Published:Updated:

பங்குச்சந்தையில் முதலீடு செய்வதற்கு முன் இந்த 2 விஷயங்களைத்தான் நல்லா கவனிக்கணும்! - 23

Share Market (Representational Image) ( Photo by energepic.com from Pexels )

ஃபண்டமென்டல் அனாலிசிஸ் எந்தப் பங்கு லாபம் சம்பாதிக்கும் என்று காட்டும். டெக்னிகல் அனலிசிஸ் அதை எப்போது வாங்குவது நல்லது என்று கூறும்.

பங்குச்சந்தையில் முதலீடு செய்வதற்கு முன் இந்த 2 விஷயங்களைத்தான் நல்லா கவனிக்கணும்! - 23

ஃபண்டமென்டல் அனாலிசிஸ் எந்தப் பங்கு லாபம் சம்பாதிக்கும் என்று காட்டும். டெக்னிகல் அனலிசிஸ் அதை எப்போது வாங்குவது நல்லது என்று கூறும்.

Published:Updated:
Share Market (Representational Image) ( Photo by energepic.com from Pexels )

பங்குச் சந்தையில் கிடைத்த சமீப கால வெற்றியை வைத்து நம் திறமையை எடை போடக்கூடாது. சந்தை மேல் நோக்கிய தன் பயணத்தைத் தொடருமா? சந்தை மேலே சென்றாலும் நாம் விரும்பும் பங்கு மேலே ஏறி லாபம் தருமா? இந்தக் கேள்விகளுக்கு நமக்கு விடை தெரிந்திருந்தால்தான் தொடர்ந்து வெற்றி பெறமுடியும். அதற்கு ஃபண்டமென்டல் அனாலிசிஸ் மற்றும் டெக்னிக்கல் அனாலிசிஸ் பற்றி ஓரளவாவது நமக்குத் தெரிந்திருக்க வேண்டும். ஃபண்டமென்டல் அனாலிசிஸ் எந்தப் பங்கு லாபம் சம்பாதிக்கும் என்று காட்டும். டெக்னிக்கல் அனாலிசிஸ் அதை எப்போது வாங்குவது நல்லது என்று கூறும்.

Stock Market
Stock Market
Photo by Mark Finn on Unsplash

ஃபண்டமென்டல் அனாலிசிஸ்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பாட்டா, இன்ஃபோசிஸ், நெஸ்லே போன்ற கம்பெனிகள் கடந்த பத்து வருடங்களில் சராசரியாக வருடாவருடம் 20 சதவிகித வளர்ச்சி தந்திருக்கின்றன; பாஷ் கம்பெனியின் பங்கு விலை 30 சதவிகித வளர்ச்சி கண்டுள்ளது. சந்தையிலுள்ள அத்தனை கம்பெனிகளும் இப்படி வளர்ந்து விடுவதில்லை. நிறைய பேரின் டார்லிங்கான யெஸ் பேங்க்கின் பங்கு விலை ரூ.404/-லிருந்து ரூ.12/-க்கு வீழ்ச்சி அடைந்ததை மறக்க முடியுமா? மல்டிபேகர் (பன்மடங்கு) வளர்ச்சி தந்து வெற்றி பெறும் கம்பெனிகளின் குணாதிசயங்கள் என்ன?

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மூன்று முதல் ஐந்து வருடங்களும், அதற்கு மேலும் ஒரு பங்கை வைத்திருந்து பலமடங்காக அது பெருகுவதைப் பார்க்க விரும்பினால், முதலில் அந்தக் கம்பெனியின் பிசினஸ் பற்றி முழுவதுமாக அறிந்துகொள்ள வேண்டும். இதை அறிய காமர்ஸில் டிகிரி தேவையில்லை. ஃபண்டமென்டல் அனாலிசிஸ் கூறும் குவாலிடேடிவ் விஷயங்களும், குவான்டிடேடிவ் விஷயங்களும் தெரிந்தால் போதும்.

Wallstreet Bull
Wallstreet Bull
AP Photo/Mark Lennihan

குவாலிடேடிவ் அனாலிசிஸ்:

நாம் ஓரளவாவது அறிந்திருக்க வேண்டிய குவாலிடேடிவ் விஷயங்கள்:

- கம்பெனியின் மேனேஜ்மென்ட் எப்படிப்பட்டது?

- நெறிமுறைகளுக்கு உட்பட்டு செயல்படுமா?

- பணிபுரிபவர்கள், பங்குதாரர்கள் என்று அத்தனை பேரின் நலத்தையும் நாடி செயல்படுமா?

- பலப்பல துணை கம்பெனிகளை உருவாக்கி, அனைவரையும் குழப்பும் பரிவர்த்தனைகளில் ஈடுபட்டுவிடுமா?

- அரசியல் பின்புலத்தால் தூக்கிப் பிடிக்கப்படும் கம்பெனியா?

- உரிமையாளர்கள் இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி போல் அடக்கி வாசிக்கிறார்களா அல்லது விஜய் மல்லையா போல் ஆடம்பரத்தில் ஈடுபடுகிறார்களா?

- உரிமையாளர்கள் சம்பளம் என்ற பெயரில் கம்பெனியின் பணத்தைச் சுருட்டுகிறார்களா?

- திடீரென பங்கு விலையை உயர்த்துவது, பிறகு, அதல பாதாளத்தில் தள்ளுவது போன்ற செயலில் ஈடுபடுபவர்களா?

இவற்றைக் கண்டுபிடிப்பது சற்றுக் கடினமான காரியம்தான். ஆனால், கம்பெனியின் வருடாந்தர ரிப்போர்ட், உரிமையாளர்கள் தரும் இன்டர்வியூக்கள், பேப்பர் செய்திகள் இவற்றிலிருந்து மேற்கண்ட விவரங்களை அறியலாம்.

குவான்டிடேடிவ் அனாலிசிஸ்:

இது முற்றிலும் எண்கள் சார்ந்த விஷயம். லாப விகிதாசாரங்கள், வளர்ச்சி விகிதங்கள், வரவு, செலவு, வரி, டிவிடெண்ட், கடன், முதலீடுகள், ஃபைனான்ஷியல் ரேஷியோக்கள் சம்பந்தப்பட்டது. இதைப் புரிந்துகொள்ள ஓரளவு பொருளாதார அறிவு அவசியம்.

இதற்குத் தேவையான சில முக்கியமான விகிதாசாரங்கள்:

லாப விகிதாசாரங்கள் - ROA/ ROE/ ROCE

கடன் விகிதங்கள்- Debt Equity Ratio, Interest Coverage, Debt to Asset

வேல்யூவேஷன் விகிதங்கள் - Price to Book, Price to Sales, Price to Earnings

ஆபரேடிங் விகிதங்கள் - Turnover Ratio, Inventory No of Days

இவற்றை எப்படிக் கண்டுபிடிப்பது என்று மலைக்க வேண்டாம். மனி கன்ட்ரோல், ஸ்க்ரீனர் போன்ற தளங்களில் இவற்றை உடனே பார்க்க முடியும். இந்த ரேஷியோக்களை கம்பெனியின் கடந்த வருட ரேஷியோக்களுடனும், இதே செக்டாரில் உள்ள மற்ற கம்பெனிகளின் ரேஷியோக்களுடனும் ஒப்பிட்டுப் பார்த்தால் கம்பெனியின் ஆரோக்கியம் தெரிய வரும்.

Bombay Stock Exchange (BSE)
Bombay Stock Exchange (BSE)
AP Photo

ஆராய்ச்சி பண்ண வேண்டிய கம்பெனிகளை எப்படித் தேர்ந்தெடுப்பது?

நம் கண்களையும் காதுகளையும் திறந்து வைத்திருந்தாலே போதும். கொரோனா சமயத்தில் கால்நடையாக ஊர் சென்ற மக்கள் பிஸ்கட்டுகளை அதிகம் சாப்பிட்டதாக செய்தி வந்தது; பிஸ்கட் கம்பெனிகளின் விலை அதிகரித்தது. பேஜ் இண்டஸ்ட்ரீஸ் ஜாக்கி கம்பெனியின் ஏகபோக உரிமை பெற்றது; அதன் விலை உயர்ந்தது. மேலும், நாம் வேலை செய்யும் துறையில் உள்ள சிறந்த கம்பெனிகளை நம்மால் எளிதில் இனம் காண முடியும். இப்படிச் சில கம்பெனிகளைத் தேர்ந்தெடுத்து, மேற்கண்ட அனாலிசிஸ்களை மேற்கொண்டு மல்டிபேகர் கம்பெனிகளை கண்டறிந்து வாங்குவதுதான் ஃபண்டமென்டல் அனாலிசிஸ்.

- அடுத்து திங்கள்கிழமை காலை 9 மணிக்கு சந்திப்போம்.