உலகின் நம்பர் 1 பணக்காரராக இருந்த எலான் மஸ்க், தற்போது இரண்டாவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளார். சமீபத்தில் ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், உலகின் நம்பர் 1 பணக்காரராக இருந்த எலான் மஸ்க்கை இரண்டாவது இடத்துக்குத் தள்ளி, பெர்னார்ட் அர்னால்ட் குடும்பம் (Bernard Arnault) முதல் இடத்தைப் பிடித்துள்ளது.

எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு குறைந்ததற்குக் காரணம், சமூக ஊடக நிறுவனமான ட்விட்டரை வாங்க ஒரு பெரும் விலையை அவர் செலவு செய்துள்ளார். ட்விட்டருக்கு நிர்ணயிக்கப்பட்ட 44 பில்லியன் அமெரிக்க டாலரைத் திரட்ட இவர் தன்னுடைய எலெக்ட்ரிக் கார் ஸ்டாக்குகளை விற்றுள்ளார்.
டெஸ்லாவின் பங்கு மதிப்பும் கணிசமாகக் குறைந்துள்ளது. இதனால் முன்பு 200 பில்லியன் டாலர் வரை இருந்த இவரின் சொத்து மதிப்பு 185 பில்லியன் டாலராகக் குறைந்துள்ளது.

அதனால் விலையுயர்ந்த ஆடை, அழகு சாதனப் பொருள்கள், ஹாண்ட் பேக்குகள் போன்ற பல பொருள்களைத் தயாரிக்கும் LVMH Louis Vuitton நிறுவனத்தின் தலைவரான பெர்னார்ட் அர்னால்ட் குடும்பம் சுமார் 186.9 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் முதலிடம் பிடித்துள்ளது.