Published:Updated:

5% ஜிஎஸ்டி : ஆவின் பொருள்கள் விலை அதிகரிப்பு - என்னென்ன எவ்வளவு உயர்வு?

ஆவின் பால் பொருள்கள்

தொடர்ந்து அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்ந்து வருகிறது. அரிசி விலை உயர்ந்த நிலையில் தற்போது பால் பொருள்களின் விலை உயர்ந்துள்ளது. இதனால் மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாவார்கள். குடும்பங்களின் மாதாந்தர பட்ஜெட் உயரும். அவர்களின் சேமிப்பும் முதலீடும் குறையும் நிலை உண்டாகும்.

5% ஜிஎஸ்டி : ஆவின் பொருள்கள் விலை அதிகரிப்பு - என்னென்ன எவ்வளவு உயர்வு?

தொடர்ந்து அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்ந்து வருகிறது. அரிசி விலை உயர்ந்த நிலையில் தற்போது பால் பொருள்களின் விலை உயர்ந்துள்ளது. இதனால் மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாவார்கள். குடும்பங்களின் மாதாந்தர பட்ஜெட் உயரும். அவர்களின் சேமிப்பும் முதலீடும் குறையும் நிலை உண்டாகும்.

Published:Updated:
ஆவின் பால் பொருள்கள்

சமீபத்தில் நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் தயிர், லஸ்ஸி, மோர் உள்ளிட்ட பால் பொருள்களுக்கு 5 சதவிகித ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டதை அடுத்து, பால் பொருள்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்கள் தயிர், லஸ்ஸி, மோர் ஆகியவற்றின் விலையை ரூ.4 முதல் ரூ.10 உயர்த்தி உள்ளன.

ஆவின்
ஆவின்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்நிலையில் ஆவின் பொருள்களின் விலையும் உயருமா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. ஆனால், விலை உயர்த்தும் வாய்ப்பில்லை என பால்வளத்துறை அமைச்சர் தெரிவித்தார். ஆனால், ஆவின் பொருள்களின் விலை இன்று முதல் உயர்த்தப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தயிர், லஸ்சி, மோர் உள்ளிட்ட பால் பொருள்களுக்கு 5 சதவிகித ஜி.எஸ்.டி வரி விதிக்கப்பட்டதை அடுத்து, ஆவின் பொருள்களின் விலை உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆவின் நிறுவனம்
ஆவின் நிறுவனம்

அதன்படி ஆவின் நெய் ஒரு லிட்டர் விலை ரூ.535-லிருந்து ரூ.580 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அரை லிட்டர் நெய் ரூ.15 விலை உயர்த்தப்பட்டுள்ளது. 200 மி. நெய் ரூ.10-ம், 100 மி. நெய் ரூ.5-ம் உயர்த்தப்பட்டுள்ளது.

அதேபோல் தயிர் அரை லிட்டர் ரூ.30-லிருந்து ரூ.35 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 100 கிராம் தயிர், ரூ.10-லிருந்து ரூ.12 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

பிரீமியம் தயிர் ரூ.100 லிருந்து ரூ.120 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. புரோபயாடிக் லஸ்ஸி ரூ.27-ல் இருந்து ரூ.30 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

200 மில்லி மோர் ரூ.10லிருந்து ரூ.12 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதேசமயம் ஆவின் பாலின் விலையில் எந்த மாற்றமும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆவின்
ஆவின்

இந்த விலை உயர்வு இன்று முதல், அனைத்து ஆவின் விற்பனை மையங்கள், முகவர் மையங்களிலும் நடைமுறைக்கு வரும் எனக் கூறப்பட்டுள்ளது.

தொடர்ந்து அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்ந்துகொண்டே வருகிறது. அரிசி விலை உயர்ந்த நிலையில் தற்போது பால் பொருள்களின் விலை உயர்ந்துள்ளது.

இதனால் மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். குடும்பங்களின் மாதாந்தர பட்ஜெட் உயரும். அவர்களின் சேமிப்பும் முதலீடும் குறையும் நிலை உண்டாகும்.