Published:Updated:

கிரெடிட் கார்டு பயன்பாடு; அக்.1 முதல் ரிசர்வ் வங்கி கொண்டு வரும் முக்கிய மாற்றங்கள்..!

கிரெடிட் கார்டு
News
கிரெடிட் கார்டு

இதன் மூலம் கடன் அட்டை விவரங்களை யாரும் அறிய முடியாது. முக்கிய தகவல்கள் மாஸ்க் செய்யப்பட்டுவிடும். இதன் காரணமாக வாடிக்கையாளரின் விவரங்களை வியாபார தளங்கள் அறிய முடியாது. அதனால் முறைகேடுகள் நடைபெறும் ஆபத்து தடுக்கப்படுகிறது.

கிரெடிட் கார்டு பயன்பாடு; அக்.1 முதல் ரிசர்வ் வங்கி கொண்டு வரும் முக்கிய மாற்றங்கள்..!

இதன் மூலம் கடன் அட்டை விவரங்களை யாரும் அறிய முடியாது. முக்கிய தகவல்கள் மாஸ்க் செய்யப்பட்டுவிடும். இதன் காரணமாக வாடிக்கையாளரின் விவரங்களை வியாபார தளங்கள் அறிய முடியாது. அதனால் முறைகேடுகள் நடைபெறும் ஆபத்து தடுக்கப்படுகிறது.

Published:Updated:
கிரெடிட் கார்டு
News
கிரெடிட் கார்டு

கிரெடிட் கார்ட் பயன்படுத்தும் முறையில் ரிசர்வ் வங்கி முக்கிய மாற்றங்களை அக்டோபர் 1 முதல் நடைமுறைக்கு கொண்டு வர இருக்கிறது.

தற்போது கடன் அட்டையைப் பயன்படுத்தி ஆன்லைன் பரிவர்த்தனை மேற்கொள்ளும்போது கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்களின் விவரங்கள் வாடிக்கையாளரின் அனுமதியுடன் வியாபார தளங்களில் சேமிக்கப்படுகிறது.

கிரெடிட் கார்டு
கிரெடிட் கார்டு

வாடிக்கையாளர் ஓர் இணையதளத்தைத் தொடர்ந்து உபயோகிக்கும்போது ஒவ்வொரு முறையும் விவரங்களை பதிவிடாமல் விரைவாகப் பரிவர்த்தனைகள் செய்வதற்கு வாடிக்கையாளரின் ஒப்புதலுடன் இந்த விவரங்கள் சேமிக்கப்படுகிறது. இவ்வாறு செய்யும்போது வாடிக்கையாளரின் விபரங்களை வியாபாரத் தளங்கள் அறிய முடியும். இது முறைகேடு நடைபெறுவதற்கு இடம் கொடுக்கலாம்.

தற்போது ரிசர்வ் வங்கியின் இந்த உத்தரவுபடி வியாபாரத் தளங்களில் சேமிக்கப்பட்டுள்ள விவரங்கள் அழிக்கப்பட இருக்கின்றன.

கடன் அட்டை பரிவர்த்தனைகளை மேலும் பாதுகாக்கும் பொருட்டு டோக்கன் நடைமுறையை வங்கிகள் பயன்படுத்த தற்போது ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. 

கிரெடிட் கார்டு
கிரெடிட் கார்டு

இதன்படி தொடர்ந்து வியாபார தளத்தைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர் வியாபார தளங்களில் தமது விவரங்களை  டோக்கன் வடிவில் மட்டுமே சேமிக்க முடியும். இதன் மூலம் கடன் அட்டை விவரங்களை யாரும் அறிய முடியாது. முக்கிய தகவல்கள் மாஸ்க் செய்யப்பட்டுவிடும். இதன் காரணமாக வாடிக்கையாளரின் விவரங்களை வியாபார தளங்கள் அறிய முடியாது. அதனால் முறைகேடுகள் நடைபெறும் ஆபத்து தடுக்கப்படுகிறது. இது மேலும் கடன் அட்டை பரிவர்த்தனைகளை பாதுகாத்திட உதவும்.