Published:Updated:

``எல்லா ஊர் ஸ்பெஷல் ஸ்நாக்ஸும் ஒரே கடையில கிடைக்கும்..!'' - அசத்தும் சீர்காழி தம்பதியர்!

இளஞ்சூரியன் - லாவண்யா தம்பதி ( படம்: பா.பிரசன்ன வெங்கடேஷ் )

இங்குள்ள சிற்றுண்டி வகைகள் குறைந்தபட்சம் ரூ.12 முதல் அதிகபட்சம் ரூ.60 என்ற விலையில்தான் தருகிறோம். திருமணம் உள்ளிட்ட முக்கிய நிகழ்ச்சிகளுக்கு நிறைய ஆர்டர் தருகிறார்கள். இன்டர்நெட் மூலம் சமையல் வகை அறிந்து அனைத்தையும் தயாரிப்பவர் என் மனைவி மட்டும்தான்.

``எல்லா ஊர் ஸ்பெஷல் ஸ்நாக்ஸும் ஒரே கடையில கிடைக்கும்..!'' - அசத்தும் சீர்காழி தம்பதியர்!

இங்குள்ள சிற்றுண்டி வகைகள் குறைந்தபட்சம் ரூ.12 முதல் அதிகபட்சம் ரூ.60 என்ற விலையில்தான் தருகிறோம். திருமணம் உள்ளிட்ட முக்கிய நிகழ்ச்சிகளுக்கு நிறைய ஆர்டர் தருகிறார்கள். இன்டர்நெட் மூலம் சமையல் வகை அறிந்து அனைத்தையும் தயாரிப்பவர் என் மனைவி மட்டும்தான்.

Published:Updated:
இளஞ்சூரியன் - லாவண்யா தம்பதி ( படம்: பா.பிரசன்ன வெங்கடேஷ் )

``இந்தியாவில் பல நகரங்களில் பெயர் பெற்று விளங்கும் சுவையான சிற்றுண்டி வகைகளை ஒரே இடத்தில் தர முடியுமா?” - முடியும் என ஆர்வத்துடன் தயாரித்து வழங்கி, சாதனை படைத்து வருகிறார்கள் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியைச் சேர்ந்த இளஞ்சூரியன் - லாவண்யா தம்பதியர்.

PGS
PGS
படம்: பா.பிரசன்ன வெங்கடேஷ்

இவர்கள் இருவருமே ஃபுட் டெக்னாலஜியில் பட்டம் படித்தவர்கள். பல நிறுவனங்களில் பணிபுரிந்து, கொரோனா காலத்தில் உள்ளூருக்கு வந்தவர்கள். கொரோனா காலத்தில் பலரும் புதுமையாக பிசினஸ் செய்வதைப் பார்த்த இவர்கள், ``நாமே புதுமையாக ஒரு தொழிலை செய்தால் என்ன?” என்ற எண்ணம் தோன்றவே, பி.ஜி.எஸ். வெஜிடேரியன் ஃபுட் கிளப்” என்கிற கடையைத் திறந்துவிட்டனர். தினந்தோறும் மாலை வேளைகளில் இங்கு தயாரிக்கப்படும் இயற்கை சிற்றுண்டியை ருசிப்பதற் கென்றே பெரும் கூட்டம் காத்திருக்கிறது. ஒரு மாலை வேளையில் சிற்றுண்டி விற்பனையில் பிசியாக இருந்த இளஞ்சூரியன் - லாவண்யா தம்பதியை நாம் சந்தித்துப் பேசினோம்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

``என் மனைவியின் சொந்த ஊர் கொங்கு மண்டலமான கரூர். அங்கு `கரூர் கரம்’ எனப்படும் ஸ்நாக்ஸ் ரொம்ப மிகவும் பிரபலம். அதை இங்கு தயாரித்து விற்பனை செய்யலாமா என்கிற யோசனைதான் நாங்கள் புதிதாக தொழிலை ஆரம்பித்தபோது வந்தது. எங்கள் வீட்டு வாசலிலேயே கையேந்திபவன் மாதிரி ஒரு சிறிய கடையை முதலில் ஆரம்பித்தோம். அதில் பொறிக்கரம், தயிர்ப் பூந்திக்கரம், அப்பளம்கரம், போண்டாகரம், பூந்திக்கரம், மசாலா பொரி, காரப்பொரி போன்றவற்றை சுடச்சுடத் தயாரித்து விற்பனை செய்ய ஆரம்பித்தோம்.

Pajji
Pajji
படம்: பா.பிரசன்ன வெங்கடேஷ்

இவற்றுக்கு கெமிக்கல் கலவாத, காய்கறிகளைப் பயன்படுத்தி நல்ல சுவையான சட்னி, சாண்ட்விச் வகைகளைக் கொடுத்தோம். உடலைக் கெடுக்காத புதிய மாலை சிற்றுண்டிக்கு மக்கள் ஆதரவு தந்தார்கள். அந்த ஊக்கமே தொழிலில் அடுத்தகட்டத்தை நோக்கி நாங்கள் முன்னேறுவதற்கு ஊக்கம் தருவதாக இருந்தது’’ என்றார் இளஞ்சூரியன்.

கரூர்கரத்தை சீர்காழிக்குக் கொண்டுவந்த மாதிரி, நம் மாநிலத்திலும் இந்தியா முழுக்க உள்ள ஊர்களிலும் உணவு வகைகளைத் தயார் செய்து நம் கடையில் விற்பனை செய்வது குறித்த யோசனை இந்தத் தம்பதிக்கு வந்துள்ளது. உடனே அந்த ஐடியாவை செயல்படுத்தினார்கள் இந்தத் தம்பதிகள். தற்போது, கர்நாடகா மாநிலத்தில் பெங்களூரு சிட்டியில் சிறப்பு வாய்ந்த சூப் போண்டா, சூப் இட்லி, தக்காளி சிலைஸ் ஆகியவற்றுடன், வட இந்தியாவில் பெருமைக்குரிய சாகித் துக்கடா என்ற இனிப்பு, பிரட் ரசமலாய், பானி பூரி, மேல்பூரி போன்றவற்றையும் தயாரித்து தருகிறார்கள்.

PGs
PGs

குழம்பு கிரேவி போல் இல்லாமல் காய்கறிகளைக் கொண்ட கிரேவி தருகிறார்கள். சீஸ் பொட்டாட்டோ சிலைஸ் என்பதை இவர்களே உருவாக்கி இருக்கிறார்கள். அதாவது, எண்ணெயில் பொரிக்காமல், வேகவைத்த உருளைக்கிழங்குடன் காய்கறிகளைச் சேர்த்து தயாரிக்கிறார்கள்.

மகாராஷ்டிராவின் ரகடா ஜாட், ரகடா பேட்டீஸ், டெல்லி ஆளுடிக்கி, ஹைதராபாத் பொரிமிக்ஸ், ஆந்திர கடற்கரையில் பெயர் பெற்ற புனுகுளு, அரிசி போண்டா, பன்னீர் புருஜி, பன்னீர் பாப்கார்ன், மும்பை சாண்ட்விச், ஐரோப்பிய நாடுகளில் கிடைக்கும் சில்லி சீஸ் ரோஸ்ட், கார்லிக்ஸ் பிரட்டிக்ஸ், கிளாசிக் பிரட் சாண்ட்விச், சீஸ் பிரட் சாண்ட்விச், ரோஸ்ட் கிளாசிக் சாண்ட்விச், சீஸ் கார்லிக்ஸ் சாண்ட்விச், சௌகார்பேட்டை சீஸ் முறுக்கு சாண்ட்விச் உட்பட அனைத்தும் தருகிறார்கள்.

Ragda Chat
Ragda Chat
படம்: பா.பிரசன்ன வெங்கடேஷ்

“மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை கடையை நடத்துகிறோம். இங்குள்ள சிற்றுண்டி வகைகள் குறைந்தபட்சம் ரூ.12 முதல் அதிகபட்சம் ரூ.60 என்ற விலையில்தான் தருகிறோம். திருமண உள்ளிட்ட முக்கிய நிகழ்ச்சிகளுக்கு நிறைய ஆர்டர் தருகிறார்கள். இன்டர்நெட் மூலம் சமையல் வகை அறிந்து அனைத்தையும் தயாரிப்பவர் என் மனைவி மட்டும்தான். உதவிக்கு இரண்டு ஆட்கள் இருக்கிறார்கள். இதன்மூலம் தற்போது ஆண்டுக்கு ரூ.6 லட்சம் வருமானம் கிடைக்கிறது. இதை இன்னும் பெரிய அளவில் விரிவுபடுத்த வேண்டும் என்பதே எங்கள் ஆசை’’ என்று பேசி முடித்தார் இளஞ்சூரியன்.

வித்தியாசமான தொழில் ஐடியா நிச்சயம் ஜெயிக்கும்!