Published:Updated:

முதலீட்டாளர்களின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த புதிய விதிமுறை; என்ன சொல்கிறது AMFI?

ஆம்ஃபி

முதலீட்டாளரின் பான் (PAN) எண் அடிப்படையில் வெவ்வேறு மியூச்சுவல் ஃபண்ட் ஃபோலியோக்களுக்கு பல தொலைபேசி எண்கள் அல்லது மின்னஞ்சல் ஐடிகள் பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பதையும் ஆர்.டி.ஏ சரிபார்க்கும்.

முதலீட்டாளர்களின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த புதிய விதிமுறை; என்ன சொல்கிறது AMFI?

முதலீட்டாளரின் பான் (PAN) எண் அடிப்படையில் வெவ்வேறு மியூச்சுவல் ஃபண்ட் ஃபோலியோக்களுக்கு பல தொலைபேசி எண்கள் அல்லது மின்னஞ்சல் ஐடிகள் பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பதையும் ஆர்.டி.ஏ சரிபார்க்கும்.

Published:Updated:
ஆம்ஃபி

இந்திய மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களின் கூட்டமைப்பான ஆம்ஃபி (AMFI), முதலீட்டாளர்களின் நலன் காக்கும் மற்றொரு நடவடிக்கையை எடுத்திருக்கிறது.

மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டு கணக்கு எண் ஆன ஃபோலியோ (Folio) எண் உடன் இணைக்கப்பட்ட முகவரி, தொலைபேசி எண், மின்னஞ்சல் ஐடி, வங்கிக் கணக்கு ஆகியவற்றின் நம்பகத்தன்மையை சரிபார்க்குமாறு மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு சேவை அளிக்கும் ஆர்டிஏ (RTA) ஆகியவற்றை ஆம்ஃபி அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.

மியூச்சுவல் ஃபண்ட் யூனிட்களை விற்று பணமாக்கும்போது, இரண்டு காரணி அங்கீகாரத்தை (two-factor-authentication) செயல்படுத்த இது உதவும். இரண்டு காரணி அங்கீகாரம் என்பது பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண் அல்லது மின்னஞ்சல் ஐடிக்கு ஒரு முறை கடவுச்சொல் (OTP)-ஐ அனுப்பி, முதலீட்டாளர்தான் யூனிட்களை விற்கிறார் என்பதை உறுதிப்படுத்துவதாக இருக்கிறது.

மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டுக் கணக்கில் ஆன்லைன் மூலம் யூஸர் ஐடி, பாஸ்வேர்டு கொடுத்து உள்நுழைவது முதல் காரணி அங்கீகாரம் ஆகும். டீமேட் கணக்கில் இருக்கும் மியூச்சுவல் ஃபண்ட் ஃபோலியோக்களுக்கு இந்தப் புதிய விதிமுறை இல்லை.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
ஆர்.வெங்கடேஷ், நிறுவனர், www.gururamfinancialservices.com
ஆர்.வெங்கடேஷ், நிறுவனர், www.gururamfinancialservices.com

புதிய விதிமுறைகள்:

1. மியூச்சுவல் ஃபண்ட் ஃபோலியோக்களுடன் இணைக்கப்பட்டிருக்கும் மொபைல் எண்கள், முதலீட்டாளர் மற்றும் அவரின் குடும்ப உறுப்பினர்களுக்கு உரியதாக இருக்கலாம். குடும்ப உறுப்பினர் என்பது துணைவர் (கணவன்/மனைவி), சார்ந்திருக்கும் சிறுவர்கள் / பெற்றோர், மைனர் என்றால் காப்பாளர் ஆகியோரை குறிக்கும். இவர்களைத் தவிர மற்றவர்களுக்கு அந்த போன் நம்பர் சொந்தமாக இருக்கக் கூடாது.

2. இந்தச் சரிபார்ப்பு செயல்முறையை ஆர்.டி.ஏ-க்கள் மேற்கொள்ள வேண்டும். ஃபோலியோவுடன் மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தர்கள் (MFDs), ஆர்.டி.ஏ, பதிவு செய்யப்பட்ட முதலீட்டு ஆலோசகர், மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் மற்றும் அவர்களது ஊழியர்களின் செல்போன் எண், மின்னஞ்சல் ஐடி இணைக்கப்பட்டிருக்கிறதா எனப் பார்க்க வேண்டும். ஏதாவது முரண்பாடு கண்டறியப்பட்டால், முதலீட்டாளரை ஆர்.டி.ஏ தொடர்புகொள்ள வேண்டும். சரியான முகவரி, போன் நம்பர், மெயில் ஐடி ஆகியவற்றை இணைக்கும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்

3. முதலீட்டாளரின் பான் (PAN) எண் அடிப்படையில் வெவ்வேறு மியூச்சுவல் ஃபண்ட் ஃபோலியோக்களுக்கு பல தொலைபேசி எண்கள் அல்லது மின்னஞ்சல் ஐடிகள் பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பதையும் ஆர்.டி.ஏ சரிபார்க்கும்.

4. ஆர்டிஏ-க்கள் முதலீட்டாளர்களின் மின்னஞ்சல் ஐடி மற்றும் மொபைல் எண்ணுக்கு உறுதிப்படுத்தல் செய்தியை அனுப்பும். முதலீட்டாளர்கள் இணைப்பைக் க்ளிக் செய்வதன் மூலம் அதை அங்கீகரிக்க வேண்டும்.

5. மொபைல் எண்கள், 1 மற்றும் 5-க்கு இடையில் தொடங்குபவை தவறானவை. இதேபோல், `000000000’ அல்லது 9999999999’ போன்ற ஃபோன் எண்கள் தவறானதாக இருக்கும்.

மியூச்சுவல் ஃபண்ட்
மியூச்சுவல் ஃபண்ட்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

6. அதேநேரத்தில், ஆர்டிஏ-க்கள் வெளிநாட்டு மொபைல் எண்களை சரிபார்க்க வேறுபட்ட செயல்முறையை உருவாக்க வேண்டும்.

7. விடுபட்ட மின்னஞ்சல் ஐடிகள், abc, xyz போன்ற முதலெழுத்துகளைக் (initials) கொண்டவை, செல்லாத டொமைன்கள் மற்றும் தவறானவை ஆகும்.

8. மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் ஐடி இரண்டும் சரிபார்க்கப்பட வேண்டும். அவற்றில் ஒன்று அங்கீகரிக்கப்படவில்லை என்றால் (உதாரணத்துக்கு மின்னஞ்சல் ஐடி என்று வைத்துக்கொள்வோம்) மின்னஞ்சல் ஐடிக்கு எதிராக ஃபோலியோவில் சரிபார்க்கப்படாதற்கு அடையாளமாகக் கொடி (flag) சிம்பல் இருக்கும்.

9. செல்லுபடியாகாத மொபைல் எண் அல்லது மின்னஞ்சல் ஐடி காரணமாக, ஆர்.டி.ஏ அனுப்பும் லிங்கை முதலீட்டாளர் அங்கீகரிக்கவில்லை என்றால், ஆர்.டி.ஏ-க்கள் அத்தகைய முதலீட்டாளரை மின்னணு வழிமுறைகள் அல்லது கடிதம் மூலம் தொடர்புகொள்ளும்.

மியூச்சுவல் ஃபண்ட்
மியூச்சுவல் ஃபண்ட்

10. விண்ணப்பப்படிவத்தைப் பூர்த்தி செய்து முதலீட்டாளர் யூனிட்களை விற்க கோரிக்கை (physical redemption requests) வைக்கும்போது இரு காரணி அங்கீகாரம் (two-factor authentication) இருக்காது.

11. டிஜிட்டல் வழியில் யூனிட்களை விற்க ரிடம்ஷன் (Digital redemption) கொடுக்கும்போது, மொபைல் எண் அல்லது மின்னஞ்சல் ஐடியில் பெறப்பட்ட ஓ.டி.பி மூலம் டிஜிட்டல் வழி யூனிட் ரிடம்ஷன் அங்கீகரிக்கப்படும். மொபைல் எண் அல்லது மின்னஞ்சல் ஐடி - இவற்றில் ஒன்று சரிபார்க்கப்பட்டால், முதலீட்டாளர்கள் யூனிட்களை விற்கலாம்.

12. முதலீட்டாளர்கள் தங்களின் ஆர்.டி.ஏ-க்களை அணுகி தங்களில் போன் நம்பர், மெயில் ஐ.டி, முகவரி ஆகியவற்றைப் புதுப்பித்துக்கொள்ளலாம். இந்த விஷயத்தில் முதலீட்டாளர் களுக்கு மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தர்கள் உதவி செய்யலாம்.

13. ஓ.டி.பி அங்கீகாரம் என்பது சிஸ்டமேட்டிக் டிரான்ஸ்பர் பிளான் மற்றும் சிஸ்டமேட்டிக் வித்ட்ராயல் பிளான் ( STP and SWP) ஆகியவற்றும் பொருந்தும்.

14. அனைத்து சரிபார்ப்புகளும் செப்டம்பர் 30, 2022-க்குள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

ஆர்.டி.ஏ-க்கள் அவற்றின் வேலையை ஆரம்பிக்கும் முன் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்கள் தங்களின் ஃபோலியோ எண்ணுடன் இணைக்கப்பட்டிருக்கும் செல்போன் நம்பர், மெயில் ஐடி-யை விரைந்து சரிபார்த்துக் கொள்வது மூலம் பணம் எடுப்பதை எளிதாக்கிக்கொள்ள முடியும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism