Published:Updated:

அட்சய திரிதியை விற்பனை... தமிழகத்தில் 18,000 கிலோ தங்கம்!

தங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தங்கம்

தங்கம்

அட்சய திரிதியை விற்பனை... தமிழகத்தில் 18,000 கிலோ தங்கம்!

தங்கம்

Published:Updated:
தங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தங்கம்

தீபாவளி, பொங்கல் பண்டிகைப் போல அட்சய திரிதியை நாளையும் மாற்றி விட்டார்கள் மக்கள். மே 3-ம் தேதி அட்சய திரிதியை நாளில் மட்டும் இந்தியாவில் ரூ.15,000 கோடி மதிப்பிலான தங்கம் விற்பனை ஆகியுள்ளதாக அனைத்திந்திய தங்க விற்பனை யாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் மட்டும் 18,000 கிலோ விற்பனை ஆகியிருப்பதாகக் கூறப்படுகிறது.

அட்சய திரிதியை நாளில் தங்கம் விற்பனை எப்படி இருந்தது என்பது குறித்து சென்னை தங்கம் மற்றும் வைர நகை விற்பனையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜெயந்திலால் சலானி யிடம் பேசினோம்.

ஜெயந்திலால் சலானி
ஜெயந்திலால் சலானி

“கொரோனா காரணமாகக் கடந்த இரண்டு ஆண்டுகள் அட்சய திரிதியை விற்பனை ஆன்லைனில் நடந்த நிலையில், இந்த ஆண்டு மிக அமோகமாகக் கொண்டாடப்பட்டது. அதிகாலையிலேயே நகைக்கடைகளில் மக்கள் குவிந்தார்கள். நள்ளிரவு வரை தங்கம் வாங்கும் ஆர்வம் மக்களிடம் குறையவே இல்லை. மக்களுக்குத் தங்கத்தின் மீது மோகம் என்று சொல்வதைவிட, தங்கத்தின் முக்கியத்துவம் குறித்து மக்கள் தெரிந்து வைத்திருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

சமீப காலங்களில் பல்வேறு பொருளாதார நெருக்கடிகளைத் தொடர்ந்து பார்த்து வருகிறோம். கொரோனா காலத்திலும் சரி, தற்போது இலங்கை போன்ற நாடுகளிலும் சரி பொருளாதார நெருக்கடி என்று வரும்போது தங்கம்தான் கைகொடுப்பதாக இருக்கிறது. பொருளாதார நெருக்கடிக்குள்ளாகி நாடு திவால் ஆகும்போது அரசு உத்தரவாதம் அளித்த ரூபாய் நோட்டுகள்கூட மதிப்பிழந்து விடுகின்றன. ஆனால், தங்கத்தின் மதிப்பு உயர்ந்துகொண்டேதான் இருக்கிறது.

என்னதான் கோல்டு பாண்டுகள் வந்தாலுமே பிசிக்கல் தங்கத்தின் மீதான ஆர்வம் அப்படியே தான் இருக்கிறது. கோல்டு பாண்டுகள் அரசுகளால் வெளியிடப் படுகின்றன. அரசுகள் நெருக்கடிக்குள்ளாகும்போது அவை வெளி யிடும் கோல்டு பாண்டுகளும் சிக்கலுக் குள்ளாகும். ஆனால், கையிலிருக்கும் தங்கம் எதற்கும் ஈடாகாது. இந்த ஆண்டு விற்பனை அமோகம்தான்” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism