Published:Updated:

உலக நிதித் திட்டமிடல் தினம்: நீங்கள் கட்டாயம் பின்பற்றவேண்டிய 10 நிதி நிர்வாக அம்சங்கள்!

பணத்தைச் சம்பாதிப்பது என்பது முக்கியமானதுதான். ஆனால், அதைவிட முக்கியமானது சம்பாதித்த பணத்தைக் கொண்டு பக்காவாக நிதித் திட்டமிடல் செய்து வாழ்வது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதத்தின் முதல் புதன்கிழமை `உலக நிதித் திட்டமிடல் தினமாக (Financial Planing Day)' கொண்டாடப்படுகிறது. அதன்படி இன்று அக்டோபர் 6-ம் தேதி, உலக நிதித் திட்டமிடல் தினமாகும்.

ஒருவரின் சம்பளம் அல்லது வருமானத்தைச் சரியாக முதலீடு செய்வதில், நிர்வகிப்பதில் நிதித் திட்டமிடல் முக்கியப் பங்காற்றுகிறது. நிதித் திட்டமிடல் மேற்கொள்வது மூலம் செலவுகளைக் குறைத்து, முதலீட்டை அதிகப்படுத்துவதுடன், வருமான வரியைக் கணிசமாகக் குறைக்க முடியும். பட்ஜெட் போட்டு செலவு செய்வதன் மூலம் உங்களின் நிதி ஆதாரத்தை எப்போதும் வலிமையாக வைத்துக்கொள்ள முடியும்.

Investment
Investment
Image by Nattanan Kanchanaprat from Pixabay

பணத்தைச் சம்பாதிப்பது என்பது முக்கியமானதுதான். ஆனால், அதைவிட முக்கியமானது சம்பாதித்த பணத்தைக் கொண்டு பக்காவாக நிதித் திட்டமிடல் செய்து வாழ்வது. அப்போதுதான் வாழ்க்கையின் எந்தக் காலகட்டத்திலும் நிதி சார்ந்த சிக்கலை எதிர்கொள்ளாமல் மகிழ்ச்சியாக வாழ முடியும். அதற்கான 10 முக்கிய அம்சங்கள் இதோ...

1. காப்பீடு

நிதித் திட்டமிடலில் முதல்படி, இன்ஷூரன்ஸ் எடுப்பதாகும். வருமானம் ஈட்டும் நபரின் பெயரில் அவரின் ஆண்டு வருமானத்தைப்போல் குறைந்தபட்சம் சுமார் 12 - 15 மடங்குக்கு டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுப்பது அவசியம். மற்றும் ஒட்டுமொத்தக் குடும்பத்தினருக்கும் குறைந்த செலவில் கவரேஜ் அளிக்கும் ஃப்ளோட்டர் ஹெல்த் பாலிசியை எடுக்க வேண்டும்.

Health Insurance
Health Insurance

2. அவசர கால நிதி

இன்றைய காலகட்டத்தில் திடீர் செலவு எப்படி வரும் என்று யாராலும் கணிக்க முடியாது. அதனால், ஒரு குறிப்பிட்டத் தொகையை அவசரத்துக்கு எடுத்துச் செலவு செய்யும் விதமாக வங்கி சேமிப்புக் கணக்கு, எஃப்.டி, லிக்விட் மியூச்சுவல் ஃபண்டில் பிரித்துப் போட்டு வைத்திருக்க வேண்டும்.

`காசு விஷயத்தில் கணவன் - மனைவி சண்டை வேண்டாம்!' - நிதி ஆலோசகர் கூறும் அறிவுரை

3. ஓய்வுக்காலத் திட்டமிடல்

சொந்த வீடு, பிள்ளைகளின் படிப்பு, கல்யாணம் எனப் பல செலவுகள் பிற்காலத்தில் வரிசைகட்டி வந்தாலும், முதலில் ஆரம்பிக்க வேண்டிய முதலீடு ஓய்வுக்காலத்துக்கானதுதான். காரணம். மிக அதிக தொகுப்பு தொகை (கார்ப்பஸ்) இதில்தான் இருக்க வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

4. பணவீக்க விகிதம்

நமது முதலீட்டின் மூலம் பணவீக்க விகிதத்தைத் தாண்டிய வருமானம் கிடைத்தால்தான் வாழ்க்கைத் தேவைகளைச் சுலபமாக நிறைவேற்றிக்கொள்ள முடியும். அதனால், பண வீக்கத்தைவிட அதிக வருமானம் பெற பங்குச் சந்தை மற்றும் பங்குச் சந்தை திட்டங்களில் முதலீடு செய்யலாம்.

வங்கி டெபாசிட்டில் உங்கள் பணம் தூங்குகிறதா? இவற்றை ஏன் முயற்சி செய்து பார்க்கக்கூடாது? - 10

5. முதலீட்டுக் காலம்

பொதுவாக, முதலீட்டுக் காலம் மூன்று முதல் ஐந்து ஆண்டுக்கு மேற்பட்டிருப்பது அவசியம். அப்போதுதான் முதலீட்டாளர்களால் சந்தையின் ஏற்ற இறக்கத்தைத் தாண்டி அதிக வருமானம் பெற முடியும்.

முதலீடு
முதலீடு
பங்குச்சந்தை முதலீடு உங்களுக்கு சரிப்பட்டு வருமா? இதைப் படிச்சிட்டு முடிவெடுங்க! - 20

6. பங்குச் சந்தை ஃபார்முலா

பங்குச் சந்தை மற்றும் பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்ய ஒரு ஃபார்முலா உண்டு. அதாவது, முதலீடு செய்பவரின் வயதை 100-லிருந்து கழிக்கக் கிடைக்கும் எண்ணை சதவிகிதமாகப் பாவித்து, அந்த அளவுக்கு பங்குகளை ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். இதனால் முதலீட்டின் மீதான ரிஸ்க் குறையும். மீதியை கடன் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம்.

7. பிரித்து முதலீடு செய்தல்

ஏதாவது ஒரு சொத்துப் பிரிவில் மொத்த முதலீட்டையும் மேற்கொள்வது தவறு. ஃபிக்ஸட் டெபாசிட், தங்கம், ரியல் எஸ்டேட், கடன் சார்ந்த ஃபண்டுகள், ஈக்விட்டி ஃபண்டுகள் என முதலீட்டை, முதலீட்டாளரின் வயது, ரிஸ்க் எடுக்கும் திறன், தேவை போன்றவற்றின் அடிப்படையில் பிரித்து முதலீடு செய்வது அவசியம்.

முதலீடு
முதலீடு

8. தேவைக்கு ஏற்ற முதலீடு

எந்தத் தேவைக்கு எந்த முதலீட்டை மேற்கொள்வது அவசியம் எனப் பார்க்க வேண்டும். குறுகிய காலத்தில் தேவைப்படும் தொகையைப் பங்குச் சந்தையில், ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யக் கூடாது. அதேபோல், ஓய்வுக்காலத் தேவைக்கான தொகையைக் கடன் ஃபண்டுகள், ஃபிக்ஸட் டெபாசிட்டில் முதலீடு செய்யக் கூடாது.

9. முதலீட்டு நிர்வாகம்

எந்த முதலீடாக இருந்தாலும், குறைந்தது அதன் செயல்பாட்டை ஆறு மாதத்துக்கு ஒருமுறை கவனிப்பது அவசியம். தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஒரு ஃபண்ட் அல்லது பங்கு சிறப்பாகச் செயல்படவில்லை என்றால் சிறிது இழப்பு என்றாலும், வேறு நல்ல திட்டத்துக்கு முதலீட்டை மாற்றிவிடுவது நல்லது.

Rupee
Rupee
Photo by Ravi Roshan from Pexels
`100 ரூபாய்க்கும் தங்கம் வாங்கலாம்!' - முதலீட்டாளர்களுக்கு வரப்பிரசாதமா டிஜிட்டல் கோல்டு?

10. சொத்துகளை வாரிசுகளுக்குப் பிரித்தளித்தல்

நிதித் திட்டமிடலில் பொதுவாக 30 முதல் 55 வயதை முதலீட்டைக் குவிக்கும் நிலை (Accumalation) என்பார்கள். 56 வயது முதல் 70 வயது வரை முதலீட்டைப் பாதுகாக்கும் நிலை (Preservation) என்பார்கள். 70 வயதுக்குமேல், சேர்த்த சொத்துகளை வாரிசுகளுக்குப் பகிர்ந்தளித்தல் (Distribution) நிலையாகும்.

மேலே சொல்லப்பட்டிருக்கும் முக்கிய 10 அம்சங்களின் படி, ஒருவர் சரியாக நிதித் திட்டமிடல் செய்யும் பட்சத்தில், வாழ்க்கையின் பெரும்பாலான ரிஸ்க்குகளை எளிதாகச் சமாளிக்க முடியும் என்பது நிதர்சனமான உண்மை.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு