Published:Updated:

`E இன்ஷூரன்ஸ்' ஐ.ஆர்.டி.ஏஐ அதிரடி! வாடிக்கையாளர்களுக்கு சலுகை, ஏஜென்டுகளுக்கு பாதிப்பா?

ஐ.ஆர்.டி.ஏ.ஐ அதிரடி
News
ஐ.ஆர்.டி.ஏ.ஐ அதிரடி

இந்தச் சேவையின் மூலம் வாடிக்கையாளர்கள் காப்பீட்டு நிறுவனங்களின் இணையதள வாயிலாகவோ, மொபைல் போன்களில் தரவிறக்கம் செய்யப்பட்ட ஆண்ட்ராய்டு ஆப்கள் மூலமாகவோ காப்பீட்டுக்கு விண்ணப்பிக்க முடியும்.

`E இன்ஷூரன்ஸ்' ஐ.ஆர்.டி.ஏஐ அதிரடி! வாடிக்கையாளர்களுக்கு சலுகை, ஏஜென்டுகளுக்கு பாதிப்பா?

இந்தச் சேவையின் மூலம் வாடிக்கையாளர்கள் காப்பீட்டு நிறுவனங்களின் இணையதள வாயிலாகவோ, மொபைல் போன்களில் தரவிறக்கம் செய்யப்பட்ட ஆண்ட்ராய்டு ஆப்கள் மூலமாகவோ காப்பீட்டுக்கு விண்ணப்பிக்க முடியும்.

Published:Updated:
ஐ.ஆர்.டி.ஏ.ஐ அதிரடி
News
ஐ.ஆர்.டி.ஏ.ஐ அதிரடி

E- இன்ஷூரன்ஸ் சேவை

இந்திய காப்பீடு ஒழுங்காற்று வளர்ச்சி முகமை ( ஐஆர்டிஏஐ) தற்போது பாலிசிதாரர்கள் எலக்ட்ரானிக் முறையில் காப்பீடு (E இன்ஷூரன்ஸ்) எடுக்கும் பொழுது பிரீமியத் தொகையில் சலுகை வழங்க இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்ஷூரன்ஸ்
இன்ஷூரன்ஸ்

காப்பீட்டுத் துறையில் பாலிசிதாரர்கள் தற்போது நேரடியாக காப்பீட்டு அலுவலகத்துக்கு சென்றோ, தமக்குத் தெரிந்த ஏஜென்ட்கள் வாயிலாகவோ காப்பீட்டை எடுத்து வருகின்றனர். இதில், தேவைப்படும் ஆவணங்களை நகல்களாகத் தர வேண்டும். இதில் காப்பீடு எடுக்கும் வாடிக்கையாளர்களுக்கு அலைச்சல் மற்றும் அதிக நேரம் பிடிக்க வாய்ப்பு இருக்கிறது.

 இந்த நடைமுறையை எளிமைப்படுத்த காப்பீடு நிறுவனங்கள் 

E- இன்ஷூரன்ஸ் சேவையையும் தற்போது வழங்கி வருகின்றனர். இந்தச் சேவையின் மூலம் வாடிக்கையாளர்கள் காப்பீட்டு நிறுவனங்களின் இணையதள வாயிலாகவோ, மொபைல் போன்களில் தரவிறக்கம் செய்யப்பட்ட ஆண்ட்ராய்டு ஆப்கள் மூலமாகவோ காப்பீட்டுக்கு விண்ணப்பிக்க முடியும்.

எளிமையாக காப்பீட்டுத் தொகையை செலுத்தும் வசதி..!

இந்த நடைமுறையில் காப்பீட்டுக்குத் தேவையான ஆவணங்களை டிஜிட்டல் முறையில் பதிவேற்றம் செய்து கொள்ளலாம். காப்பீட்டுக்குத் தேவையான பிரீமியம் தொகையை நெட் பேங்கிங் வாயிலாகவோ, யுபிஐ, கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு போன்ற பல்வேறு பண பரிவர்த்தனைகள் செய்யும் நடைமுறை வாயிலாகவோ எளிமையாக காப்பீட்டுத் தொகையை செலுத்த முடியும். ஆவணங்கள் டிஜிட்டல் முறையில் பதிவேற்றம் செய்யப்படுவதால் பராமரிக்கும் நடைமுறையும் எளிமையாக்கப்படுகிறது.

இன்ஷூரன்ஸ்
இன்ஷூரன்ஸ்

ஆவணங்கள் தொலைந்து போகும் அச்சமும் இல்லை. காப்பீடு எடுத்து முடித்த பிறகு, பாலிசி டாக்குமென்ட்டும் உடனடியாக வாடிக்கையாளரின் மின்னஞ்சலுக்கு அல்லது whatsapp நம்பருக்கு இணைப்பாக அனுப்பப்பட்டுவிடும். இவ்வாறு காப்பீட்டுக்கு விண்ணப்பித்த வாடிக்கையாளருக்கு காப்பீடு மிக விரைவாக ஒரு நிமிட நேரத்துக்குள் கிடைத்துவிடும்.

அதனால், தற்போது வாடிக்கையாளர்கள் பலர் டிஜிட்டல் முறையில் காப்பீடு எடுக்கும் நடைமுறைக்கு மாறத் தொடங்கியுள்ளனர். 

வாடிக்கையாளர்களுக்கு பயனுள்ள அறிவிப்பு!

 இந்த நடைமுறையை ஊக்குவிக்கும் பொருட்டு தற்போது டிஜிட்டல் முறையில் பாலிசிக்கு வாடிக்கையாளர் விண்ணப்பிக்கும்போது பிரீமியம் விலையில் சலுகைகள் வழங்க இருப்பதாக ஐ.ஆர்.டி.ஏ.ஐ தரப்பு தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு பெரும்பாலான வாடிக்கையாளர்களுக்கு பயனுள்ள அறிவிப்பாகக் கருதப்படுகிறது.

மருத்துவக் காப்பீடு
மருத்துவக் காப்பீடு

தற்போது காப்பீடு தொடர்பான விழிப்புணர்வு அதிக அளவு ஏற்பட்டுள்ளது. மக்களும் கார் மற்றும் இரண்டு சக்கர வாகனங் களுக்கான மோட்டார் காப்பீடு, ஆயுள் காப்பீடு, மருத்துவ காப்பீடு போன்ற பல்வேறு வகையான காப்பீட்டுத் திட்டங்களை எடுத்து வருகின்றனர். இவை அனைத்தையும் ஒரே இடத்தில் பாதுகாக்கும் மின்னணு காப்பீட்டு கணக்கும் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது.

டிஜிட்டல் முறை

இதன் மூலம் அனைத்து காப்பீடு தொடர்பான கணக்குகளும் ஒரே இடத்தில் கையாளப்படுவதால் வாடிக்கையாளர்களுக்கு டிஜிட்டல் மூலம் காப்பீடு எடுப்பது பயனுள்ளதாகவே பார்க்கப்படுகிறது.

மருத்துவக் காப்பீடு
மருத்துவக் காப்பீடு

ஏஜென்டுகளுக்கு பாதிப்பு வருமா?

ஆனால், இந்த அறிவிப்பின் மற்றொரு பக்கம் இன்ஷூரன்ஸ் ஏஜென்டுகளுக்கு பாதகமாக உள்ளது. தற்போது நமது நாட்டில் ஆயுள் காப்பீட்டுத் துறையில் மட்டும் 25 லட்சத்துக்கும் மேற்பட்ட ஏஜென்ட்கள் இருக்கின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் பகுதிநேர ஏஜென்டுகளாகப் பணி புரிகின்றனர். அவர்களுக்கு புதிய பாலிசிதாரரை அறிமுகப்படுத்தும்போது 40% வரை போனஸ் தொகை கிடைக்கும். தற்போது கூடுதல் சலுகைகள் கிடைக்கும்பட்சத்தில் வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் டிஜிட்டல் முறைக்கு மாறினால் கமிஷனை நம்பி இருக்கும் ஏஜென்டுகளுக்கு அதிக சிக்கலை ஏற்படுத்தலாம். 

கோலோச்சும் ஆன்லைன் சேவைகள்...

டிஜிட்டல் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்ட பெரும்பாலான சேவைகளில் இடைத் தரகர்கள் அதிக பாதிப்பை அடைந்து வருகின்றனர். வீடு வாடகைக்கு ஆள் பிடிப்பது, ரியல் எஸ்டேட் துறையில் வீடு வாங்கி விற்பது, திருமணத்துக்கு வரன் பார்ப்பது போன்ற பல்வேறு துறைகளில் தற்போது ஆன்லைன் சேவைகள் கோலோச்ச தொடங்கியுள்ளன.

ஆன்லைன் பரிவர்த்தனை
ஆன்லைன் பரிவர்த்தனை

காப்பீட்டுத் துறை வளர்ச்சியில் ஏஜென்டுகளின் பங்கு முக்கியமானது...

இதன் காரணமாக இந்தத் துறையை நம்பி இருந்த இடைத் தரகர்கள் அதிக பாதிப்பை அடைந்தனர். டிஜிட்டல் முறைக்கு மாறும் பொழுது காப்பீட்டு துறையிலும் கமிஷனை நம்பி இருக்கும் ஏஜென்டுகளுக்கு நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தும். இந்த நடைமுறை வாடிக்கையாளர்களுக்கு பயனுள்ளதாக இருப்பதால் அவர்கள் மகிழ்ச்சியுடன் டிஜிட்டல் முறைக்கு மாறவே செய்வர். மாற்றம் ஒன்றே மாறாதது என்ற உலக நியதியின் படி காப்பீட்டு துறையில் ஏற்பட்டிருக்கும், இந்த மாற்றங்களை நாம் வரவேற்கத்தான் செய்ய வேண்டும்.

ஆனால், இது போன்ற மாற்றங்களைக் கொண்டு வரும்போது ஐஆர்டிஏஐ ஏஜென்டுகளுடன் கலந்தாலோசித்து மாற்றங்களை கொண்டு வர வேண்டும். கடந்த அரை நூற்றாண்டுகளில் நமது நாட்டின் காப்பீட்டுத் துறையில் ஏஜென்டுகளின் பங்கு அளப்பரியதாக இருந்தது. அவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாமல் மாற்று வழிகந்த் தொலைநோக்குப் பார்வையில் கணக்கிட்டு நடைமுறைப்படுத்துவது ஐஆர்டிஏஐயின் கடமையாகப் பார்க்கப்படுகிறது.