Published:Updated:

எல்.ஐ.சி தலைவராக நியமிக்கப்பட்ட சித்தார்த்த மொகந்தி... யார் இவர்?

எல்.ஐ.சி தலைவராக நியமிக்கப்பட்ட சித்தார்த்த மொகந்தி

சித்தார்த்த மொகந்தி 1985 -ம் ஆண்டில் இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில் பயிற்சி அதிகாரியாகச் சேர்ந்தார். இவர் காப்பீட்டுத் துறையில் சிறந்த அனுபவம் பெற்றவர். புவனேஸ்வரில் உள்ள உத்கல் பல்கலைக்கழகத்தில் சட்டத்தில் இளங்கலைப் பட்டமும், முதுகலை அரசியல் அறிவியல் பட்டமும் பெற்றவர்.

1956 –ம் ஆண்டில் ரூ.5 கோடியில் தொடங்கப்பட்ட எல்.ஐ.சி 67 ஆண்டுகளில் காப்பீடு துறையில் அசைக்க முடியாத ஜாம்பவனாக வளர்ந்துள்ளது. இந்தியாவின் வளர்ச்சியில் மக்களின் வாழ்வாதாரத்தில் பல முக்கிய மாற்றங்களை நிகழ்த்தியிருக்கிறது. எல்.ஐ.சி என்றால் இன்ஷூரன்ஸ், இன்ஷூரன்ஸ் என்றால் எல்.ஐ.சி எனும் அளவுக்கு இரண்டும் பிரிக்க முடியாததாகி விட்டது என்று சொன்னால் மிகையாகாது.

எல்.ஐ.சி தலைவராக நியமிக்கப்பட்ட சித்தார்த்த மொகந்தி
எல்.ஐ.சி தலைவராக நியமிக்கப்பட்ட சித்தார்த்த மொகந்தி

இந்தியாவின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி.,யின் தலைவராக இருந்த எம்.ஆர்.குமாரின் பதவிக் காலம் கடந்த மார்ச் 13 -ம் தேதியுடன் நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து 'லைப் இன்சூரன்ஸ் கார்ப்ப ரேஷன் ஆப் இந்தியாவின் தலைவர் பதவிக்கு, சித்தார்த்த மொஹந்தி பரிந்துரைக்கப்பட்டார். இதையடுத்து, மொஹந்தியை மத்திய அரசு எல்.ஐ.சி., நிறுவனத்தின் புதிய தலைவராக நியமித்தது.

இதுகுறித்து எல்.ஐ.சி வெயிட்ட அறிவிப்பில், ``மத்திய அரசு,  சித்தார்த்த மொஹந்தியை, எல்ஐசி ஆஃப் இந்தியாவின் தலைவராக நியமித்துள்ளது. பதவியேற்ற நாளிலிருந்து 29.06.2024 வரை, அதன்பிறகு,  தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநராக 07.06.2025 வரை,  அதாவது அவர் 62 வயதை அடையும் தேதி வரை அல்லது அடுத்த உத்தரவு வரை இப்பதவில் நீடிப்பார்." என்று குறிப்பிட்டுள்ளது.

சித்தார்த்த மொகந்தி...

சித்தார்த்த மொகந்தி 1985 -ம் ஆண்டில் இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில் பயிற்சி அதிகாரியாகச் சேர்ந்தார். இவர் காப்பீட்டுத் துறையில் சிறந்த அனுபவம் பெற்றவர். ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள உத்கல் பல்கலைக்கழகத்தில் சட்டத்தில் இளங்கலைப் பட்டமும், முதுகலை அரசியல் அறிவியல் பட்டமும் பெற்றவர்.

எல்.ஐ.சி தலைவராக நியமிக்கப்பட்ட சித்தார்த்த மொகந்தி
எல்.ஐ.சி தலைவராக நியமிக்கப்பட்ட சித்தார்த்த மொகந்தி

அவர் ஒடிசாவின் புவனேஸ்வரில் உள்ள சேவியர் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட்டில் வணிக மேலாண்மையில் முதுகலை சான்றிதழைப் பெற்றுள்ளார். அவர் முன்பு எல்ஐசி ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட்டின் COO மற்றும் CEO ஆக பணியாற்றினார் மற்றும் ராய்ப்பூர் மற்றும் கட்டாக்கின் மூத்த பிரிவு மேலாளர், தலைமை (சட்டம்), தலைமை (முதலீட்டு கண்காணிப்பு மற்றும் கணக்கியல்),  நிர்வாக இயக்குநர் (சட்டம்) போன்ற பல்வேறு பதவிகளை வகித்துள்ளார். மேலும், 2013-14 ஆம் ஆண்டுக்கான சட்ட சகாப்த விருதுகளில், மும்பையின் தலைவராக அவர் பதவி வகித்த காலத்தில், "சிறந்த இன்சூரன்ஸ் இன்-ஹவுஸ் லீகல் டீம்" விருதை எல்.ஐ.சி வென்றது.

தற்போது நியமிக்கப்பட்டுள்ள எல்ஐசி தலைவர் பதவியில், மொஹந்தி தன் 62 வயது வரை அல்லது 2025 ஜூன் 7-ம் தேதி வரை பதவியில் நீடிப்பார்.

மேலும், எல்.ஐ.சி.,யின் முன்னாள் நிர்வாக இயக்குனரான பி.சி.பட்னாயக், இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.