Published:Updated:

`மூன்று மாத இ.எம்.ஐ தள்ளிவைப்பு' - வாசகர் பகிரும் சாதக பாதகங்கள் #MyVikatan

Representational Image
News
Representational Image ( Credits : Pixabay )

மூன்று மாதங்களுக்கு இ.எம்.ஐ தள்ளிவைக்கப்படுகிறது. ஆனால், அந்த மூன்று மாதங்களுக்கு உரிய வட்டி கணக்கிடப்படுகிறது.

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

கொரோனா பாதிப்பால் வருமானமின்றி மக்கள் சிரமப்படுகின்றனர். எனவே, அனைத்துவிதக் கடன்களுக்கான இ.எம்.ஐ-களை 3 மாதங்களுக்குத் தள்ளிவைக்கலாம் என அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.

ரிசர்வ் வங்கியின் ஆலோசனையைப் பின்பற்றி நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்.பி.ஐ ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நான் எஸ்.பி.ஐ வாடிக்கையாளர் என்பதால் அதன் சாதக பாதகங்களை எடுத்துக்காட்டுடன் இங்கே பகிர்கிறேன். இது மற்ற வங்கிகளுக்கும் பொருந்தும். ஆனால், எடுத்துக்காட்டுகள் எஸ்.பி.ஐ -யில் வங்கிக்கடன் பெற்றவர்களுக்கு மட்டுமே பொருந்தும்.

வீட்டுக்கடன், வாகனக்கடன் உள்ளிட்ட அனைத்துவிதக் கடன்களுக்கும் வாடிக்கையாளர் 3 மாதங்களுக்கு இ.எம்.ஐ தள்ளி வைப்புக்குச் சில விதிமுறைகள் எஸ்பிஐ ஆல் வெளியிடப்பட்டுள்ளன.

Representational Image
Representational Image

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

வாடிக்கையாளர்களுக்கு மூன்றுவிதமான வாய்ப்புகளை எஸ்பிஐ வழங்கியுள்ளது:

1) வாடிக்கையாளர் வழக்கம் போல் தன்னுடைய லோனுக்கான இ.எம்.ஐ-யினைச் செலுத்தி வரலாம். அதற்கு எவ்விதத் தடையுமில்லை. அதற்குக் கூடுதலாக எவ்வித ஆவணங்களும் தேவையில்லை.

2) வாடிக்கையாளர் தன்னுடைய இ.எம்.ஐ-யினை மூன்று மாதங்களுக்குத் தள்ளிவைக்கச் சொல்லி வங்கிக்கு விண்ணப்பிக்கலாம்.

3) இந்த மாதம் ஏற்கெனவே பிடிக்கப்பட்ட இ.எம்.ஐ-யினை திரும்ப அளிக்கச் சொல்லி வங்கிக்கு விண்ணப்பிக்கலாம்.

அதிகபட்சம் 7 வேலை நாள்களில் செலுத்திய தொகை திரும்பக் கிடைக்கும்.

விண்ணப்பிக்கும் முறை:

இ.எம்.ஐ தள்ளிவைப்பு விண்ணப்பங்களை இரண்டு வகைகளில் அளிக்கலாம் என வங்கி அறிவுறுத்தியுள்ளது.

1) வாடிக்கையாளர் வங்கிக்கு நேரில் சென்று விண்ணப்பத்தை அளிப்பது.

2) வங்கி அளித்துள்ள பொருத்தமான மின்னஞ்சல் முகவரிக்குத் தன்னுடைய விண்ணப்பத்தை அனுப்பி வைப்பது.

Representational Image
Representational Image

வாடிக்கையாளர் என்ன செய்யவேண்டும்?:

வங்கியின் வெப்சைட்டில் உள்ள விண்ணப்பத்தினைப் பதிவிறக்கம் செய்து அதை நிரப்பி வங்கி அளித்துள்ள stopemi.lhoche@sbi.co.in என்ற முகவரிக்குத் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வாடிக்கையாளர்கள்(Chennai Circle) மின்னஞ்சல் செய்ய வேண்டும்.

பிரின்ட் எடுக்க முடியாத சூழலில் விண்ணப்பத்தினைக் கைகளால் எழுதியும் கிளைகளில் சமர்பிக்கலாம்.

இ.எம்.ஐ தள்ளி வைப்பதால் ஏற்படும் சாதக பாதகங்கள்:

சாதகங்கள்:

1) மூன்று மாதங்களுக்கு இ.எம்.ஐ செலுத்த வேண்டியதில்லை. லோன் குறித்த கவலையின்றி இருக்கலாம்.

2) மூன்று மாதங்களுக்குத் திருப்பிச் செலுத்தாமல் இருப்பது சிபில் (Credit Information Bureau India Limited) நடவடிக்கைக்கு உட்படாது. வாடிக்கையாளரின் சிபில் ஸ்கோர் குறையாது.

3) வாடிக்கையாளர் இ.எம் ஐ தள்ளிவைப்பு விண்ணப்பம் அளித்துவிட்டால், வங்கியிலிருந்து தவணை செலுத்தச் சொல்லி எந்தவிதத்திலும் நெருக்கடி அளிக்கப்படமாட்டாது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பாதகங்கள்:

1) இ.எம்.ஐ தள்ளிவைப்பு கேட்டால் உதாரணமாக, 30 லட்சம்/15 ஆண்டு உள்ள Housing loan-க்கு 2.34 லட்சம் வட்டி அதிகமாக கட்ட வேண்டி வருகிறது. தற்போதைய 3 மாத EMI தள்ளி வைப்பிற்குச் சராசரியாக 8 மாதம் EMI கட்ட வேண்டியுள்ளது.

2) அவ்வாறே 6 லட்சம்/54 மாதங்களுக்கு உள்ள Auto loan-ல் சராசரியாக ரூ.19000 வட்டி அதிகமாக வருகிறது. கிட்டத்தட்ட 1.5 இ.எம்.ஐ அதிகமாகிறது.

3) Housing Loan/Auto loan உள்ளிட்ட பல்வேறு Loan பெற்றவர்கள் EMI கட்ட முடிந்தால் கட்டிவிடுவது நல்லது. இலாபகரமானது.

கட்ட தற்போது வாய்ப்பு இல்லாதவர்கள் மட்டும் இ.எம்.ஐ-யினைத் தள்ளி வைக்கலாம். ஆனால், தள்ளிவைப்பதால் தற்போதைக்கு மட்டுமே பயன்.

எதிர்காலத்தில் சுமை கூடுதல்தான்.

Representational Image
Representational Image

வாடிக்கையாளரின் தேவைகள்:

1) மூன்று மாதங்களுக்கு இ.எம்.ஐ தள்ளி வைக்கப்படுகிறது. ஆனால், அந்த மூன்று மாதங்களுக்கு உரிய வட்டி கணக்கிடப்படுகிறது. இதனால் வாடிக்கையாளர் திருப்பிச் செலுத்த வேண்டிய வட்டித்தொகை மற்றும் இ.எம்.ஐ-ன் எண்ணிக்கை அதிகமாகிறது.

எனவே, மூன்று மாதங்களுக்கான வட்டியை முழுக்கத் தள்ளுபடி செய்துவிட்டு மார்ச் 1-ல் இருந்த அதே நிலை (Outstanding Interest Amount) ஜூன் 1-ல் இருக்குமாறு செய்தால் வாடிக்கையாளர்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கும்.

2) இந்த மாதம் இ.எம்.ஐ கட்ட வாய்ப்புள்ள ஒரு வாடிக்கையாளர் மார்ச் மாதத்திற்குரிய இ.எம்.ஐ-யினை ஏப்ரலில் குறிப்பிட்ட நாளில் கட்டி விடுகிறார்.

ஆனால், ஏப்ரல் மாதத்திற்குரிய இ.எம்.ஐ கட்ட வருமான வாய்ப்பு இல்லை எனில், அப்போது Option கொடுக்க வாய்ப்பு அளிக்க வேண்டும். மேலும் மார்ச் மாத இ.எம்.ஐ-யினைத் திரும்பப் பெறவோ அல்லது இரு மாதங்களுக்கு மட்டும் Option கொடுக்கவோ வாய்ப்பு இருந்தால் அது வாடிக்கையாளருக்குப் பயனுள்ளதாக இருக்கும்.

வங்கி மேற்காண் தேவைகளையும் பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுத்தால் மட்டுமே அது இந்தக் கடுமையான சூழலில் வாடிக்கையாளர்களுக்குச் சற்று ஆறுதல் அளிக்கக்கூடியதாக இருக்கும்.

3 மாதங்களுக்கு வட்டி தள்ளுபடி கிடைத்தால் மட்டுமே இ.எம்.ஐ தவணை தள்ளிவைப்பு வெறும் அறிவிப்பாய் மாறிவிடாமல் உண்மையில் மக்களுக்குப் பயனுடையதாகவும் அமையும்.

- அகன் சரவணன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/