Published:Updated:

அதலபாதாளத்தில் உலகப் பொருளாதாரம் - சொத்து மதிப்பை உயர்த்தும் உலகப் பணக்காரர்கள்!

உலகப் பணக்காரர்களில் ஒருவரரான அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸின் சொத்து மதிப்பு உயர்ந்துள்ளது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் கொடூரத் தாக்குதலைத் தொடுத்திருக்கிறது. உலக நாடுகளில் தேசிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருப்பதால், பல்வேறு தொழில்துறை நிறுவனங்கள் கடுமையான நிதி நெருக்கடியைச் சந்தித்து வருகின்றன. கொரோனா வைரஸின் தொற்றால் தொழில் நிறுவனங்கள் முடங்கிக்கிடக்கும் இந்த இக்கட்டான சூழலிலும் கூட, உலகப் பணக்காரர்களில் ஒருவரரான அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸின் சொத்து மதிப்பு உயர்ந்துள்ளது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

கொரோனா
கொரோனா

உலகின் பல்வேறு நாடுகளில், தேசிய அளவில் ஊரடங்கு பல்வேறு கடுமையான கட்டுப்பாடுகளுடன் அமல்படுத்தப்பட்டிருப்பதால், மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் முடங்கிக் கிடக்கின்றனர். இந்நிலையில், அன்றாட தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்வதற்காக, ஜெஃப் பெசோஸின் அமேசான் நிறுவனத்தையே பலரும் நம்பியுள்ளதால், சில்லரை விற்பனையாளர்களின் பங்கு நேற்று ஒரு நாளில் மட்டும் 5.3 சதவிகிதம் உயர்ந்துள்ளது. இதனால், அந்நிறுவனத்தின் நிகர சொத்து மதிப்பு 138.5 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளது.

உலகளாவிய அளவில் கொரோனா வைரஸின் தொற்று உலகப் பொருளாதாரத்தை ஆட்டம் காண வைத்துள்ள நிலையில், கடந்த மூன்று வார காலத்தில் சுமார் 17 மில்லியன் அமெரிக்கர்களை வேலையற்றவர்களாக ஆக்கியுள்ளது. முன் எப்போதும் இல்லாத அளவுக்கு ஏற்பட்டிருக்கக்கூடிய வேலையிழப்பால், கடன் இழப்புகள் ஏற்பட்டு, அமேசான் நிறுவனம் சீர்குலைந்துள்ளதாக உலகின் முன்னணி முதலீட்டு நிறுவனங்களான ஜேபி மோர்கன் சேஸ் மற்றும் வெல்ஸ் பார்க்கோ ஆகியவை குறிப்பிட்டுள்ளன. இருப்பினும், பெசோஸுடன் அவரது தொழில்நுட்ப முதலீட்டாளர்கள் பலர், அரசாங்கங்களின் உதவியோடு பல இடங்களில் சிறப்பாக முதலீடு செய்துவருகின்றனர்.

பொருளாதாரம்
பொருளாதாரம்

ஃப்ளூம்பெர்க் உலக பணக்காரர்கள் குறியீட்டின்படி, கடந்த மார்ச் 23-ம் தேதிக்குப் பின்னர், உலகின் முதல் 500 பணக்காரர்கள் தங்களின் சொத்து மதிப்பிலிருந்து 553 பில்லியன் அமெரிக்க டாலர்களை இழந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. மில்லர் தபக் நிறுவனத்தின் தலைமை மார்க்கெட்டிங் அதிகாரி மாட் மாலே செல்வ இடைவெளி என்பது இப்போது நிகழ்ந்துகொண்டிருக்கும் சூழலைப் பொறுத்தே அது அதிகரிக்கக்கூடும் என தெரிவித்துள்ளார். இதனால், குறைந்த செல்வவளம் படைத்தவர்களே கவலைப்பட வேண்டும். மிகுந்த செல்வவளம் படைத்தவர்கள் உண்மையில் கவலைப்பட தேவையில்லை என தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

உலகப் பணக்காரர்களைத் தவிர்த்து அமெரிக்காவின் உள்நாட்டு கார்ப்பரேட் நிறுவனங்கள், பல செல்வந்தர்களின் பங்குகளைக் கணிசமான அளவு வாங்குகின்றனர். இவ்வாறு, கார்ப்பரேட் நிறுவனங்கள் பங்குகளை வாங்குவதால், அரசாங்கம் தலையிட்டு தக்க நடவடிக்கைகளை எடுப்பதன்மூலம் வேலையிழந்த அமெரிக்கப் பணியாளர்கள் மீண்டும் பணிக்குத் திரும்ப வழிவகை செய்யும்' என்றார்.

பொருளாதாரம்
பொருளாதாரம்

அமெரிக்க நிதி நடத்தைகளில் ஆய்வு மேற்கொள்ளும் சுண்டியல் கேப்பிட்டல் நிறுவனம், கடந்த பத்தாண்டுகளைக் காட்டிலும் தற்போது நிறுவனங்களில் பணிபுரியும் இயக்குநர்கள் மற்றும் நிர்வாகிகள் மிகவும் நேர்த்தியானவர்கள் என தெரிவித்துள்ளது.

இந்த இக்கட்டான பொருளாதார சூழல் நிலவிவரும் நிலையில், கார்னிவெல் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் பங்குதாரர் ராண்டல் வீசன்பர்கர், கடந்த வாரம் சிக்கலான கப்பல் வரி முதலீட்டில் 10 மில்லியன் பங்குகளை வாங்கினார். அவர்கள் பங்குகளை வாங்கிய நிலையில், முதலீட்டின் லாபம் 56 சதவிகிதம் உயர்ந்துள்ளது. கச்சா எண்ணெய் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளதால், எண்ணெய் மற்றும் எரிவாயு துறையில் முதலீடு செய்த பலர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது கவலையடையச் செய்வதாக இருக்கிறது.

அமேசான் நிறுவனர் பெசோஸ், 2020 ஆண்டின் தொடக்கத்திலிருந்து தற்போது வரை தனது சொத்து மதிப்பில் கூடுதலாக 24 பில்லியன் அமெரிக்க டாலர்களைச் சேர்த்துள்ளார். மேலும், இவரிடமிருந்து விவாகரத்துப் பெற்ற மெக்கன்சி, அமேசானின் பங்குகளில் 4 சதவிகிதத்தை தன்வசப்படுத்தியுள்ள நிலையில், இருவரின் சொத்து மதிப்பும் ஊரடங்கு காலத்தில் கணிசமாக உயர்ந்துள்ளது. மெக்கன்சியின் சொத்து மதிப்பு 8.2 பில்லியன் அமெரிக்க டாலர்களிலிருந்து 45.3 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளது. இந்நிலையில், ஃப்ளூம்பெர்க் செல்வ மதிப்பு தரவரிசையில் 18-வது இடத்தில் உள்ளார். இதனிடையே, இந்தியாவின் முன்னனி பணக்காரரான முகேஷ் அம்பானி மற்றும் மெக்ஸிக்கோவின் கார்லோஸ் ஸ்லிம் ஆகியோரைவிட, மெக்கன்சி முன்னிலையில் உள்ளார்.

அம்பானி, டாடா
அம்பானி, டாடா

மேலும், இவர்களைத் தவிர டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் அமேசானின் பெசோஸுக்கு அடுத்தபடியாக 10.4 பில்லியன் அமெரிக்க டாலர்களைத் தனது மதிப்பில் கூடுதலாகச் சேர்த்துள்ளார். உலக நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருக்கும்போது, தகவல் தொடர்பிற்காக பரவலாக அனைவராலும் பயன்படுத்தப்படும் ஜூம் செயலி நிறுவனத்தின் நிறுவனர் எரிக் யுவானின் சொத்து மதிப்பு 7.4 பில்லியன் அமெரிக்க டாலர்களாக அதிகரித்துள்ளது.

உலகப் பணக்காரர்களின் செல்வ நிலை உலகை அச்சுறுத்திவரும் கொரோனா எனும் பெருந்தொற்று பரவிவரும் காலத்திலும்கூட அதிகரித்துவருவது, பணம் பணத்தை சம்பாதித்துக் கொண்டிருக்கிறது என்பதைக் காட்டுவதாக உள்ளதென மில்லர் தபக் நிறுவனத்தின் தலைமை மார்க்கெட்டிங் அதிகாரி மாட் மாலே தெரிவித்துள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு