Published:Updated:

குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு மின்கட்டணம் 10 சதவீதம் குறைப்பு! - தமிழக அரசு அறிவிப்பு

மின்சாரம்
News
மின்சாரம்

ஒருநாளின் உச்சபட்ச பயன்பாட்டு நேரத்தில் விதிக்கப்பட்ட மின் கட்டணத்தை குறைக்கும்படி பல்வேறு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு மின்கட்டணம் 10 சதவீதம் குறைப்பு! - தமிழக அரசு அறிவிப்பு

ஒருநாளின் உச்சபட்ச பயன்பாட்டு நேரத்தில் விதிக்கப்பட்ட மின் கட்டணத்தை குறைக்கும்படி பல்வேறு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

Published:Updated:
மின்சாரம்
News
மின்சாரம்

தமிழகத்தில் கடந்த செப்டம்பர் மாதம் முதல் அமலுக்கு வந்த மின் கட்டண உயர்வு பல்வேறு தரப்பினருக்கு ஷாக் கொடுத்தது. இந்த மின் கட்டண உயர்வை எதிர்த்து பலர் குரல் கொடுத்தனர்.

சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள்
சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள்

இந்த மின்கட்டண உயர்வின் ஒரு பகுதியாக, குறைந்த அழுத்த மின் இணைப்பு கொண்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் உச்சபட்ச பயன்பாடு நேரத்தில் மின் கட்டணம் 25% வசூலிக்கப்படும் என்று கூறப்பட்டது. இதற்கு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் செய்வோர் பலத்த எதிர்ப்பை தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில், குறைந்த அழுத்த மின் இணைப்பு கொண்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் உச்சபட்ச பயன்பாட்டு நேரத்தில் வசூலிக்கப்படும் மின் கட்டணம் 25 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அதாவது 10 சதவிகிதம் குறைக்கப்பட்டுள்ளது.

மின்சாரம் (Representational Image)
மின்சாரம் (Representational Image)

இதுகுறித்து குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,

"2020-2022-ம் ஆண்டிற்கான திருத்தி அமைக்கப்பட்ட மின்சார கட்டணம் 10.9.2022 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது உயர்த்தப்பட்டுள்ள மின்சார கட்டணத்தின்படி குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அதிகப்படியான கட்டணத்தை செலுத்த வேண்டியுள்ளது. அதனால், ஒருநாளின் உச்சபட்ச பயன்பாட்டு நேரத்தில் விதிக்கப்பட்ட மின் கட்டணத்தை குறைக்கும்படி பல்வேறு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு வழங்குவதில் முக்கிய பங்காற்றுவதை கருத்தில் கொண்டு அவர்களின் கோரிக்கையை ஏற்று, குறைந்த அழுத்த மின் இணைப்பு (லோ டென்சன் 3-பி) கொண்ட தொழில் நிறுவனங்களுக்கு உச்சபட்ச பயன்பாட்டு நேரத்தில் வசூலிக்கப்படும் மின் கட்டணத்தை 25 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக குறைக்கலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான உரிய கொள்கை வழிகாட்டுதல் வழங்க அரசு ஆணையிட்டுள்ளது.

சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள்
சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள்

இவ்வாறு மின் கட்டணத்தை குறைப்பதால் தமிழ்நாட்டில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அதிக அளவில் பயனடையும்" என்று கூறியுள்ளது.