Published:Updated:

தங்கத்தில் முதலீடு செய்யப்போகிறீர்களா? அதன் இந்த வடிவங்களையும் பரிசீலிக்கலாமே! - 19

கோல்ட் இ.டி.எஃப் வாங்குவதா அல்லது கோல்ட் மியூச்சுவல் ஃபண்டில் இறங்குவதா என்பது பற்றி ஒரு பட்டிமன்றமே நடத்தலாம். இதில் முடிவெடுக்க வேண்டியவர்கள் நாம்தான்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

2020 ஆகஸ்ட் 7 அன்று ஒரு கிராம் ரூ.5,416 என்ற உச்ச விலைக்கு விற்பனையான 22 காரட் தங்கம் பின் தொடர்ந்து விலை குறைந்து வருகிறது. மீண்டும் தங்கம் விலை ஏறுமா, எவ்வளவு ஏறக்கூடும், இப்போது வாங்குவது உசிதம்தானா, ஒரு வேளை இன்னும் இறங்கிவிடுமா என்பது போன்ற கேள்விகள் முதலீட்டாளர்கள் மனதில் எழுவது இயற்கை. இந்த சமயத்தில் தங்க முதலீட்டில் லாபம் பார்க்க எண்ணுபவர்கள் தங்கத்தின் புதிய அவதாரங்களையும் பார்ப்பது நல்லது.

பேப்பர் கோல்டு என்று செல்லமாகக் குறிப்பிடப்படும் டிஜிட்டல் கோல்டு மார்ச் 2003-ல் அறிமுகமானது. 99.9% சுத்தமான இந்தத் தங்கத்தின் விலை உலகம் முழுவதும் ஒன்றாகவே இருப்பது அதன் கவர்ச்சி அம்சங்களில் ஒன்று. செய்கூலி, சேதாரத்தின் நஷ்டங்கள், பாதுகாக்கும் செலவு இவை இல்லாதிருப்பதும் ஒரு முக்கியமான பாசிட்டிவ் விஷயமாகப் பார்க்கப்படுகிறது.

தங்கம்
தங்கம்
`சொந்த வீடே வேண்டாம்' என நினைக்கும் இளம் தலைமுறையினர்; அவர்களின் எண்ணம் சரிதானா? - 16

டிஜிட்டல் கோல்டை எம்.எம்.டி.சி என்ற அரசு நிறுவனமும், பேம்ப் என்ற ஸ்விஸ் நிறுவனமும் சேர்ந்து மோதிலால் ஆஸ்வால் ஃபைனான்ஷியல் நிறுவனத்தின் மூலம் அறிமுகப்படுத்தின. இங்கு மினிமம் முதலீடு ஆயிரம் ரூபாய். நமக்குப் பணம் தேவை என்றால் யூனிட்டுகளை இஷ்யூ செய்யும் நிறுவனங்களே நம்மிடம் இருந்து திரும்பப் பெற்றுக்கொண்டு பணம் தந்துவிடும். தங்க வடிவில் தேவை என்றாலும் உடனே கிராம் கணக்கில் தங்கம் நம் கையில் தரப்படும். இல்லாவிட்டால் சில அங்கீகரிக்கப்பட்ட நகைக்கடைகள் மூலம் நகையாகவும் வாங்கிக்கொள்ளலாம்.

கோல்டு இ.டி.எஃப் என்பது தங்கத்தை ஷேர் வடிவில் வாங்கும் முறையாகும். 99.9% சுத்தமான தங்கத்தை உலகம் முழுவதும் உள்ள அதே விலையில் வாங்கி ஷேர்களாகப் பிரித்து விற்கின்றனர். இதனால் இதன் விலையில் வெளிப்படைத்தன்மை அதிகம். எஸ்.பி.ஐ, ஐ.டி.பி.ஐ, ஆக்சிஸ் போன்ற வங்கிகளும், குவான்டம், ரெலிகேர் போன்ற கம்பெனிகளும் இதில் ஈடுபட்டுள்ளன. குறைந்தபட்சமாக ஒரு கிராம் வாங்கலாம். இதில் SIP வசதி கிடையாது. என்ட்ரி லோடு, எக்ஸிட் லோடு என்று எதுவும் கிடையாது. எக்ஸ்பென்ஸ் ரேஷியோவும் 0.5% முதல் 1.25% அளவே. இதற்கு ஒரு டீமேட் அக்கவுன்ட் தேவை. ஏற்கெனவே டீமேட் அக்கவுன்ட் தொடங்கி பங்குச் சந்தையில் ஈடுபட்டுள்ளவர்கள் இதை எளிதாக வாங்கலாம்.

Gold investment
Gold investment
சாமானியர்களும் ரியல் எஸ்டேட் சொத்துகளில் முதலீடு செய்ய எளிதான வழி; REIT பற்றி தெரியுமா? - 17

கோல்ட் மியூச்சுவல் ஃபண்டுகளின் அடிப்படை முதலீடு தங்கம் அல்ல; தங்க வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கும் நிறுவனங்களே. இதனால் இங்கு வெளிப்படைத்தன்மை குறைகிறது. இதில் குறைந்தபட்ச முதலீடு ரூ.1,000/. இதற்கு டீமேட் அக்கவுன்ட் தேவை இல்லை. SIP வசதி உண்டு. என்ட்ரி லோடு இல்லை; ஆனால் எக்ஸிட் லோடு உண்டு. எக்ஸ்பென்ஸ் ரேஷியோவும் அதிகம்.

கோல்ட் இ.டி.எஃப் வாங்குவதா அல்லது கோல்ட் மியூச்சுவல் ஃபண்டில் இறங்குவதா என்பது பற்றி ஒரு பட்டிமன்றமே நடத்தலாம். இதில் முடிவெடுக்க வேண்டியவர்கள் நாம்தான். ஷேர் மார்க்கெட் முதலீட்டை விரும்புபவர்கள் இ.டி.எஃப்பிலும், மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு சுலபம் என்று எண்ணுபவர்கள் கோல்ட் மியூச்சுவல் ஃபண்டிலும் முதலீடு செய்யலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தங்க இறக்குமதியைக் குறைக்க 2015-ல் மோடி அரசு சில திட்டங்களை முன்வைத்தது. அதில் ஒன்று இன்றும் வெற்றிகரமாக நடந்தேறும் சாவரின் கோல்ட் பாண்ட். அவசரமாகத் தங்கம் தேவைப்படாதவர்கள் தங்கள் முதலீட்டை இதில் செய்யும் பட்சத்தில், அரசு வருடத்துக்கு 2.50% வட்டி தருவதோடு, எட்டு வருட இறுதியில் அன்றைய தங்க மதிப்பையும் தருகிறது. அவசரத் தேவை என்றால் ஐந்து வருடங்கள் கழித்து வெளியேறலாம். அல்லது சந்தையில் விற்கலாம். ஆன்லைனில் வாங்கி டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவோர்க்கு கிராமுக்கு ரூ.50 தள்ளுபடி உண்டு. எட்டு வருட இறுதியில் கிடைக்கும் முதலீட்டு லாபத்துக்கு வரி இல்லை; நிர்வாகச் செலவும் இல்லை என்பதால், இன்று இது தங்க முதலீட்டுத் திட்டங்களில் முன்னணி வகிக்கிறது.

சேமிப்பு (மாதிரி படம்)
சேமிப்பு (மாதிரி படம்)
நகைக்கடன் vs நகை விற்பனை; இரண்டில் எது நமக்கு நல்லது தெரியுமா? - பணம் பண்ணலாம் வாங்க - 18

இனி வரக்கூடிய காலங்களில் பணவீக்கம் அதிகம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் தங்கத்தின் விலை மீண்டும் ஏறி, சவரன் ரூ. 60,000-த்தைத் தொடும் வாய்ப்பு வரக்கூடும். முன்பே கூறியது போல் நம் மொத்த முதலீட்டில் 5-10 சதவிகிதம் தங்கம் நகை வடிவிலோ, பேப்பர் உருவிலோ இருப்பது நல்லது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு