Published:Updated:

`தினசரி வருமானம் ரூ.1,000 கோடி' முகேஷ் அம்பானியை முந்துவாரா கௌதம் அதானி? - டாப் 10 பணக்காரர்கள்!

இந்தியப் பணக்காரர்கள் பட்டியலில் பல ஆண்டுகளாக முதலிடத்தில் இருப்பவர் ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி... ஆனால்?! - இந்தியாவின் டாப் 10 பணக்காரர்கள் யார்... யார்?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

இந்தியப் பணக்காரர்கள் பட்டியலில் பல ஆண்டுகளாக முதலிடத்தில் இருப்பவர் ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி. இந்த ஆண்டும் அவரே அந்தப் பட்டியலில் முதலிடம் வகிக்கிறார். ஆனால், அடுத்த ஆண்டு இந்த நிலைமை மாறிவிடுமோ என்கிற அளவுக்கு அதிர்ச்சிதரும் தகவல் ஒன்றை வெளியிட்டிருக்கிறது `ஹூருன் இந்தியா' (Hurun India) நிறுவனம். அந்தத் தகவல் என்ன என்பதைப் பிறகு பார்ப்போம். அதற்கு முன்பாக ஹூருன் இந்தியாவின் 2021-ம் ஆண்டுக்கான டாப் 10 பணக்காரர்களையும், அவர்களது சொத்து விவரங்களையும் பார்த்துவிடுவோம்.

முகேஷ் அம்பானி
முகேஷ் அம்பானி
டாப் 10 பணக்காரர்கள்!

1. முகேஷ் அம்பானி (ரிலையன்ஸ் குழுமம்) - ரூ. 7,18,000 கோடி

2. கௌதம் அதானி (அதானி குழுமம்) - ரூ. 5,05,900 கோடி

3. ஷிவ் நாடார் (ஹெச்.சி.எல்) - ரூ. 2,36,000 கோடி

4. எஸ்.பி.ஹிந்துஜா (ஹிந்துஜா குழுமம்) - ரூ. 2,20,000 கோடி

5. லட்சுமி மிட்டல் (மிட்டல் குழுமம்) - ரூ. 1,74,400 கோடி

6. சைரஸ் பூனாவாலா (சீரம் இன்ஸ்டிட்யூட்) - ரூ. 1,63,700 கோடி

7. ராதாகிஷன் தமானி (அவென்யூ சூப்பர்மார்ட்ஸ்) - ரூ. 1,54,300 கோடி

8. வினோத் ஷாந்திலால் அதானி (அதானி குழுமம்) - ரூ.1,31,600 கோடி

9. குமார் மங்கலம் பிர்லா (ஆதித்யா பிர்லா) - ரூ.1,22,200 கோடி

10. ஜெய் செளத்ரி (Zscaler)- ரூ.1,21,600 கோடி.

அம்பானி - அதானி ஆதிக்கம்!

தொடர்ந்து இந்தியப் பணக்காரர்களின் பட்டியலில், முகேஷ் அம்பானியே ஆதிக்கம் செலுத்திவருகிறார். நாட்டின் மிகப்பெரிய நிறுவனமாகத் திகழும் ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி குடும்பத்தினரின் சொத்து மதிப்பு கடந்த ஆண்டைவிட ஒன்பது சதவிகிதம் அதிகரித்திருக்கிறது. முகேஷ் அம்பானியின் தினசரி வருமானம் ரூ.163 கோடியாக இருக்கிறது.

இந்தப் பட்டியலில் இரண்டாம் இடத்திலிருக்கும் அதானி குழுமத் தலைவர் கௌதம் அதானியின் சொத்து மதிப்பு கடந்த ஆண்டைவிட 261 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது. கௌதம் அதானி, நாளொன்றுக்கு ரூ.1,000 கோடி வருமானம் ஈட்டுவதாக ஹூருன் இந்தியா அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்தப் பட்டியலில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவரும், ஹெச்.சி.எல் குழுமத் தலைவருமான ஷிவ் நாடார் மூன்றாம் இடத்தைப் பிடித்திருக்கிறார். நாளொன்றுக்கு 260 கோடி ரூபாய் வருமானம் ஈட்டும் ஷிவ் நாடாரின் சொத்து மதிப்பு, கடந்த ஆண்டைவிட 67 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது.

ஹூருன் இந்தியா - பணக்காரர்கள் பட்டியல்
ஹூருன் இந்தியா - பணக்காரர்கள் பட்டியல்
ரூ.86,188 கோடி ; மல்லையா, நிரவ் மோடியைவிட 10 மடங்கு அதிக கடன் - நெருக்கடியில் அம்பானி?

முகேஷ் அம்பானியின் சகோதரர் அனில் அம்பானி இந்தப் பட்டியலில் இடம்பெறவில்லை. அதேநேரத்தில் கௌதம் அதானியின் சகோதரர் வினோத் அம்பானி இந்தப் பட்டியலில் 8-ம் இடத்தைப் பிடித்திருக்கிறார். கடந்த ஆண்டைவிட இவரது சொத்து மதிப்பு 212 சதவிகிதம் அதிகமாகியிருக்கிறது. வினோத் அதானியின் தினசரி வருமானம், ரூ.245 கோடி என்றும் ஹூருன் இந்தியா அறிக்கை சொல்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அம்பானியை முந்துவாரா அதானி?

``கடந்த ஆண்டு அதானியின் சொத்து மதிப்பு ரூ.1,40,200 கோடி. இந்த ஆண்டு அது 261 சதவிகிதம் அதிகரித்து, 5,05,900 கோடி ரூபாயாக மாறியிருக்கிறது. அம்பானியின் சொத்து மதிப்பு 7,18,000 கோடி ரூபாயாக இருக்கிறது. இருவரின் சொத்து மதிப்புக்குமான இடைவெளி 2,12,000 கோடி ரூபாயாகத்தான் இருக்கிறது. தினசரி, கிட்டத்தட்ட 1,000 கோடி ரூபாய் வருமானத்தை ஈட்டுகிறது அதானி குழுமம். இதே வேகத்தில் சென்றால், ஒரே ஆண்டில் அம்பானியை, அதானி முந்தினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை'' என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள்.

அதானி
அதானி
ஒட்டுமொத்தத்தில், `கொரோனா காரணமாக இந்த உலகமே முடங்கியிருந்த சமயத்திலும், இந்தியப் பணக்காரர்களின் சொத்து மதிப்பு அதிகரித்திருக்கிறதே தவிர, சற்றும் குறையவில்லை' என்பதையே ஹூருன் இந்தியாவின் அறிக்கை உணர்த்துகிறது!
அம்பானி வீட்டுக்கருகே வெடிபொருள்கள் நிரம்பிய கார்; பணத்துக்காகத் திட்டமிட்ட அதிகாரி!-அதிர்ச்சி தகவல்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு