Published:Updated:

ரத்தன் டாடாவுக்கு `ஆர்டர் ஆஃப் ஆஸ்திரேலியா' விருது கிடைக்கக் காரணம்...

Ratan Tata: ரத்தன் டாடா | `ஆர்டர் ஆஃப் ஆஸ்திரேலியா' விருது

தொழிலதிபரும், டாடா குழுமத்தின் முன்னாள் தலைவருமான ரத்தன் டாடாவுக்கு, ஆஸ்திரேலிய குடிமகன்களின் உயரிய விருதான `ஆர்டர் ஆஃப் ஆஸ்திரேலியா (Order of Australia)’ விருதை, வழங்கி சிறப்பித்துள்ளது ஆஸ்திரேலிய அரசு.

இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையேயான உறவுகளை முக்கியமாக வர்த்தகத் துறைகளில் பேணுவதில் முக்கிய பங்களிப்பை அளித்தமைக்கு, ஆர்டர் ஆஃப் ஆஸ்திரேலியாவின் பொதுப் பிரிவில் ரத்தன் டாடா கெளரவ அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

வர்த்தகம், தொழில் உள்ளிட்ட துறைகளில் இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான உறவை பலப்படுத்தியதற்காக ரத்தன் டாடாவின் பங்களிப்பை பாராட்டி இந்த விருதை ஆஸ்திரேலிய அரசு வழங்கியுள்ளது. இந்த விருது வழங்கும்போது டாடா சன்ஸ் தலைவர் என்.சந்திரசேகரன் உடன் இருந்தார்.

ஆஸ்திரேலியாவின் உயர் ஆணையர் பேரி ஓ'ஃபாரெல் சனிக்கிழமையன்று ட்வீட் செய்துள்ளார் அதில், ``ரத்தன் டாடா, தொழில் மற்றும் சேவை மனப்பான்மையில் தலைசிறந்தவர், இந்தியாவில் மட்டுமல்ல, அவரது பங்களிப்பு ஆஸ்திரேலியா விலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியா-இந்தியா உறவுக்கு ரத்தன் டாடாவின் நீண்டகால அர்ப்பணிப்பை அங்கீகரிப்பதற்காக ஆர்டர் ஆஃப் ஆஸ்திரேலியா (AO) கௌரவத்தை வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த ட்வீட் உடனடியாக வைரலாகி பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

Ratan Tata: ரத்தன் டாடா | `ஆர்டர் ஆஃப் ஆஸ்திரேலியா' விருது
Ratan Tata: ரத்தன் டாடா | `ஆர்டர் ஆஃப் ஆஸ்திரேலியா' விருது

``1998-ல் ஆஸ்திரேலியாவில் சுமார் 17,000 ஊழியர்களுடன், டாடா கன்சல்டன்சி சர்வீஸின் ஆஸ்திரேலிய கிளை தொடங்கியது. எந்த இந்திய நிறுவனத்திலும் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய அளவில் ஆஸ்திரேலிய பணியாளர்களைக் கொண்டு சிறப்பாக செயல்பட்டுவருகிறது.

இந்நிறுவனத்தின் மூலம் ஆறு ஆஸ்திரேலிய தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு தகவல் தொழில்நுட்ப சேவைகள் இலவசமாக வழங்கப்படுகின்றன.

2022-ம் ஆண்டு இந்தியா - ஆஸ்திரேலியா பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானபோது ரத்தன் டாடா ஆதரவளித்தார். இந்தியா - ஆஸ்திரேலியா இரு நாடுகளுக்கும் இடையே வலுவான பொருளாதார-கலாசார பிணைப்புகளை வளர்ப்பதை வலுவாக ஆதரித்தார்" என்று ஆஸ்திரேலிய அரசு பாராட்டியுள்ளது.

ரத்தன் டாடா, இந்தியாவின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம பூஷன் விருதை 2000 ஆண்டிலும்,  பத்ம விபூஷன் விருதை 2008 -லும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

85 வயதை கடந்த ரத்தன் டாடா சுமார் 21 ஆண்டுகள் டாடா குழுமத்தை தலைமை தாங்கி வழிநடத்தினார். இவருடைய பணிக் காலத்தில் நிறுவனத்தின் வருவாயும் லாபமும் பல மடங்கு அதிகரித்தது. இளம் தொழில் முனைவோர்களுக்கு முன்னோடி நாயகனாகத் திகழ்ந்தவர். பல ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு தனது முதலீடுகளை வழங்கி ஊக்கம் கொடுத்து வருகிறார்.