Published:Updated:

விரைவில் வெளியாகும் LIC IPO; போட்டி போடும் 16 வியாபார வங்கிகள்; என்ன காரணம்?

எல்.ஐ.சி
எல்.ஐ.சி

எல்.ஐ.சி ஐ.பி.ஒ வருவதையொட்டி சந்தை மிகப் பெரிய அளவில் உயரும் எனவும், மேலும், பல லட்சம் புதிய முதலீட்டாளர்களை இந்த ஐ.பி.ஒ பங்குச் சந்தைக்குள் கொண்டுவரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

மத்திய அரசு பொதுத்துறை பங்குகளை விற்பனை செய்து, அதன் மூலம் 2021-22-ம் நிதி ஆண்டில் ரூ.1.72 லட்சம் கோடி நிதி திரட்ட முடிவு செய்திருக்கிறது. இதன் ஒரு பகுதியாக கடன் இல்லாமல், அதிக சொத்து மதிப்புடன் இயங்கி வரும் எல்.ஐ.சி நிறுவனத்தின் பங்குகளை பங்குச்சந்தை மூலம் விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது.

எல்.ஐ.சி பங்கு வெளியீட்டின் மூலம் மட்டும் 90,000 கோடி ரூபாய் நிதி திரட்ட மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. இதன்மூலம் இந்திய வரலாற்றிலேயே மிகப்பெரிய ஐ.பி.ஓ வெளியீடாக இது இருக்கும் என நிபுணர்கள் குறிப்பிடுகிறார்கள். இதுவரை இந்த மதிப்பில் எந்தவொரு ஐ.பி.ஓ-வும் வெளியிடப்படவில்லை. இனியும் வெளியிட வாய்ப்பும் இல்லை எனவும் சொல்லப்பட்டு வருகிறது.

நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன்
LIC IPO: ஒப்புதல் அளித்த மத்திய அமைச்சரவைக் குழு; விரைவில் வெளியாகிறது LIC IPO?

எல்.ஐ.சி ஐ.பி.ஓ வெளியிடுவதற்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் வரும்போதும், இதை வெளியிடுவதிலிருந்து மத்திய அரசு பின் வாங்கப்போவதில்லை என திட்டவட்டமாக சொல்லி வந்தது. இந்நிலையில், கடந்த மாதம் எல்.ஐ.சியின் பங்கு வெளியீட்டுக்கு பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு அனுமதி அளித்தது. இதையடுத்து, இந்த பங்கு வெளியீட்டை நிர்வகிக்க விரும்பும் வியாபார வங்கிகள் (Merchant Banks) விண்ணப்பங்களை அனுப்பலாம் என முதலீட்டு மற்றும் பொது சொத்து மேலாண்மைத் துறை (Department of Investment and Public Asset Management (DIPAM)) கடந்த ஜூலை 15-ம் தேதி அறிவிப்பு வெளியிட்டது.

மிகப்பெரிய ஐ.பி.ஓ வெளியீடு இது என்பதால், வியாபார வங்கிகள் பலவும் நிர்வகிக்க ஆர்வம் காட்டி வருகின்றன. தற்போதைய நிலையில் 16 வியாபார வங்கிகள் எல்.ஐ.சி ஐ.பி.ஓ-வை நிர்வகிக்க விண்ணப்பங்களை அனுப்பியிருக்கின்றன. அதில், பி.என்.பி பரிபாஸ், சிட்டி குரூப் குளோபல் மார்கெட்ஸ் இந்தியா, டி.எஸ்.பி. மெரில் லிஞ்ச் (பி.ஓ.எஃப்.ஏ செக்யூரிட்டீஸ்) உள்ளிட்ட ஏழு சர்வதேச வியாபார வங்கிகள் விண்ணப்பங்களை அனுப்பியிருக்கின்றன.

எல்.ஐ.சி
எல்.ஐ.சி

இதைத் தவிர, கோல்டுமேன் சாக்ஸ் (இந்தியா) செக்யூரிட்டீஸ், ஹெச்.எஸ்.பி.சி. செக்யூரிட்டீஸ் அண்டு கேப்பிடல் மார்க்கெட்ஸ் இந்தியா, ஜே.பி.மோர்கன் இந்தியா, நோமுரா ஃபைனான்ஷியல் அட்வைசரி அண்டு செக்யூரிட்டீஸ் இந்தியா ஆகிய வியாபார வங்கிகளும் ஐ.பி.ஓ வெளியீட்டை நிர்வகிப்பதற்கான திட்டத்தை டி.ஐ.பி.ஏ.எம்-க்கு இன்று (ஆகஸ்ட் 24) விளக்கவுள்ளன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேலும், உள்நாட்டு வியாபார வங்கிகளான ஆக்ஸிஸ் கேப்பிடல், ஹெச்.டி.எஃப்.சி பேங்க், ஐ.சி.ஐ.சி.ஐ செக்யூரிட்டீஸ், ஐ.ஐ.எஃப்.எல் செக்யூரிட்டீஸ், டி.ஏ.எம் கேப்பிடல் அட்வைசர்ஸ், எஸ்.பி.ஐ கேப்பிடல் மார்கெட்ஸ், கோட்டக் மஹிந்திரா கேப்பிடல், யெஸ் செக்யூரிட்டீஸ், ஜே.எம்.ஃபைனான்ஷியல் ஆகிய ஒன்பது வியாபார வங்கிகள் புதன்கிழமை (ஆகஸ்ட் 25) ஐ.பி.ஓ நிர்வாகம் குறித்த திட்டத்தை விளக்க உள்ளன. இந்த 16 வியாபார வங்கிகளிலிருந்து ஏதேனும் 10 வியாபார வங்கிகளை எல்.ஐ.சி ஐ.பி.ஓ வெளியீட்டை நிர்வகிக்க டி.ஐ.பி.ஏ.எம் நியமிக்கும் எனத் தெரிகிறது.

ஐ.பி.ஓ
ஐ.பி.ஓ
OYO IPO: ஹோட்டல் துறையிலும் இறங்கும் மைக்ரோசாஃப்ட்; ஓயோ நிறுவனத்தில் ₹66,960 கோடி முதலீடு?

ஒரு நிறுவனம் ஐ.பி.ஓ மூலம் புதிய பங்குகளை வெளியிட முடிவு செய்த பிறகு, அந்த ஐ.பி.ஓ-வை நிர்வகிக்க குறிப்பிட்ட சில வியாபார வங்கிகளை டி.ஐ.பி.ஏ.எம் நியமிப்பது வழக்கம். அப்படி நியமிக்கப்படும் வியாபார வங்கிகள், ஐ.பி.ஓ வெளியீட்டின் அனைத்து விஷயங்களையும் கவனித்துக் கொள்ளும். இதன் மூலம் அந்த வியாபார வங்கிகளுக்கு ஒரு குறிப்பிட்ட தொகை கமிஷனாக கிடைக்கும். சமீபத்தில் வெளியான மிகப்பெரிய ஐ.பி.ஓ வெளியீடுகளில் ஒன்றான ஸொமேட்டோ ஐ.பி.ஓ-வை மார்கன் ஸ்டேன்லி இந்தியா, கோட்டக் மஹிந்திரா கேப்பிடல், கிரெடிட் சூசே இந்தியா, பி.ஓ.எஃப்.ஏ செக்யூரிட்டீஸ் இந்தியா, சிட்டி குரூப் குளோபல் மார்க்கெட்ஸ் இந்தியா ஆகிய வியாபார வங்கிகள் நிர்வகித்தது குறிப்பிடத்தக்கது.

எல்.ஐ.சி ஐ.பி.ஒ வருவதையொட்டி சந்தை மிகப் பெரிய அளவில் உயரும் எனவும், மேலும், பல லட்சம் புதிய முதலீட்டாளர்களை இந்த ஐ.பி.ஒ பங்குச் சந்தைக்குள் கொண்டுவரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு