிக்க ஆரம்பிச்சோம். காற்றோட்ட வசதியுடன்கூடிய இலகுவான ஆடை யான லுங்கி, இந்தியா மாதிரியான வெப்பப் பிரதேச நாடுகளுக்கு ரொம்பவே ஏற்றது. நம்ம நாட்டு மக்கள் தொகைக்கேற்ப, இன்னும் வெகுஜன மக்கள்கிட்ட லுங்கி பயன்பாடு போய் சேரலை. அதுக்கான பல காரணங்கள்ல, இந்திய உற்பத்தியாளர்கள் டிசைனிங் விஷயத்துல கூடுதல் கவனம் கொடுக்காமவிட்டதும் முக்கியமா பார்க்கப்படுது.

நம்மூர்கள்ல ‘செக்கிடு டிசைன்’ லுங்கிகள்தான் ரொம்ப காலமா அதிக அளவுல பயன்படுத்தப்படுது. வெரைட்டியை விரும்புற இளைய தலைமுறையினருக்கு, லுங்கி மீதான விருப்பம் குறையுறதும் அல்லது வேறு கண்கவர் ஆடைகள் மீது ஆர்வம் போறதும் இயல்பானதுதானே? இந்த விஷயத்தை உணர்ந்து, நிறைய டிசைன்கள்ல, நிறங்கள்ல லுங்கி களை வடிவமைச்சோம். விற்பனை மிகவும் அதிகரிச்சது. நான் வர்த்தக விஷயமா மலேசியா, இலங்கை, மியான்மர் நாடுகளுக்கு அடிக்கடி போவேன். அந்த நாடுகள்ல நிறைய ஆண்கள் அலுவலகம் மற்றும் வெளிநிகழ்ச்சிகளுக்குப் போகும்போதுகூட லுங்கியை உடுத்துறது ஆச்சர்யத்தைக் கொடுத்துச்சு. அங்கெல்லாம் பெண்கள் பலரும் லுங்கியைப் பயன்படுத்துறதும் எனக்குத் திகைப்பா இருந்துச்சு. அதன் பிறகுதான் பெண்களுக்கான லுங்கிகளையும் தயாரிக்க ஆரம்பிச்சோம்.

பெண்கள், குழந்தைகளுக்கும் லுங்கி... ஏற்றுமதியில் அசத்தும்
காஞ்சிபுரம் தொழிலதிபர்!

லுங்கியைத் தண்ணியில போட்டதும் சுருங்கிடுதுனு பலர் சொல்றதுண்டு. இதுக்குத் தீர்வா சுருங்காத லுங்கிகளை அறிமுகப்படுத்தினோம்.அதுக்கும் வரவேற்பு கூடியிருக்கு. வடிவமைப்பு, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, புதுமையான ஐடியாக்கள் போன்றவை எங்க நிறுவனத்துக்கு சிறப்பான வளர்ச்சியைத் தந்திருக்கு. எங்ககிட்ட சொந்தமா விசைத்தறிகள் அதிகம் இல்லாட்டியும், ‘ஜாப் ஆர்டர்’ முறையில் நிறைய விசைத்தறித் தொழிலாளர்கள் எங்களுக்கு மட்டுமே லுங்கிகளைத் தயாரிச்சு தர்றாங்க.

25 வருஷங்களுக்குமுன் வருஷத்துக்கு 45,000 லுங்கிகளை உற்பத்தி செஞ்சோம். இப்ப வருஷத் துக்கு 12 லட்சம் லுங்கிகளை உற்பத்தி பண்ற அளவுக்கு வர்த்தகம் அதிகரிச்சிருக்கு. எங்களுக்கும் சவால்கள் வராம இல்லை. உற்பத்தியில இருந்து விற்பனை வரைக்கும் நிறைய சிக்கல்களைப் பார்த்திருக்கோம். பிசினஸ்ல வெற்றிங்கிறது நீண்டகால வளர்ச்சியைச் சார்ந்தது. எதிர்கால இலக்குக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக் கிறதால, சின்னச் சின்ன இடர்ப்பாடுகளை எல்லாம் விரைவா சமாளிச்சுடுவோம்” என்கிற முத்துக்குமரனின் நிறுவனத்தில் லுங்கி தவிர, கர்சீஃப் உற்பத்தியும் நடை பெறுகிறது. நூற்றுக்கும் அதிகமா னோருக்கு வேலை வாய்ப்பு தருபவர், ஆண்டுக்கு 20 கோடி க்கும் அதிகமாக வர்த்தகம் செய்கிறார்.

“இந்தத் தொழில் சரியா வரும்... சரியா வராதுனு யார் எது வேணாலும் சொல்லலாம். ஆனா, விற்பனைக்கான சந்தை நிலவரத்தைப் பத்தியும், எதிர்கால வளர்ச்சி வாய்ப்புகள் பத்தியும் கணித்து, எல்லா விதத்துலயும் இந்தத் தொழில் நமக்கு சரிவரு மான்னு பார்த்து ஆரம்பிக்கிற தொழில் எதுவானாலும் நிச்ச யமா வெற்றியைத் தரும்.

அது போல, இந்தியால மட்டு மன்றி, இலங்கை, மலேசியா, துபாய், மியான்மர் போன்ற நாடுகள்ல நம்மூர் லுங்கிகளுக்கு அதிகமான வரவேற்பு இருக்கு. இந்த வர்த்தக வாய்ப்புகளைச் சரியா பயன்படுத்திக்கிட்டா, இந்தியாவுல லுங்கி உற்பத்தி கணிசமா உயரும். 20 வருஷங் களுக்கு முன்பு வரைக்கும், இந்தியால இருந்து வெளிநாடு களுக்கு லுங்கி ஏற்றுமதி செய்யுறப்ப 16% அரசு மானியம் கிடைச்சது. அந்த அளவு ரொம்பவே குறைஞ்சு இப்ப வெறும் 2% மானியம் மட்டுமே கிடைக்குது. லுங்கி ஏற்றுமதிக்கு அரசாங்கம் கூடுதல் சலுகை களையும் ஊக்கத்தையும் கொடுத்தா, பின்னலாடைத் தொழிலைப் போலவே விசைத் தறி தொழில் மூலமாவும் இந்தியா வுக்கு அந்நியச் செலாவணி வெகுவாக அதிகரிக்கும்” என்று கள நிலவரங்களைச் சொல்லி முடித்தார் முத்துக்குமரன்.

படங்கள்: ரா.ஹேமந்த் ராஜ்