Published:Updated:

செயற்கையாகத் தட்டுப்பாடு! - பதுக்கப்படுகிறதா 2000 ரூபாய் நோட்டுகள்?

செயற்கையாகத் தட்டுப்பாடு! - பதுக்கப்படுகிறதா 2000 ரூபாய் நோட்டுகள்?
செயற்கையாகத் தட்டுப்பாடு! - பதுக்கப்படுகிறதா 2000 ரூபாய் நோட்டுகள்?

பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின்னர் அறிமுகமான 2,000 ரூபாய் நோட்டு, தொடர்ந்து சர்ச்சையில் சிக்குவதே வழக்கமாகிவருகிறது. தற்போதும் பதுக்கல் பிரச்னையில் மாட்டியுள்ளது. 

செயற்கையாகத் தட்டுப்பாடு! - பதுக்கப்படுகிறதா 2000 ரூபாய் நோட்டுகள்?

கறுப்புப் பண பதுக்கலைத் தடுப்பதற்காகவே பண மதிப்பிழப்பு நடவடிக்கை கொண்டுவரப்பட்டுள்ளதாகக் கூறப்பட்ட நிலையில், அதிரடியாகக் கொண்டுவரப்பட்ட 2,000 ரூபாய் நோட்டு கடும் விமர்சனத்தை எதிர்கொண்டது. அதற்குமுன்புவரை 1,000 ரூபாய் நோட்டுகளாகப் பதுக்கிவந்தவர்களுக்கு, 2,000 ரூபாய் நோட்டு மிக நல்ல வாய்ப்பாக அமைந்துவிட்டது என்று அனைவராலும் விமர்சிக்கப்பட்டது. சேகர் ரெட்டி வீட்டில் நடைபெற்ற ரெய்டில் சிக்கிய 2,000 ரூபாய் நோட்டுக் கட்டுகள், அதன்மீதான விமர்சனத்தை உண்மையாக்கியது. 

செயற்கையாகத் தட்டுப்பாடு! - பதுக்கப்படுகிறதா 2000 ரூபாய் நோட்டுகள்?

தற்போது நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டு பிரசாரம் உச்சக்கட்டத்தை அடைந்துள்ள சூழலில், 2,000 ரூபாய் நோட்டுகளுக்கு செயற்கையாகத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஓட்டுக்கு பணம் அளிக்கும் அரசியல் கட்சிகள்தான் 2,000 ரூபாய் நோட்டுகளைப் பதுக்கியிருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது. 

இந்த 2,000 ரூபாய் நோட்டுகளின் அளவு சற்று சிறியதாக உள்ளது. இதற்கேற்ப, ஏடிஎம் மெஷின் மாற்றியமைக்கப்படவில்லை. நாட்டிலுள்ள 50 சதவிகித ஏடிஎம்கள், அதாவது சுமார் 2.2 லட்சம் ஏடிஎம்கள் இன்னமும் மாற்றியமைக்கப்படவில்லை. இதன் காரணமாகவும் 2,000 ரூபாய் நோட்டுகளைப் பெற இயலவில்லை. ஆக, தேர்தல் முடிந்த பிறகு வழக்கம்போல 2,000 ரூபாய் நோட்டுகள் அதிக அளவில் புழக்கத்திற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது