Published:Updated:

தங்க இ.டி.எஃப் முதலீடு 90% சரிவு... நகை வாங்கத்தான் மக்கள் விரும்புகிறார்களா?

கோல்டு இ.டி.எஃப்

இந்திய மக்களிடம் எப்போதும் தங்கம் ஒரு சிறந்த முதலீடாக இருந்து வருகிறது. செய்கூலி, சேதாரம் ஆகியவற்றைத் தவிர்க்க, மக்கள் அதிகளவில் கோல்டு இ.டி.எஃப்-பில் முதலீடு செய்து வந்தனர்.

தங்க இ.டி.எஃப் முதலீடு 90% சரிவு... நகை வாங்கத்தான் மக்கள் விரும்புகிறார்களா?

இந்திய மக்களிடம் எப்போதும் தங்கம் ஒரு சிறந்த முதலீடாக இருந்து வருகிறது. செய்கூலி, சேதாரம் ஆகியவற்றைத் தவிர்க்க, மக்கள் அதிகளவில் கோல்டு இ.டி.எஃப்-பில் முதலீடு செய்து வந்தனர்.

Published:Updated:
கோல்டு இ.டி.எஃப்

இந்தியாவில் தொடர் தங்கம் விலை ஏற்றத்தால், 2022-ம் ஆண்டு கோல்டு இ.டி.எஃப் திட்டங்களில் செய்யப்பட்ட முதலீடு 90% குறைந்து, ரூ.459 கோடி மட்டுமே முதலீடு செய்யப்பட்டுள்ளது. இந்திய மக்களிடம் எப்போதும் தங்கம் ஒரு சிறந்த முதலீடாக இருந்து வருகிறது. செய்கூலி, சேதாரம் ஆகியவற்றைத் தவிர்க்க, தற்போது மக்கள் அதிகளவில் கோல்டு இ.டி.எஃப்-ல் முதலீடு செய்து வருகின்றனர்.

கோல்டு இ.டி.எஃப்
கோல்டு இ.டி.எஃப்

இந்திய மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களின் கூட்டமைப்பின் (AMFI) தரும் புள்ளிவிவரங் களின்படி, இந்தியாவில் கடந்த 2020-ம் ஆண்டு ரூ.6,657 கோடி ரூபாயையும், 2021-ம் ஆண்டு ரூ.4,814 கோடி ரூபாயையும் கோல்டு இ.டி.எஃப் திட்டங்களில் மக்கள் முதலீடு செய்தனர். ஆனால், 2022-ம் ஆண்டில் ரூ.459 கோடி மட்டுமே கோல்டு இ.டி.எஃப்-ல் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டைவிட 90% குறைவாகும்.

தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்துகொண்டே வருவதால் முதலீட்டாளர்கள் கோல்டு இ.டி.எஃப்பில் முதலீடு செய்யத் தயங்குகிறார்கள். உயர்ந்து வரும் வட்டி விகிதமும் கோல்டு இ.டி.எஃப்-ல் மக்கள் முதலீடு செய்வதை குறைக்கிறது. மேலும், ரஷ்யா - உக்ரைன் போர் மற்றும் அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை உயர்த்தியதும் கோல்டு இ.டி.எஃப் முதலீட்டுச் சரிவிற்குக் காரணம் என்கிறார்கள் நிபுணர்கள்.

கோல்டு இ.டி.எஃப்
கோல்டு இ.டி.எஃப்

தற்போது உள்நாட்டு முதலீட்டாளர்கள், பிற சொத்துகளைவிட ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யவே பெரிதும் விரும்புகிறார்கள். 2021-ம் ஆண்டில் ரூ.96,700 கோடியும், 2022-ம் ஆண்டில் ரூ.1.6 லட்சம் கோடியும் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கோல்டு இடிஎஃப் என்பது பங்குச் சந்தையில் பங்குகள் போல் வர்த்தகமாகும் மியூச்சுவல் ஃபண்ட் யூனிட்டுகள் ஆகும். கோல்டு இடிஎஃப் மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தை மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் வெளியிடுகின்றன. இதில் முதலீடு செய்ய டீமேட் கணக்கு கட்டாயம். இந்த கோல்டு இடிஎஃப் ஃபண்டின் யூனிட்கள் பங்குச் சந்தையில் பட்டியலிடப்படுகிறது. அதன் பிறகு இந்த கோல்டு இ.டி.எஃப் ஒரு யூனிட்டை கூட ஒருவர் வாங்க முடியும். இந்த யூனிட்களை ஒருவர் எப்போது வேண்டுமானாலும் பங்குச் சந்தையின் வர்த்தக நேரத்தில் வாங்கலாம்; விற்கலாம். தங்கத்தின் விலை மாற்றத்துக்கு ஏற்ப கோல்டு இ.டி.எஃப்-ன் யூனிட் என்.ஏ.வி மதிப்பும் மாற்றத்துக்கு உள்ளாகும். அதாவது தங்கத்தின் விலை ஏறினால் என்.ஏ.வி அதிகரிக்கும்; குறைந்தால் என்.ஏ.வி குறையும்.

தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்துவருவதால், மக்கள் தங்க நகையாகவே வாங்க விருப்பப்படுகிறார்கள். அதனால் கோல்ட் இ.டி.எஃப் திட்டத்தைத் தவிர்த்து, நகையாக வாங்கத் தொடங்கி இருக்கிறார்கள் என்பது தெளிவாகிறது!