Published:Updated:

எக்விடாஸ் ஸ்மால் பைனான்ஸ் பேங்க் ஐ.பி.ஒ... முதலீடு செய்ய உகந்ததா?

IPO
News
IPO

2016-ம் ஆண்டு செப்டம்பரில் இந்த வங்கி தொடங்கப்பட்டது. மூன்று ஆண்டுகளுக்கு ஐ.பி.ஓ கொண்டு வரவேண்டும் என்னும் விதியுடன் இந்த வங்கி செயல்பட அனுமதி வழங்கப்பட்டது. ஓராண்டு கால தாமதத்துக்குப் பிறகு, தற்போது இந்த ஐ.பி.ஓ வெளியாகிறது.

Published:Updated:

எக்விடாஸ் ஸ்மால் பைனான்ஸ் பேங்க் ஐ.பி.ஒ... முதலீடு செய்ய உகந்ததா?

2016-ம் ஆண்டு செப்டம்பரில் இந்த வங்கி தொடங்கப்பட்டது. மூன்று ஆண்டுகளுக்கு ஐ.பி.ஓ கொண்டு வரவேண்டும் என்னும் விதியுடன் இந்த வங்கி செயல்பட அனுமதி வழங்கப்பட்டது. ஓராண்டு கால தாமதத்துக்குப் பிறகு, தற்போது இந்த ஐ.பி.ஓ வெளியாகிறது.

IPO
News
IPO

தமிழகத்தை மையமாகக் கொண்டு செயல்படும் எக்விடாஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கியின் பங்குகளுக்கு இன்று முதல் அடுத்த இரு நாள்களுக்கு விண்ணப்பிக்கலாம் (அக்டோபர் 20 முதல் 22 வரை). ஒரு பங்கின் விலையாக ரூ.32 - ரூ.33 என நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. குறைந்தபட்சம் 450 பங்குகளுக்கு முதலீட்டாளர்கள் விண்ணப்பிக்க வேண்டும். சிறுமுதலீட்டாளர்கள் பிரிவில் ஒருவர் அதிகபட்சம் ரூ.2 லட்சம் வரை மட்டுமே இந்தப் பங்கில் முதலீடு செய்யலாம்.

குறையும் புரொமோட்டர் ஹோல்டிங்...

2016-ம் ஆண்டு செப்டம்பரில் இந்த வங்கி தொடங்கப்பட்டது. மூன்று ஆண்டுகளுக்கு ஐ.பி.ஓ கொண்டு வரவேண்டும் என்னும் விதியுடன் இந்த வங்கி செயல்பட அனுமதி வழங்கப்பட்டது. ஓராண்டு காலதாமதத்துக்குப் பிறகு, தற்போது இந்த ஐ.பி.ஓ வெளியாகிறது.

இந்த வங்கியின் புரொமோட்டர் எக்விடாஸ் ஹோல்டிங். பொதுப் பங்கு வெளியீட்டுக்குப் பிறகு, புரொமோட்டர் பங்கு 82 சதவிகிதமாகக் குறையும். ஆனால், இன்னும் ஓர் ஆண்டில் புரொமோட்டர் பங்குகளை 40 சதவிகிதமாகக் குறைக்கவேண்டும் என்பதை ரிசர்வ் வங்கி ஏற்கெனவே உத்தரவிட்டிருக்கிறது.

வங்கிக் கிளைகளைப் பொறுத்தவரை, நாட்டின் மிகச் சிறிய வங்கி எக்விடாஸ். அதேபோல, கையாளும் சொத்துகளின் அடிப்படையில் (சிறிய வங்கிகளின் பட்டியலில்) இரண்டாம் இடத்தில் எக்விடாஸ் இருக்கிறது.

இந்த வங்கியின் கிளைகள் அதிகளவில் தமிழகத்தில்தான் உள்ளன. வங்கி கொடுத்திருக்கும் கடன்களில் 54 சதவிகிதமும், வங்கியில் உள்ள டெபாசிட்டுகளில் 32 சதவிகிதமும் தமிழகத்தில் உள்ளன.

Equitas
Equitas
Equitas

நிதி நிலைமை எப்படி?

ஒரு காலத்தில் மைக்ரோ ஃபைனான்ஸ் கடன் பிரிவு அதிகமாக இருந்தது. ஆனால், தற்போது பல வகையான கடன்களையும் இந்த வங்கி வழங்கி வருகிறது. வங்கியின் காசா (casa) விகிதமும் 20% என்னும் அளவில் இருக்கிறது.

தற்போது வெளியாக இருக்கும் விலையும் கவர்ச்சிகரமாகவே இருக்கிறது. 1.2 புத்தக மதிப்பிலே விலை நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.

வங்கியின் மொத்த வாராக்கடனும் 2.7 சதவிகிதமாக (ஜூன் காலாண்டு நிலவரப்படி) இருக்கிறது. முதலீட்டாளர்கள் இந்த விகிதத்தை மட்டுமே எச்சரிக்கையாக கவனிக்க வேண்டும். தற்போது மத்திய அரசுக் கடன் சலுகையைப் (Moratorium) பயன்படுத்துபவர்கள் குறைவாக இருந்தாலும் கோவிட் காரணமாக வாராக்கடன் எப்படி இருக்கிறது என்பதை முதலீட்டாளர்கள் தொடர்ந்து கவனித்து வரவேண்டும். தவிர, வட்டிச் சலுகை குறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கிறது. இந்த வழக்கின் தீர்ப்பு அனைத்து வங்கிகளின் வருமானத்தைப் பாதிக்க வாய்ப்புண்டு.

முதலீடு செய்யலாமா?

காசா விகிதம் நன்றாக இருக்கிறது (அதிக வட்டி வழங்கப்படுவதால்). பல துறைகளில் கடன் வழங்கப்பட்டிருக்கிறது; வாராக்கடன் குறைவாக இருக்கிறது; வங்கியின் மதிப்பீடும் ஏற்றுக்கொள்ளும்படி இருக்கிறது. இதனால் பெரும்பாலான புரோக்கிங் நிறுவனங்கள் இந்த ஐ.பி.ஓ-வில் முதலீடு செய்ய பரிந்துரை செய்திருக்கிறார்கள்.

ஆனால், பட்டியலாகும் முதல் நாளில் பெரிய லாபம் கிடைக்கும். அந்த லாபத்தை அன்றே அறுவடை செய்யலாம் என்னும் எண்ணத்துடன் இதில் முதலீடு செய்ய வேண்டாம் என்பதும் பங்குச் சந்தை நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது.

வாராக்கடன்
வாராக்கடன்
vikatan

வாராக்கடன் சூழலைப் பொறுத்து இந்தப் பங்கில் ஏற்றம் இருக்கலாம் என்பதால், நீண்ட கால அடிப்படையில் இந்தப் பங்கில் முதலீடு செய்யலாம். தவிர, சரியான நேரத்தில் சர்வதேச வங்கிச் சேவைக்கு (universal banking) உரிமத்துக்கு விண்ணப்பிக்க இருப்பதாக இந்த வங்கி தெரிவித்திருக்கிறது. அதிக பிரீமியத்தில் விலை நிர்ணயம் செய்யப்படவில்லை என்பதால், நீண்ட கால நோக்கில் இந்தப் பங்கில் முதலீடு செய்யலாம்.

இந்த ஐ.பி.ஓ பற்றி முக்கியத் தகவல்கள்

விலை: ரூ.32 - 33

தேதி: அக்டோபர் 20 - 22

குறைந்தபட்ச பங்குகள்: 450 பங்குகள்

பங்குகள் ஒதுக்கும் தேதி: அக்டோபர் 27

பட்டியலாகும் தேதி: நவம்பர் 2.