Published:Updated:

முகேஷ் அம்பானியின் அசைக்க முடியாத கோட்டை: 20 ஆண்டுக்கால வெற்றியின் பின்னணி?

முகேஷ் அம்பானி
News
முகேஷ் அம்பானி

பேருக்காகவோ, போட்டிக்காகவோ எந்தத் துறையிலும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நுழையாது. மாறாக லாபம் ஈட்ட முடியும் என்று தெரிந்தால் மட்டுமே அந்தத் துறையில் களம் இறங்கும். லாபம் வராது என்று தெரிந்துவிட்டால் அந்தப் பக்கமே தலைவைக்க மாட்டார் முகேஷ் அம்பானி.

முகேஷ் அம்பானியின் அசைக்க முடியாத கோட்டை: 20 ஆண்டுக்கால வெற்றியின் பின்னணி?

பேருக்காகவோ, போட்டிக்காகவோ எந்தத் துறையிலும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நுழையாது. மாறாக லாபம் ஈட்ட முடியும் என்று தெரிந்தால் மட்டுமே அந்தத் துறையில் களம் இறங்கும். லாபம் வராது என்று தெரிந்துவிட்டால் அந்தப் பக்கமே தலைவைக்க மாட்டார் முகேஷ் அம்பானி.

Published:Updated:
முகேஷ் அம்பானி
News
முகேஷ் அம்பானி

திருபாய் அம்பானி தொடங்கிய ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக அவரின் மூத்த மகன் முகேஷ் அம்பானி பொறுப்பேற்று 20 ஆண்டுகள் ஆகின்றன. 20 ஆண்டுகளாக இந்தியத் தொழில்துறையின் அசைக்க முடியாத நிறுவனமாக ரிலையன்ஸ் இருந்துவருகிறது. முகேஷ் அம்பானியும் இந்தியாவின் பணக்காரர்கள் பட்டியலில் பல ஆண்டுகளாக முதல் இடத்திலேயே இருந்து வருகிறார்.

ஜூலை 2002-ல் ரிலையன்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் திருபாய் அம்பானி மரணமடைந்தார். அப்போது ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பை முகேஷ் அம்பானி ஏற்றார். அவர் தலைவராகப் பொறுப்பேற்றபோது நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.41,989 கோடியாக இருந்தது. இன்று ரிலையன்ஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.17 லட்சம் கோடிக்கும் மேல் வளர்ந்துள்ளது.

5ஜி அறிமுக விழாவில் பிரதமர் மோடியுடன் முகேஷ் அம்பானி
5ஜி அறிமுக விழாவில் பிரதமர் மோடியுடன் முகேஷ் அம்பானி

இத்தகைய வளர்ச்சியை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் எட்டுவதற்கு முகேஷ் அம்பானி செய்தவைதான் என்ன என்பதுதான் பெரும்பாலானோரின் இன்றைய கேள்வியாக இருக்கும். அதுவும் குறிப்பாக, பிசினஸ் செய்ய வேண்டும் என்று துடிப்போடு இருக்கும் இளைஞர்கள் முதல், ஏற்கெனவே பிசினஸில் ஈடுபட்டுவரும் தொழிலதிபர்கள் வரைக்கும் முகேஷ் அம்பானி ஒரு ரோல் மாடல் என்றால் மிகையாகாது. அவருடைய தலைமைப் பண்புகள்தான் இன்றுவரை அவரை அந்த சிம்மாசனத்தில் அமர வைத்திருக்கிறது. இந்த இடத்தை எட்டுவதற்கு அவர் பின்பற்றிய முக்கியமான விஷயங்களை இங்கு பார்க்கலாம்.

வாய்ப்பை அபகரித்தல்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு முக்கியமான காரணம் எங்கெல்லாம் பணம் பார்ப்பதற்கான வாய்ப்பு இருக்கிறதோ, அதை தேடிப்போய் எடுத்துக்கொள்ளும். இன்று டெக்ஸ்டைல் முதல் டெலிகாம் வரை அதன் கிளைகள் விரிவடைந்துகொண்டே வந்திருக்கின்றன. இந்நிறுவனம் களம் இறங்காத துறைகளே இல்லை எனலாம். ஒவ்வொரு முறை புதிய துறையில் அடியெடுத்து வைக்கும்போது அந்தத் துறையில் ஏற்கெனவே ஜாம்பவானாக உள்ளர்வர்களையே கலங்கடிக்க வைக்கும் அளவுக்கு அதன் தொடக்கம் இருக்கும். அதற்கு சமீபத்திய உதாரணம் டெலிகாம். டெலிகாம் துறையில் ரிலையன்ஸ் ஜியோவின் வருகை செய்த சம்பவம் என்னவென்று எல்லோருக்குமே தெரியும்.

லாபம் மட்டுமே இலக்கு

பெயருக்காகவோ, போட்டிக்காகவோ எந்தத் துறையிலும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நுழையாது. மாறாக லாபம் ஈட்ட முடியும் என்று தெரிந்தால் மட்டுமே அந்தத் துறையில் களம் இறங்கும். லாபம் வராது என்று தெரிந்துவிட்டால் அந்தப் பக்கமே தலைவைக்க மாட்டார் முகேஷ் அம்பானி. உதாரணமாக, விமான சேவையைச் சொல்லலாம். பெட்ரோலிய துறையில் பெரும் பங்களிப்பை ரிலையன்ஸ் நிறுவனம் செய்துகொண்டிருந்தாலும் விமான சேவைதுறையின் பக்கமே அவர் திரும்பவில்லை. ஆரம்பத்திலிருந்தே ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் ஆதார அடித்தளமாக இருப்பது மக்கள்தான்.

ரிலையன்ஸ் - முகேஷ் அம்பானி
ரிலையன்ஸ் - முகேஷ் அம்பானி

மக்கள் அதிகமாக நுகரும் பொருள்கள், சேவைகளில்தான் ரிலையன்ஸ் கவனம் செலுத்தும். ரீடெய்ல் என்று சொல்லப்படுகிறது நுகர்வு சந்தையின் அத்தனை வாய்ப்புகளையும் ரிலையன்ஸ் தன் வசம் வைத்திருக்கிறது. பெட்ரோலியம், டெக்ஸ்டைல், மீடியா, டெலிகாம், நிதி சேவைகள் என அனைத்துமே ஒட்டுமொத்த மக்களோடு நேரடியாகத் தொடர்புடையவை.

குடும்பம்தான் எல்லாமே

பிசினஸ் என்பது பரம்பரை பரம்பரையாக வளரக்கூடிய ஒன்று. அதற்கு குடும்பம் ரொம்பவே முக்கியம். முகேஷ் அம்பானிக்கும் எப்போதுமே குடும்பம்தான் முதலிடம். நிறுவனத்தின் வளர்ச்சிக்கு குடும்பத்தினரின் ஒற்றுமை மிகவும் அவசியம். அந்த ஒற்றுமையைத் தொடர்ச்சியாகப் பாதுகாத்து வருகிறார். குடும்ப உறுப்பினர்களை பிசினஸுக்குத் தயார் செய்வதிலிருந்து, அவர்களுக்கான பொறுப்புகளைப் பிரித்து தருவது வரை என சரியான நேரத்தில் எல்லாவற்றையும் பார்த்து பார்த்து செய்து வருகிறார். ஆடம்பரங்களை விரும்பாத இவர் குடும்ப உறுப்பினர்களின் திருமணம் போன்ற நிகழ்வுகளை மட்டும் எல்லோரும் வியக்கும் வண்ணம் அரங்கேற்றுவார். மற்றபடி இருக்கிற இடம் தெரியாமல் நிறுவனத்தின் வளர்ச்சிக்காக மட்டுமே இயங்கிவருபவர் முகேஷ் அம்பானி.

முகேஷ் அம்பானியின் அசைக்க முடியாத கோட்டை: 20 ஆண்டுக்கால வெற்றியின் பின்னணி?

முகேஷ் அம்பானியின் ஒவ்வொரு திட்டமிடலும், செயல்படுத்தும் விதமும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தை யாரும் அசைக்க முடியாத அளவுக்கு மாற்றியிருக்கிறது. தொடர்ந்து நிறுவனங்களைக் கையகப்படுத்துதல், கடன்களைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது என எல்லாவற்றையும் திறம்பட செயல்படுத்தி இருக்கிறார். ரிலையன்ஸ் குழுமத்தின் வளர்ச்சியைப் பற்றித் தெரிந்துகொள்ள சில புள்ளிவிவரங்களைப் பார்க்கலாம்.

1. ரிலையன்ஸ் குழுமத்தின் வருவாய் 2001-02 நிதியாண்டில் ரூ. 45,411 கோடியாக இருந்தது 2021-22 நிதியாண்டில் ரூ.7,92,756 கோடியாக உயர்ந்துள்ளது.

2. நிகர லாபம் 2001-02 நிதியாண்டில் ரூ.3,280 கோடியாக இருந்தது 2021-22 நிதியாண்டில் ரூ.67,845 கோடியாக உயர்ந்துள்ளது.

3. ரிலையன் நிறுவனத்தின் ஏற்றுமதி 2001-02 நிதியாண்டில் ரூ.11,200 கோடியாக இருந்தது 2021-22 நிதியாண்டில் ரூ.2,54,970 கோடியாக உயர்ந்துள்ளது.

ஆகாஷ் அம்பானி,  முகேஷ் அம்பானி
ஆகாஷ் அம்பானி, முகேஷ் அம்பானி

4. முகேஷ் அம்பானி தலைமையின் கீழ், 2006-ல் ரிலையன்ஸ் ரீடெய்ல், 2016- ரிலையன்ஸ் ஜியோ தொடங்கப்பட்டது. தொடங்கிய விரைவிலேயே ஜியோ நிறுவனத்தை கடனே இல்லாத நிறுவனமாக மாற்றினார். 5ஜி அலைக்கற்றையின் பெரும்பகுதி சந்தையையும் கைப்பற்றப்போகிறது.

5. ஜியோ மார்ட், நிதி சேவைகள் என புதுப்புது தொழில்களில் களம் காண்கிறது. புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறையையும் விட்டுவைக்கவில்லை.

ரிலையன்ஸின் வளர்ச்சிக்கு எல்லையே இல்லை என்பதுபோல அடுத்தடுத்து புதுப்புது முன்னெடுப்புகள் என விஸ்வரூபம் எடுத்துக்கொண்டே இருக்கிறது.