Published:Updated:

10 நிமிடத்தில் மதுபானம் டோர் டெலிவரி; எங்கு தெரியுமா?

மதுபானம்

இந்தியாவில் முதல் முறையாக மதுபானத்தை 10 நிமிடத்தில் டெலிவரி செய்யும் சேவையை இன்னோவென்ட் டெக்னாலஜிஸ் அறிமுகம் செய்துள்ளது. Booozie தளத்தில் ஆர்டர் செய்ததும் டெலிவரி ஏஜெண்ட்கள் மதுபான கடைகளிலிருந்து வாங்கி அடுத்த 10 நிமிடத்தில் வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்கிறார்களாம்.

10 நிமிடத்தில் மதுபானம் டோர் டெலிவரி; எங்கு தெரியுமா?

இந்தியாவில் முதல் முறையாக மதுபானத்தை 10 நிமிடத்தில் டெலிவரி செய்யும் சேவையை இன்னோவென்ட் டெக்னாலஜிஸ் அறிமுகம் செய்துள்ளது. Booozie தளத்தில் ஆர்டர் செய்ததும் டெலிவரி ஏஜெண்ட்கள் மதுபான கடைகளிலிருந்து வாங்கி அடுத்த 10 நிமிடத்தில் வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்கிறார்களாம்.

Published:Updated:
மதுபானம்

கொரோனா தொற்றுக் காலத்தில் கடைகள் மூடப்பட்ட நிலையில் பல முன்னணி நிறுவனங்கள் உணவு, மருந்து, மளிகை பொருட்கள், காய்கறிகள் போலவே மதுபானத்தையும் டோர் டெலிவரி செய்ய முயற்சி செய்தது. ஆனால், பெரும்பாலான மாநிலங்கள் மறுப்பு தெரிவித்த நிலையில் தற்போது முதல் முறையாக கொல்கத்தா மாநிலம் மட்டும் மதுபானத்தை ஆன்லைன் டெலிவரி செய்ய அனுமதி அளித்துள்ளது.

கொல்கத்தா மாநிலத்தில் மதுபானம் ஆர்டர் செய்யப்பட்ட 10 நிமிடத்தில் ஹோம் டெலிவரி செய்யும் சேவையை மேற்கொள்ள ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனத்துக்கு அம்மாநில அரசு அனுமதி அளித்துள்ளது.

மதுபானம்
மதுபானம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஹைதராபாத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் இன்னோவென்ட் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் Booozie என்ற இணையதளம் வாயிலாக இந்த சேவையைத் துவங்கியுள்ளது. இந்தியாவிலேயே முதல் முறையாக மதுபானத்தை 10 நிமிடத்தில் டெலிவரி செய்யும் சேவையை இன்னோவென்ட் டெக்னாலஜிஸ் அறிமுகம் செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

Booozie தளத்தில் ஆர்டர் செய்ததும் டெலிவரி ஏஜெண்ட்கள் அருகில் இருக்கும் மதுபான கடைகளுக்குச் சென்று குறித்த ஆர்டரில் இருக்கும் மதுபானங்களை வாங்கிக்கொண்டு அடுத்த 10 நிமிடத்தில் வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்யும் சேவை அளிக்கிறது.

மதுபானம்
மதுபானம்
சித்தரிக்கப்பட்ட படம்

இந்த டெலிவரி சேவையில் செயற்கை நுண்ணறிவு உட்படப் பல தொழில்நுட்பங்கள் இருக்கும் காரணத்தால் குறைந்த செலவில் மதுபானத்தை டெலிவரி செய்ய முடியும் என Booozie இணை நிறுவனர் மற்றும் CEO விவேகானந்த் பாலிஜேபள்ளி தெரிவித்துள்ளார்.

'குடி'மகன்கள் பலர் இந்த சேவையை விரும்பினாலும், குடிமக்கள் பல கோடி பேர் எதிர்த்து வருகின்றனர். கூட்ட நெரிசலை தவிர்க்க தமிழ்நாட்டில் இதுபோன்ற சேவையை கொண்டு வரலாமே? என்று சமூகவலைத்தளங்களில் சிலர் பதிவிடுகின்றனர். அரசு விழித்துக்கொள்ள வேண்டும். இதுவும் வேலைவாய்ப்புதானே நினைத்துவிடக் கூடாது என்கின்றனர் டாஸ்மாக்கை மூட வேண்டும் என்கிற மனநிலையில் இருப்பவர்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism