Published:Updated:

நெருங்கும் கர்நாடக சட்டமன்றத் தேர்தல்... சர்ச்சையில் சிக்கிய நந்தினி - அமுல்!

சர்ச்சையில் சிக்கிய நந்தினி - அமுல்!

வருகிற மே 10-ம் தேதி அன்று கர்நாடகா சட்டமன்றத் தேர்தல் நடத்தப் போகிறது. வழக்கமாக கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் (காவிரி) தண்ணீர்தான் சர்ச்சை ஆகும். இந்த முறை பால் சர்ச்சையாகிவிட்டது!

Published:Updated:

நெருங்கும் கர்நாடக சட்டமன்றத் தேர்தல்... சர்ச்சையில் சிக்கிய நந்தினி - அமுல்!

வருகிற மே 10-ம் தேதி அன்று கர்நாடகா சட்டமன்றத் தேர்தல் நடத்தப் போகிறது. வழக்கமாக கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் (காவிரி) தண்ணீர்தான் சர்ச்சை ஆகும். இந்த முறை பால் சர்ச்சையாகிவிட்டது!

சர்ச்சையில் சிக்கிய நந்தினி - அமுல்!

வருகிற மே 10-ம் தேதி அன்று கர்நாடகா சட்டமன்றத் தேர்தல் நடத்தப் போகிறது. பா.ஜ.கவும், காங்கிரஸும் நேருக்கு நேர் மோதுவதால், அங்கு யார் ஜெயிப்பார்கள் என்கிற கேள்விக்குத் தெளிவில்லாத பதிலே இருக்கிறது.

அனல் பறக்கும் பிரச்சாரம் நடந்துவரும் வேளையில், இரு நிறுவனங்கள் சர்ச்சை சிக்கலில் சிக்கியுள்ளன. இந்த இரண்டுமே பால் சம்பந்தமான நிறுவனங்கள் என்பதால், பலரும் பேசக்கூடிய பிரச்னையாக மாறியுள்ளது.

நெருங்கும் கர்நாடக சட்டமன்றத் தேர்தல்... சர்ச்சையில் சிக்கிய நந்தினி - அமுல்!

குஜராத் கோஆப்ரேட்டிவ் மில்க் மார்கெட்டிங் பெடரேஷன் (GCMMF) என்பது நம் நாட்டின் மிகப் பெரிய பால் கூட்டுறவு அமைப்பு. இந்தக் கூட்டுறவு அமைப்பு இந்தியாவில் `அமுல்’ என்கிற பிராண்ட் பெயரில் செயல்பட்டு வருகிறது.

மறுபுறம் கர்நாடகாவின் மாநில பால் உற்பத்தி நிறுவனமான கர்நாடக கோஆப்ரேட்டிவ் மில்க் புரொட்யூசர்ஸ் பெடரேஷன். `நந்தினி’ என்கிற பெயரில் இந்தக் கூட்டுறவு சங்கம் பால் விற்பனை செய்து வருகிறது. நம்மூரில் `ஆவின்’ போல, கர்நாடகாவில் `நந்தினி’.

இவ்விரு நிறுவனங்களுமே பால் உற்பத்தி மற்றும் விநியோகத்தில் தங்களுக்கென்ற முத்திரையைப் பதித்து செயல்பட்டுவரும் நிலையில், கடந்த சில நாட்களாக நந்தினிக்கும் அமுலுக்கும் கர்நாடகாவில் பெரும்போட்டி நிலவி வருகிறது.

கர்நாடக மாநில பால் அமைப்பான `நந்தினி’யை முடக்கத்தான் `அமுல்’ அங்கு செயல்படுத்தப்பட்டு வருகிறது என்ற கருத்தை பலரும் முன்வைத்துப் பேசி வருகிறார்கள். இந்திய அளவில் விநியோக ரீதியாகவும், பால் உற்பத்தியாளர்கள் எண்ணிக்கையிலும் `அமுல்’ நிறுவனமே முன்னணியில் இருந்தாலும், கர்நாடக பால் உற்பத்தியில் முதலிடம் பிடிப்பது `நந்தினி’யே.

இதற்கு முக்கியமான காரணம், பால் மற்றும் பால் சார்ந்த பொருள்கள் `அமுல்’ நிறுவனத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கையில், `நந்தினி’ பிராண்ட் பால் குறைந்த விலையில் விற்பனை செய்யப் படுகிறது.

நந்தினி பால்
நந்தினி பால்

உதாரணமாக, ஒரு லிட்டர் ‘அமூல்’ பாலின் விலை அமுலில் 54 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் நிலையில், `நந்தினி’ பிராண்ட் பால் 43 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், `அமூல்’ ஒரு லிட்டர் ஃபுல் கிரீம் பால் 66 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் நிலையில், `நந்தினி’யில் ரூபாய் 55-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஒரு லிட்டர் தயிரின் விலை அமுலில் 75 ரூபாய்; ஆனால், நந்தினியில் ரூபாய் 47 மட்டுமே.

நந்தினியின் இந்தக் குறைந்த விலைக்குக் காரணம், அந்த மாநிலத்தின் பால் உற்பத்தியாளர்களுக்கான மானியம்தான். 1974-ல் உலக வங்கியின் நிதியுதவியில் தொடங்கப்பட்ட கே.எம்.எஃப், 2008-ல் முதல்முறையாக அதன் மானியத்தில் லிட்டருக்கு 2 ரூபாய் என்ற அடிப்படையில் வழங்க ஆரம்பித்தது. இன்று, அந்த மானியத் திட்டத்தின்கீழ் மானியம் 6 ரூபாயாக உயர்ந்துள்ளது. இந்தக் காரணத்தாலேயே `நந்தினி’யின் தயாரிப்புகள் கர்நாடகாவில் அதிக விற்பனைக்கு உள்ளாகின்றன.

இந்த நிலையில், `நந்தினி’யை முடக்க `அமுல்’ பிராண்டை குஜராத்தில் இருந்து கொண்டுவருகிறார்கள் என்று யாரோ கொளுத்திப்போட, அந்த வெடி பா.ஜ.க தரப்பினரை வெகுவாக காயப்படுத்தி இருக்கிறது. இது குறித்து வெளிப்படையாகவே பேசினார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். ``இது கர்நாடகாவில் நடக்கவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை நோக்கிய அரசியல் சூழ்ச்சி. இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலத்துக்கும் அதன் சொந்த பால் கூட்டுறவு உள்ளது போல், கர்நாடகாவின் நந்தினி நன்கு அறியப்பட்ட மற்றும் மரியாதைக்குரிய நிறுவனம்.

நந்தினி பால்
நந்தினி பால்

நான் டெல்லியில் உள்ளபோது என்னால் நந்தினியின் பொருள்களை வாங்க முடியாது. அதற்காக நான் கர்நாடகாவை எதிர்க்கிறேன் என்று கூற முடியாது. ஆரோக்கியமான போட்டி என்பது நம் நாட்டுக்கு அவசியமானது. அதனால்தான் உலகின் மிகப் பெரிய பால் உற்பத்தியாளர்களாக இந்தியா உருவெடுத்துள்ளது. பால் உற்பத்தியைச் சுற்றிய அரசியல் கருத்துகளை உருவாக்குவதைவிட, இந்தியாவை வலுப்படுத்தும் முயற்சியில் நாம் கவனம் செலுத்த வேண்டும்’’ என்று பேசினார் நிதியமைச்சர். 

தேர்தல் பிரசாரத்தில் அமுல் - நந்தினி சர்ச்சைக்கு உள்ளாக்கப்பட்டு இருந்தாலும், கர்நாடகாவின் விவசாயிகளுக்கும் பால் உற்பத்தியாளர்களுக்கும் `நந்தினி’ மிகப் பெரிய வரப்பிரசாதமாக இருக்கிறது என்பதே உண்மை. வழக்கமாக கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் (காவிரி) தண்ணீர்தான் சர்ச்சை ஆகும். இந்த முறை பால் சர்ச்சையாகிவிட்டது!