Published:Updated:

`2047-ல் பதஞ்சலியின் புகழ் பொன் எழுத்துகளால் பொறிக்கப்படும்' - பாபா ராம்தேவின் அடுத்த திட்டம்

பாபா ராம்தேவ்

பதஞ்சலி குழுமத்தின் ஆண்டு விற்பனை ரூ.40,000 கோடியாக இருக்கிறது. அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.1 லட்சம் கோடி திரட்ட திட்டமிட்டுள்ளதாகவும், மொத்தமாக பதஞ்சலி குழுமத்தின் சந்தை மதிப்பை ரூ.5 லட்சம் கோடியாக உயர்த்தவும் இலக்கு வைத்துள்ளதாக பாபா ராம்தேவ் கூறியுள்ளார்.

`2047-ல் பதஞ்சலியின் புகழ் பொன் எழுத்துகளால் பொறிக்கப்படும்' - பாபா ராம்தேவின் அடுத்த திட்டம்

பதஞ்சலி குழுமத்தின் ஆண்டு விற்பனை ரூ.40,000 கோடியாக இருக்கிறது. அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.1 லட்சம் கோடி திரட்ட திட்டமிட்டுள்ளதாகவும், மொத்தமாக பதஞ்சலி குழுமத்தின் சந்தை மதிப்பை ரூ.5 லட்சம் கோடியாக உயர்த்தவும் இலக்கு வைத்துள்ளதாக பாபா ராம்தேவ் கூறியுள்ளார்.

Published:Updated:
பாபா ராம்தேவ்

பாபா ராம்தேவையும் சர்ச்சையையும் பிரிக்க முடியாது என்றே சொல்லலாம். சமீப காலங்களில் பதஞ்சலி குழுமத்துக்கு எதிராகவும் அதன் நிறுவனர்களில் ஒருவரான பாபா ராம்தேவ் பற்றியும் தொடர்ந்து பல்வேறு அவதூறு செய்திகள் பரவி வருகின்றன.

குறிப்பாக, இவர் அலோபதி மருத்துவர்களை இழிவுபடுத்திய தாகக் கடுமையான விமர்சனத்துக்குள்ளானார். இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றமே அவருக்கு அறிவுரை வழங்கியது. இப்படி தொடர்ந்து சர்ச்சையில் இருந்துவந்தாலும் அடுத்தடுத்து பதஞ்சலி நிறுவனத்தின் வளர்ச்சியை நோக்கி அசராமல் நகர்ந்துகொண்டே இருக்கிறார்.

பாபா ராம்தேவ்
பாபா ராம்தேவ்

தற்போது அடுத்த 5 ஆண்டுகளுக்கான வளர்ச்சி திட்டங்களை அடுக்கி உள்ளார். பதஞ்சலி குழுமத்தில் தற்போது பதஞ்சலி ஆயுர்வேதம், பதஞ்சலி ஃபுட்ஸ், பதஞ்சலி வெல்னெஸ், பதஞ்சலி மெடிசின், பதஞ்சலி லைஃப்ஸ்டைல் ஆகிய 5 நிறுவனங்கள் இயங்கிவருகின்றன. இவற்றில் பதஞ்சலி ஃபுட்ஸ் நிறுவனம் மட்டும் பங்குச் சந்தையில் ஏற்கெனவே பட்டியலிடப்பட்டுள்ளது. மற்ற 4 நிறுவனங்களும் பட்டியல் இடப்படவில்லை.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்நிலையில் அடுத்த 5 ஆண்டுகளில் பதஞ்சலியின் பிற 4 நிறுவனங்களையும் ஒன்றன் பின் ஒன்றாக பங்குச் சந்தையில் பட்டியலிடப்படும் என பாபா ராம்தேவ் கூறியிருக்கிறார். இந்த நிறுவனங்கள் சார்பில் பொதுப் பங்குகளை வெளியிட்டு விற்பனை செய்து நிதி திரட்ட திட்டமிட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.

தற்போது பதஞ்சலி குழுமத்தின் ஆண்டு விற்பனை ரூ.40,000 கோடியாக இருக்கிறது. அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.1 லட்சம் கோடி திரட்ட திட்டமிட்டுள்ளதாகவும், மொத்தமாக பதஞ்சலி குழுமத்தின் சந்தை மதிப்பை ரூ.5 லட்சம் கோடியாக உயர்த்தவும் இலக்கு வைத்துள்ளதாகக் கூறினார்.

பதஞ்சலி வெல்னெஸ்
பதஞ்சலி வெல்னெஸ்

மேலும் பதஞ்சலி வெல்னெஸ் நிறுவனத்தின் கீழ் 1000 IPD, OPD மையங்களை அமைக்கத் திட்டமிட்டுள்ளதாகவும், இந்தியா மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் பதஞ்சலி மையங்களைத் தொடங்கிவிருப்பதாகவும் கூறியவர், அலோபதி மருத்துவத்துக்கு மாற்றாக இந்தியாவின் பாரம்பர்ய மருத்துவத்தை முன்னிறுத்த அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டுவருவதாகவும் கூறினார்.

2047-ல் இந்தியா தனது நூற்றாண்டு சுதந்திர தின விழாவைக் கொண்டாடும்போது, நாட்டின் வளர்ச்சியில் பதஞ்சலி அளித்த பங்களிப்பு பொன் எழுத்துகளால் பொறிக்க தீர்மானம் மேற்கொண்டுள்ளோம்.

சுதேசி தன்மையை ஊக்குவித்து நாட்டை தன்னிறைவு அடையச் செய்யும் செயல்களில் பதஞ்சலி தொடர்ந்து தன்னை ஈடுபடுத்தி உள்ளது என்று கூறியுள்ளார்.