Published:Updated:

`சித்தார்த்தா வங்கிக் கணக்கில் இருந்த ரூ.2,000 கோடி எங்கே?!' -பீதியைக் கிளப்பும் விசாரணை அறிக்கை

சித்தார்த்தா

சித்தார்த்தா மரணம் தொடர்பாக காஃபி டே நிறுவனத்தின் வாரியம் சார்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

`சித்தார்த்தா வங்கிக் கணக்கில் இருந்த ரூ.2,000 கோடி எங்கே?!' -பீதியைக் கிளப்பும் விசாரணை அறிக்கை

சித்தார்த்தா மரணம் தொடர்பாக காஃபி டே நிறுவனத்தின் வாரியம் சார்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

Published:Updated:
சித்தார்த்தா

பங்குச்சந்தை தரகு நிறுவனத்தில் பயிற்சியாளராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கிய வி.ஜி.சித்தார்த்தா, காஃபி டே நிறுவனத்தைத் தொடங்கி ஒரு மிகப்பெரிய சாம்ராஜ்ஜியத்தையே உருவாக்கினார். இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்பு அவர் தற்கொலை செய்துகொண்டார். கடன் சுமை காரணமாக சித்தார்த்தா தற்கொலை செய்துகொண்டார் எனக் கூறப்படுகிறது. காஃபி டே நிறுவனத்துக்கு 6,500 கோடி ரூபாய் கடன் இருப்பதாகப் பொருளாதார வல்லுநர்கள் மதிப்பீடு செய்தனர். சித்தார்த்தா தற்கொலைக்குப் பிறகு, கடுமையான கடன் சுமையில் நிறுவனம் தத்தளித்து வருவதாகவும் கூறப்பட்டது.

காஃபி டே சித்தார்த்தா
காஃபி டே சித்தார்த்தா

வரி ஏய்ப்பு புகார்.. வருமானவரி சோதனை.. அதைத்தொடர்ந்து முடக்கப்பட்ட பங்குகள்.. கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே.சிவக்குமார் உடனான நட்பு.. உளவியல் பிரச்னை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் அவரின் மரணத்துக்கான காரணமாகக் கூறப்பட்டாலும் இதில் எதுமே அதிகாரபூர்வமாகத் தெரியவரவில்லை. இதனால் உண்மையான காரணங்கள் தெரியாமல் இதுவரை குழப்பமாகவே இருந்துவருகிறது சித்தார்த்தாவின் மரண விவகாரம். இதற்கிடையே, சித்தார்த்தா மரணம் தொடர்பாக காஃபி டே நிறுவனத்தின் வாரியம் சார்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த விசாரணையில் வெளிவந்துள்ள சில தகவல்கள் இப்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சித்தார்த்தாவுக்குச் சொந்தமான காஃபி டே வங்கிக் கணக்குகள் குறித்து இந்த வாரியம் விசாரணை மேற்கொண்டது. விசாரணையின் முடிவில் நூறு பக்க வரைவு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், சித்தார்த்தாவுக்குச் சொந்தமான காஃபி டே வங்கிக் கணக்கில் இருந்த பல பில்லியன் பணம் காணாமல் போயுள்ளது என்பது கண்டறியப்பட்டுள்ளது. மாயமான பண இந்திய மதிப்பில் ரூ.2,000 கோடி அளவு இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. எனினும் விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டவில்லை என்றும், முழுமையான விசாரணை முடியும் பட்சத்தில் இதன் மதிப்பு மாறுபடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சித்தார்த்தா
சித்தார்த்தா

சித்தார்த்தாவுக்கு நெருக்கமாக இருந்தவர்களிடம் இந்த விசாரணை நடத்தப்பட்டிருக்கிறது. விசாரணைக்கு இந்தியாவின் கூட்டாட்சி அமலாக்க நிறுவனத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற மூத்த அதிகாரி அசோக் குமார் மல்ஹோத்ரா தலைமை தாங்குகிறார். இந்தியாவின் முதன்மை நீதிமன்றத்தில் பயிற்சி பெற்ற ஒரு மூத்த வழக்கறிஞர் ஒருவர் இவருக்கு உதவிகரமாக இருந்து வருகிறார். சித்தார்த்தாவின் மரணத்துக்கு சுமார் ஒரு மாதத்திற்குப் பிறகு விசாரணை தொடங்கியது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மார்ச் 2019 நிலவரப்படி காஃபி டே அதன் இருப்புநிலைக் குறிப்பில் சுமார் 24 பில்லியன் பணம் வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. எனினும் சித்தார்த்தாவின் மரணத்திற்குப் பிறகு, நிறுவனம் கடுமையான பணப்புழக்க நெருக்கடியை எதிர்கொண்டது. மேலும் வங்கியில் இருந்த பணம் பூஜ்ஜியத்தைத் தொடும் அளவுக்குச் சென்றது. இதனால் அன்றாடச் செலவினங்களுக்காகப் போராடுவது மற்றும் ஊழியர்களுக்குச் சம்பளத்தைச் செலுத்துவதில் காஃபி டே சிரமத்தைச் சந்தித்தது என்கிறது இவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை. மேலும் காஃபி டே வாங்கிய கடன்கள் உள்ளூர்க் கடன் கொடுப்பவர்களிடமிருந்து அதிக வட்டி விகிதத்தில் சித்தார்த்தாவின் தனிப்பட்ட உத்தரவாதங்கள் அடிப்படையில் வாங்கப்பட்டுள்ளன.

சித்தார்த்தா
சித்தார்த்தா

வங்கிக் கடன்களுக்கு காஃபி தோட்டங்கள் பிணையாக வைக்கப்பட்டுள்ளன. கடன்களைப் பெறுவதற்காக சொத்துக்களுக்கான மதிப்பீடுகள் உயர்த்தப்பட்டதாகவும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மொத்தம் 100 பில்லியனுக்கும் அதிகமான அளவு கடன் தொகையால் சித்தார்த்தா கஷ்டப்பட்டு வந்ததாகவும், ஏற்கெனவே வாங்கிய கடன்களுக்கான வட்டியைத் திருப்பிச் செலுத்துவதற்காக அவர் மீண்டும் மீண்டும் கடன்கள் வாங்கியதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism