Published:Updated:

4.3 மில்லியன் டாலர் பொருளாதார உதவி... இந்திய சிறுதொழில் நிறுவனங்களுக்காக ஃபேஸ்புக் அறிவிப்பு!

Facebook
Facebook

சிறு தொழில்கள் ஃபேஸ்புக்கின் இலவச கார்டுகள் மற்றும் விளம்பர கிரெடிட்ஸ்களைப் பயன்படுத்தி, இணையம் மூலம் அதிக வாடிக்கையாளர்களை ஈட்ட முடியும். இதோடு வேண்டிய நேரத்தில் பண வரத்தும் அவர்களுக்கு கிடைக்கும்.

உலகம் முழுவதும் உள்ள சிறு தொழில்கள் கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார இழப்பை சமாளிக்கும் வகையில் 100 மில்லியன் டாலர் அளவுக்கு பொருளாதார மானியத்தை அறிவித்தது ஃபேஸ்புக் நிறுவனம்.

இதில் ஃபேஸ்புக் இந்தியா, $4.3 மில்லியன் (ரூ.32 கோடி) அளவுக்கான மானியத்தை அறிவித்துள்ளது. இது இந்தியாவில் உள்ள டெல்லி , குர்கான் , மும்பை, ஹைதராபாத் மற்றும் பெங்களூர் ஆகிய நகரங்களில் உள்ள 3,000-க்கும் மேற்பட்ட சிறு தொழில்களுக்கு வழங்கப்படவுள்ளது.

இந்த மானியத்தில் பணம் மற்றும் விளம்பர கிரெடிட்களும் (Ad credits) அடங்கும். இதுகுறித்து ஃபேஸ்புக் இந்தியாவின் நிர்வாக இயக்குநர் மற்றும் துணைத் தலைவர் அஜித் மோகன், "இந்த மானியத் திட்டமானது எல்லா வகையான சிறு தொழில்களுக்கும் பொருந்தும். இதற்கு விண்ணப்பிக்க சிறு தொழில்கள் ஃபேஸ்புக் செயலிகளைப் பயன்படுத்தியிருக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை. மேலும், இந்த மானியத்தை வைத்துக்கொண்டு அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளலாம்" என்றார்.

ஃபேஸ்புக் ஜியோ புதிய கூட்டணி
ஃபேஸ்புக் ஜியோ புதிய கூட்டணி

சிறு தொழில்கள் ஃபேஸ்புக்கின் இலவச கார்டுகள் மற்றும் விளம்பர வரவுகளைப் பயன்படுத்தி, இணையம் மூலம் அதிக வாடிக்கையாளர்களை ஈட்ட முடியும். இதோடு வேண்டிய நேரத்தில் பண வரத்தும் அவர்களுக்கு கிடைக்கும்.

இதே போல், இன்ஸ்டாகிராமிலும் கொரோனா காலத்தில் தொழில்களை வளப்படுத்துவதற்கான வசதிகளைத் தந்துள்ளது. இவற்றையும் தொழில் செய்வோர் இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். இவற்றுடன் கொரோனா காலத்தில் சிறு தொழில்களின் நிலைமை பற்றிய ஆய்வறிக்கையையும் ஃபேஸ்புக் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதைப் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு (Organisation for economic co-operation and Development ) மற்றும் உலக வங்கியுடன் இணைந்து வெளியிட்டுள்ளது.

மீண்டுமொரு டெக் பபுள்?! திடீரென கூகுள், ஃபேஸ்புக் பங்குகள் சரிய காரணம் என்ன?

இதில் ஃபேஸ்புக்கில் உள்ள சிறு தொழில்களில் மூன்றில் ஒரு பங்குக்கும் மேற்பட்டவை வருகிற மாதங்களில் பண நெருக்கடியைச் சந்திக்க உள்ளது என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம், ஃபேஸ்புக், இந்தியாவில் உள்ள 41 சதவிகித சிறு தொழில்கள் இணையம் மூலமே கடந்த காலாண்டில் விற்பனையை மேற்கொண்டுள்ளன. இதனால் பாதிக்கும் மேற்பட்ட சிறு தொழில்கள் தங்களின் எதிர்காலம் நம்பிக்கையளிக்கும் விதமாக இருப்பதாகக் கூறியுள்ளது.

ஃபேஸ்புக்கை உலகம் முழுவதும் உள்ள 180 மில்லியன் சிறு தொழில்கள் பயன்படுத்துகின்றன. அதாவது, உலகம் முழுவதும் உள்ள 45 நபர்களில் ஒருவர் ஃபேஸ்புக் மூலம் தங்களது சிறு தொழிலை மேற்கொண்டு வருகின்றனர். இதில் சரியாக மூன்றில் ஒரு பங்கு (60 மில்லியன்) சிறு தொழில்கள் இந்தியாவில் உள்ளன.

Facebook vs Zoom
Facebook vs Zoom
gizbot.com

இந்தியாவை பொறுத்தவரை, சிறு தொழில்கள்தான் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகின்றன. இதனால்தான் ஏற்கெனவே ஃபேஸ்புக் நிறுவனம் ரிலையன்ஸின் ஜியோவில் 9.99% பங்குகளை வாங்கியுள்ளது. இதில் குறிப்பாக, இந்தியாவில் உள்ள சிறு தொழில்களைக் கணக்கில்கொண்டே இந்த முதலீட்டை செய்துள்ளது ஃபேஸ்புக் நிறுவனம்.

இந்த நிலையில், தற்போது மீண்டும் சிறு தொழில்களின் வளர்ச்சிக்கு உதவும் வகையில் பல நடவடிக்கைகளை ஃபேஸ்புக் நிறுவனம் மேற்கொண்டுவருவது குறிப்பிடத்தக்கது.

ஜியோ ஃபேஸ்புக் கூட்டணி... இ-காமர்ஸில் ஏற்படும் மாற்றங்கள்!
அடுத்த கட்டுரைக்கு