Published:Updated:

60 ஆண்டுகளுக்குப் பின் முதன்முறையாக லோகோவை மாற்றிய நோக்கியா... CEO கூறும் காரணம்!

நோக்கியாவின் புதிய லோகோ!

வாடிக்கையாளர்களின் தேவைகளை அறிந்து அதை ஈடுகட்ட முடியாததாலும், தொலைத்தொடர்பு உலகில் ஏற்பட்ட கடுமையான போட்டியைச் சமாளிக்க முடியாமல் போனதாலும் நோக்கியா தடுமாறிச் சரிந்தது.

Published:Updated:

60 ஆண்டுகளுக்குப் பின் முதன்முறையாக லோகோவை மாற்றிய நோக்கியா... CEO கூறும் காரணம்!

வாடிக்கையாளர்களின் தேவைகளை அறிந்து அதை ஈடுகட்ட முடியாததாலும், தொலைத்தொடர்பு உலகில் ஏற்பட்ட கடுமையான போட்டியைச் சமாளிக்க முடியாமல் போனதாலும் நோக்கியா தடுமாறிச் சரிந்தது.

நோக்கியாவின் புதிய லோகோ!

கை தொலைபேசிகள் அறிமுகமான காலத்தில், பெரும்பாலானவர்களின் வீட்டில் நோக்கியா மொபைல் போன்களே ஆக்கிரமித்து இருந்தன. போட்டிபோட்டுக்கொண்டு நோக்கியா மொபைல் போன்களை மக்கள் வாங்க ஆரம்பித்தனர். `கண்ணும் கண்ணும் நோக்கியா’ என பாடல் வரிகளில் எழுத்துமளவுக்கு, நோக்கியா வெகுஜன மக்களின் பயன்பாட்டை பெற்றிருந்தது.

 நோக்கியா
நோக்கியா

அதன்பின் வாடிக்கையாளர்களின் தேவைகளை அறிந்து அதை ஈடுகட்ட முடியவில்லை என்பதாலும், தொலைத்தொடர்பு உலகில் ஏற்பட்ட கடுமையான போட்டியைச் சமாளிக்க முடியாமல் போனதாலும் நோக்கியா தடுமாறிச் சரிந்தது. 

இந்நிலையில் பன்னாட்டு தொலைத்தொடர்பு நிறுவனமான நோக்கியா 60 ஆண்டுகளுக்குப் பின் முதன்முறையாகத் தன்னுடைய லோகோவை ஞாயிற்றுக்கிழமை மாற்றியுள்ளது. 

பழைய நோக்கியாவின் லோகோ நீல நிறத்தில், ஒரே வடிவான எழுத்தில் இருக்கும். தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நோக்கியாவின் புதிய லோகோவில், பல வண்ணங்களும், `NOKIA’ என்ற வார்த்தை ஐந்து வெவ்வேறு வடிவங்களிலும் இருக்கிறது.

NOKIA
NOKIA

இது குறித்து நோக்கியாவின் தலைமை நிர்வாக அதிகாரி பெக்கா லண்ட்மார்க் (Pekka Lundmark) கூறுகையில், ``ஸ்மார்ட்போன்களுடன் எங்களுக்குத் தொடர்பு இருந்தது. இப்போதெல்லாம் நாங்கள் ஒரு வணிக தொழில்நுட்ப நிறுவனமாக இருக்கிறோம்’’ என்று தெரிவித்துள்ளார்.

ஸ்மார்ட்போன் நிறுவனமாக இருந்த நோக்கியா தற்போது 5ஜி நெட்வொர் மற்றும் தானியங்கு தொழிற்சாலைகளுக்கு தொலைத்தொடர்பு உபகரணங்களை விற்பதில் கவனம் செலுத்தி வருகிறது. தொலைத்தொடர்பு வணிகத்தில் கவனம் செலுத்தி வரும் நோக்கியா அதன் தற்போதைய திட்டத்தால், மைக்ரோசாப்ட் மற்றும் அமேசானுக்கு போட்டியாக வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.