பணம். சும்மா சொல்லி பார்க்கவே எல்லோருக்கும் அவ்வளவு பிடிக்கும். சம்பாதிக்க பிடிக்காதா. அதுவும் பங்குச் சந்தையில் முதலீடு செய்து அதிக அளவில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்கிற ஆசை எல்லோருக்குமே இருக்கிறது.
ஆனால், பங்குச் சந்தையைப் பற்றி தெரியாமல் எப்படி அதில் முதலீடு செய்வது? பங்குச் சந்தையில் நஷ்டம் அடையாமல் எப்படி நம்முடைய முதலீட்டை பாதுகாப்பது போன்ற விஷயங்களெல்லாம் தெரிந்துகொள்ள வேண்டிய ஆர்வம் உருவாவது இயல்பானதே.
இதுபோன்ற ஆர்வமுடையவர்களுக்குத் தொடர்ந்து நாணயம் விகடன் தீனி போட்டுக்கொண்டே இருக்கிறது. இப்போதும்கூட வருகிற ஜூன் 18, 2022 (சனிக்கிழமை) காலை 10.30 மணி - 12 மணி வரையில் பங்குச் சந்தை குறித்த கட்டண பயிற்சி வகுப்பை நடத்த உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் பங்குச் சந்தை முதலீடு: செய்யக் கூடியதும், செய்யக் கூடாததும்..!' என்ற தலைப்பில் ஆடிட்டர் சிவராம கிருஷ்ணன் (நிறுவனர், www.sinceresyndication.com) உரையாற்ற உள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
பங்குச் சந்தையில் எப்படி செயல்பட வேண்டும், என்னென்ன முடிவுகளை எப்படி எடுக்க வேண்டும் உள்ளிட்ட விஷயங்களை விரிவாகப் பகிர்ந்துகொள்ள இருக்கிறார். https://bit.ly/3MNPbgJ என்ற லிங்கில் முன் பதிவு செய்து நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நீங்கள் பயன்பெறலாம். இந்த நிகழ்ச்சிக்கு பயிற்சிக் கட்டணம் ரூ.300.