`அமைதிப்படை' படம் பார்த்த அனைவரும் நிச்சயம் இந்த வசனத்தை, இந்த தலைப்புடன் தொடர்புபடுத்தி பார்க்க முடியும். இந்தியாவில் ரியல் எஸ்டேட் இன்வெஸ்ட்மென்ட் டிரஸ்ட் (ரெய்ட்) என்ற முதலீட்டுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு நான்கு ஆண்டுகள் கடந்த நிலையில், இப்போடு ரெய்ட் திட்டங்கள் ஓரளவு பிரபலமடைந்து வருகிறது.
தற்போது எம்பஸி, மைன்ட்ஸ்பேஸ் மற்றும் ப்ரூக்ஃபீல்டு என மூன்று ரெய்ட்டுகள் சந்தையில் வர்த்தகமாகி வருகின்றன. குறிப்பாக, இந்த முதலீட்டில் குறிப்பிட்ட கால அளவில், தொடர் வருவாய் ஈட்டித்தர அதிக வாய்ப்புள்ளதோடு சொத்துக்களின் சந்தை மதிப்பு உயரும்போது இந்த பங்குகளின் விலை உயரவும் வாய்ப்புள்ளது.

Also Read
நெக்ஸஸ் ரீடெய்ல் ரெய்ட்
ஏற்கனவே சந்தையில் வர்த்தகமாகி வருகின்ற எம்பஸி மற்றும் மைன்ட்ஸ்பேஸ் ரெய்ட்டுகளை வெளியிட்ட அமெரிக்க நிறுவனமான பிளாக்ஸ்டோன் தான், நெக்ஸஸ் ரீடெய்ல் ரெய்ட் ஐபிஓ வையும் வெளியிடுகிறது.
மற்ற மூன்று ரெய்ட்டுகளும் அலுவலக வளாகங்களை சொத்துக்களாக கொண்டு வருமானம் ஈட்டி வருகின்றன. ஆனால் நெக்ஸஸ் ரீடெய்ல் ரெய்ட், மால்களில் இயங்கும் சில்லரை வர்த்தக வளாகங்கள் மூலம் வருவாய் ஈட்டி வருகிறது.
இதற்காக, சென்னை (விஜயா ஃபோரம் மால்), பெங்களூரூ, மும்பை, ஹைதராபாத், டில்லி போன்ற 14 முக்கிய நகரங்களில் செயல்பட்டுவரும் 17 மால்களை இந்த ரெய்ட்டின் சொத்துக்களாக இணைத்துள்ளது.

Also Read
இவை அனைத்தும் `ஏ’ கிரேடு சொத்துக்களாக வரையறுக்கப்பட்டுள்ளது. தவிர, மொத்தம் 92 லட்சம் சதுர அடி பரப்பளவு கொண்ட சொத்துக்களை உள்ளடக்கிய நெக்ஸஸ் ரெய்ட்டில், இரண்டு ஹோட்டல் சொத்துக்களும், மூன்று வர்த்தக அலுவலக வளாகங்களும் அடங்கும்.
இவற்றில் 96% வளாகங்கள் ஏற்கனவே பயன்பாட்டிற்கு விடப்பட்டுள்ளன. இந்திய மற்றும் சர்வதேச நிறுவனங்களான ஆப்பிள், ஸ்டார்பக்ஸ், மெக்டோனல்ட்ஸ் போன்ற 3000 சில்லரை கடைகள் நெக்ஸஸ் மால்களில் இயங்கி வருகின்றன.
இந்நிறுவனம் ஐபிஓ மூலம் சுமார் ௹.3,200 கோடி நிதி திரட்ட உத்தேசித்துள்ளது. இந்த நிதியின் ஒரு பகுதியை கொண்டு இந்தூரில் உள்ள ஒரு மாலை கையகப்படுத்த உத்தேசித்துள்ளது. மேலும் ஒரு பகுதியைக் கொண்டு கடனை திருப்பி செலுத்தவும் திட்டமிட்டுள்ளது.
இந்த ஐபிஓ வின் ஒரு யூனிட்டின் விலைப் பட்டியல் 95-100 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் வருகிற மே 9-ம் தேதி முதல், 11-ம் தேதி வரை குறைந்தபட்சமாக 150 யூனிட்டுகளை விண்ணப்பிக்கலாம். சில்லரை வணிக வளாகங்களை மையமாக வைத்து வெளியிடப்படும் முதல் ரெய்ட்டு ஐபிஓ இதுவே.
2022-ம் ஆண்டுக்கான நிதியாண்டில் ரூ.1318.21 கோடியை வருவாயாக ஈட்டியுள்ளது. 2023ம் நிதியாண்டில் டிசம்பருடன் முடிந்த 9 மாத காலத்தில் ரூ.1463.15 கோடியை வருவாயாகவும் ரூ. 257 கோடியை லாபமாகவும் ஈட்டியுள்ளது

யாருக்கு உகந்தது?
தொடர் வருமானம் எதிர்பார்ப்பவர்கள், கொஞ்சம் ரிஸ்க் எடுக்க நினைப்பவர்களுக்கு இந்த ஐபிஓ உகந்தது. மேலும், இந்த நிறுவனம் இயங்கி வரும் 14 நகரங்களில் இருந்துதான் இந்தியாவின் 30% சில்லரை வணிக வியாபாரம் நடக்கிறது.
மாலுக்கு செல்வதோடு மட்டுமல்லாமல் மால்களில் முதலீடும் செய்ய இந்த நெக்ஸஸ் ஐபிஓ ஒரு வாய்ப்பாக அமையும்.