Published:Updated:

கால்நூற்றாண்டு கடந்த 4 கடன் ஃபண்ட்கள்: முதலீடு செய்யலாமா?

முதலீடு

நான்கு கடன் சந்தை சார்ந்த ஃபண்ட்கள் 25 ஆண்டுகளை கடந்துள்ளது. இந்த ஃபண்ட்கள் ஆரம்பத்தில் இருந்து சுமார் 6 முதல் 9 சதவிகிதம் வரை வருமானத்தை கொடுத்துள்ளன.

கால்நூற்றாண்டு கடந்த 4 கடன் ஃபண்ட்கள்: முதலீடு செய்யலாமா?

நான்கு கடன் சந்தை சார்ந்த ஃபண்ட்கள் 25 ஆண்டுகளை கடந்துள்ளது. இந்த ஃபண்ட்கள் ஆரம்பத்தில் இருந்து சுமார் 6 முதல் 9 சதவிகிதம் வரை வருமானத்தை கொடுத்துள்ளன.

Published:Updated:
முதலீடு

இந்தியாவில் நான்கு கடன் சந்தை மியூச்சுவல் ஃபண்ட்கள் கால் நூற்றாண்டை கடந்து சாதனை படைத்துள்ளன. முதலீட்டில் ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்கள், நிலையான வருமானம் எதிர்பார்ப்பவர்களுக்கு ஏற்றதாக கடன் சந்தை மியூச்சுவல் ஃபண்ட்கள் இருக்கின்றன.

முதலீடு
முதலீடு

குறிப்பாக, குறுகிய கால நிதித் தேவைகளுக்கு கடன் ஃபண்ட்களில் முதலீடு செய்யப்படுகிறது. இவை மிக நீண்ட காலமாக வங்கி மற்றும் ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு மாற்றாக முதலீடு செய்யப்பட்டு வருகிறது. 

 ஆதித்ய பிர்லா சன்லைஃப் இன்கம்ஃபண்ட், டி.எஸ்.பி பாண்ட் ஃபண்ட், ஹெச்.டி.எஃப்.சி டைனமிக் டெஃப்ட் ஃபண்ட், ஜே.எம் மீடியம் டு லாங்க் டூரேஷன் ஃபண்ட் ஆகிய கடன் சந்தை சார்ந்த ஃபண்ட்கள் 25 ஆண்டுகளை கடந்துள்ளது. இந்த ஃபண்ட்கள் ஆரம்பம் முதல் சுமார் 6 முதல் 9 சதவிகிதம் வரை வருமானத்தை கொடுத்துள்ளன.

மேற்கண்ட 4 ஃபண்ட்களில் ஒன்று மட்டும் சூழ்நிலைக்கு ஏற்ப கடன் பத்திர முதலீட்டை மாற்றி அமைக்கும் டைனமிக் பாண்ட் ஃபண்ட் ஆகும். மற்ற மூன்று திட்டங்களும் குறுகிய கால முதிர்வை கொண்ட கடன் பத்திரங்களில் முதலீடு செய்யும் கடன் ஃபண்ட்களாகும்.

கடந்த 10 மாதங்களாக இந்திய ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை அதிகரித்து வருவது இந்தக் கடன் ஃபண்ட்களுக்கு சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது. பொதுவாக, கடனுக்கான வட்டி விகிதம் உயர்ந்தால் கடன் ஃபண்ட்களின் வருமானம் குறையும். இதேபோல், கடனுக்கான வட்டி விகிதம் குறைந்தால், கடன் ஃபண்ட்களின் வருமானம் அதிகரிக்கும். இந்த ஃபண்ட்கள் ஒவ்வொன்றை பற்றியும் தனித் தனியாக பார்ப்போம்.

முதலீடு
முதலீடு

ஜே.எம் மீடியம் டு லாங்க் டூரேஷன் ஃபண்ட்

ஜே.எம் மீடியம் டு லாங்க் டூரேஷன் ஃபண்ட், இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்ட முதல் கடன் ஃபண்ட் ஆகும். ஆரம்பித்து கிட்டத்தட்ட 27 ஆண்டுகள் ஆகிறது. இந்த ஃபண்ட் மூலம் சுமார் 20 கோடி ரூபாய் நிர்வகிக்கப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளில் இந்த ஃபண்ட் மீடியம் டு லாங்க் டூரேஷன் ஃபண்ட் பிரிவில் சுமாராகதான் வருமானம் கொடுத்து வருகிறது.

மேலும் கடந்த 10 ஆண்டு, ஐந்தாண்டு, மூன்றாண்டு மற்றும் ஓராண்டு காலத்தில் இதன் பெஞ்ச்மார்க் வருமானத்தை விட குறைவாகதான் வருமானம் கொடுத்து வருகிறது. கடந்த ஓராண்டு காலத்தில் சுமார் 0.35%தான் வருமானம் கொடுத்திருக்கிறது. மேலும், இந்த ஃபண்ட் அதிக ஏற்ற இறக்கத்துக்கு உட்பட்டதாகும். இந்த ஃபண்ட் பிரிவிலுள்ள இதர ஃபண்ட்களுடன் ஒப்பிடும் போது இது சிறப்பாக செயல்படவில்லை. ஆரம்பம் முதல் ஆண்டுக்கு சராசரியாக 6 சதவிகிதம் வருமானம் கொடுத்துள்ளது.

ஆதித்ய பிர்லா சன்லைஃப் இன்கம்ஃபண்ட்

இந்த ஃபண்ட் மீடியம் டு லாங்க் டூ ரேஷன் பிரிவை சேர்ந்ததாகும். ரூ.1538 கோடியை நிர்வகித்து வருகிறது. இதன் பெஞ்ச்மார்க்கை விட அதிக வருமானத்தை தொடர்ந்து அளித்து வருகிறது. கடந்த ஓராண்டில் சுமார் 3 சதவிகித வருமானத்தைதான் தந்திருக்கிறது. இந்த ஃபண்ட் அதன் ஃபண்ட் பிரிவை ஒப்பிடும்போது அதிக ஏற்ற இறக்கத்தை கொண்டிருக்கிறது. இந்த ஃபண்ட் ஆரம்பம் முதல் ஆண்டுக்கு சராசரியாக 9 சதவிகிதம் வருமானம் கொடுத்துள்ளது.

கால்நூற்றாண்டு கடந்த 4 கடன் ஃபண்ட்கள்: முதலீடு செய்யலாமா?

ஹெச்.டி.எஃப்.சி டைனமிக் டெஃப்ட் ஃபண்ட்

இந்த ஃபண்டின் போர்ட்ஃபோலியோ, அதன் பெயருக்கு ஏற்ப வட்டி விகித மாற்றத்தை அனுசரித்து, நிதி மேலாளர் முடிவுக்கு ஏற்ப மாற்றி அமைக்கப்படும். இந்த ஃபண்ட் மூலம் ரூ.505  கோடி நிர்வகிக்கப்படுகிறது.

கடந்த ஓராண்டில் சுமார் 1.10 சதவிகித வருமானத்தைதான் தந்திருக்கிறது. இந்தக் காலத்தில் இந்த ஃபண்ட் பிரிவின் சராசரி வருமானம், 2.47 சதவிகிதமாக உள்ளது. இந்த ஃபண்ட் ஆரம்பம் முதல் ஆண்டுக்கு சராசரியாக 8.15 சதவிகிதம் வருமானம் கொடுத்துள்ளது.

டி.எஸ்.பி பாண்ட் ஃபண்ட்

இது ஒரு மீடியம் டூரேஷன் ஃபண்ட் ஆகும். இந்த ஃபண்ட் ரூ. 341 கோடியை நிர்வகித்து வருகிறது. கடந்த ஓராண்டில் இந்த ஃபண்ட் பிரிவின் சராசரியை விட குறைவான வருமானத்தைதான் கொடுத்துள்ளது. இந்த ஃபண்ட் ஆரம்பம் முதல் ஆண்டுக்கு சராசரியாக 7.75% சதவிகிதம் வருமானம் கொடுத்துள்ளது.

சி.பாரதிதாசன், நிதி ஆலோசகர், https://www.wmsplanners.com
சி.பாரதிதாசன், நிதி ஆலோசகர், https://www.wmsplanners.com

முதலீடு செய்யலாமா?

ஒரு மியூச்சுவல் ஃபண்ட் திட்டம் நீண்ட காலமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதால் அதில் முதலீடு செய்யத் தேவையில்லை. முதலீட்டுக் காலத்தை பொறுத்தும் கடந்த ஓராண்டு, மூன்றாண்டு, ஐந்தாண்டுகளில் பணவீக்க விகிதத்தை விட அதிக வருமானம் தந்திருக்கும் கடன் ஃபண்ட்களை தேர்வு செய்ய வேண்டும். கடன் ஃபண்ட் முதலீட்டில் மூன்றாண்டுக்கு மேற்பட்ட நிலையில் நீண்ட கால மூலதன ஆதாயத்துக்கு பணவீக்க சரிக் கட்டலுக்கு பிறகு 20% வரிக் கட்டினால் போதும்.  அந்த வகையில் வரிக்கு பிந்தைய நிலையில் கடன் ஃபண்ட் வருமானம், ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி வருமானத்தை விட அதிகமாக இருக்கும்.

-சி.பாரதிதாசன், நிதி ஆலோசகர், https://www.wmsplanners.com