Published:Updated:

பசுமை வீடு முதல் மில்லினியல்களின் வருகை வரை; ரியல் எஸ்டேட் துறை எப்படியெல்லாம் மாறியிருக்கிறது?

Representational Image

இதுவரை இல்லாத அளவாகக் குறைந்த வட்டியில் கிடைத்த வீட்டுக் கடன், ஏராளமான தனித்துவமான ஆஃபர்கள், இதுவரை கண்டிராத விலை இறக்கம் ஆகியவை வீடு வாங்குபவர்களை ஈர்த்த சில முக்கிய காரணிகளாகும். இது போன்ற நிலை மீண்டும் உருவாகும் என உறுதியாகச் சொல்ல முடியாது.

பசுமை வீடு முதல் மில்லினியல்களின் வருகை வரை; ரியல் எஸ்டேட் துறை எப்படியெல்லாம் மாறியிருக்கிறது?

இதுவரை இல்லாத அளவாகக் குறைந்த வட்டியில் கிடைத்த வீட்டுக் கடன், ஏராளமான தனித்துவமான ஆஃபர்கள், இதுவரை கண்டிராத விலை இறக்கம் ஆகியவை வீடு வாங்குபவர்களை ஈர்த்த சில முக்கிய காரணிகளாகும். இது போன்ற நிலை மீண்டும் உருவாகும் என உறுதியாகச் சொல்ல முடியாது.

Published:Updated:
Representational Image
ஆர்.குமார், நிறுவனர், navins.in

தமிழ்நாடு ரியல் எஸ்டேட்டில், கடந்த 2021-ம் ஆண்டு யாரும் எதிர்பார்க்காத பல மாற்றங்களைக் கொண்டு வந்தது. 2021-ம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் கோவிட் நோயின் இரண்டாம் அலை வந்ததால் ரியல் எஸ்டேட் திடீரென்று சரிவைக் கண்டது. கட்டுமானப் பொருள்களுக்கான விலை அதிகரிப்பு, கட்டுமான வேலையாள்கள் கிடைக்காத நிலை, மனை மற்றும் வீடுகளை நேரில் சென்று பார்ப்பது (Site Visits) குறைதல், கட்டுமானப் பணிகளில் சறுக்கல் போன்ற பல சவால்களைத் தமிழ்நாடு ரியல் எஸ்டேட் துறை சந்தித்தது.

இருந்தாலும், அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கைகள் மற்றும் ரியல் எஸ்டேட் துறையைப் புதுப்பிக்கும் டெவலப்பர்களின் முயற்சிகள் போன்றவை சொந்த வீட்டின் முக்கியத்துவத்தை உணர்த்தின. இது, அடுத்த மாதங்களில் வீடுகளின் தேவையை அதிகரிக்கவும் அதன் மூலம் விற்பனையை அதிகரிக்கவும் உதவியது.

ஆர்.குமார், நிறுவனர்
ஆர்.குமார், நிறுவனர்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இதுவரை இல்லாத அளவாகக் குறைந்த வட்டியில் கிடைத்த வீட்டுக் கடன், ஏராளமான தனித்துவமான ஆஃபர்கள், இதுவரை கண்டிராத விலை இறக்கம் ஆகியவை வீடு வாங்குபவர்களை ஈர்த்த சில முக்கிய காரணிகளாகும். இது போன்ற நிலை மீண்டும் உருவாகும் என உறுதியாகச் சொல்ல முடியாது. ஆனால், நடப்பு 2022-ம் ஆண்டில் குடியிருப்புகளின் விற்பனை தொடரும் என எதிர்பார்க்கலாம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சிக்கனமான / நடுத்தர விலை வீடுகளுக்குத் தேவை உயர்வு

சிக்கனமான / நடுத்தர விலை வீடுகளுக்கு (Affordable / mid-sized homes) அண்மையில் தேவை அதிகரித்துள்ளது. இந்த வீடுகளுக்கான சராசரி விலை ரூ.45 லட்சம் முதல் ரூ. 90 லட்சமாகக் குறைந்திருக்கிறது. மேலும், ரூ.1 கோடி முதல் 2 கோடி விலை உள்ள வீடுகளுக்கான தேவையும் அதிகரித்துள்ளது.

இந்தத் தேவை 2022-ம் ஆண்டிலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. டெவலப்பர்கள் இந்தப் பிரிவில் அதிக வீடுகளைக் கட்டி வருகிறார்கள். அதேநேரத்தில் ரூ. 25 லட்சம் பட்ஜெட்டுக்குள் வீடுகள் கட்டுவது குறைந்து வருகிறது. இந்த பட்ஜெட்க்குள் வீடு கட்டினால், நல்ல விற்பனை வாய்ப்பு இருக்கிறது எனலாம்.

ரியல் எஸ்டேட்
ரியல் எஸ்டேட்

வீடு வாங்கும் விருப்பங்களில் மாற்றம்

கடந்த 2021-ம் ஆண்டு, வீடு வாங்குபவர்களின் விருப்பங்களில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஒருங்கிணைக்கப்பட்ட வாழ்க்கை (Integrated living) முறையாகச் சிறந்த வசதிகள், பெரிய திறந்த வெளி தளங்கள், அதிக பாதுகாப்பு வசதி கொண்ட கேட்டட் கம்யூனிட்டீஸ் (Gated communities) என்கிற கான்செப்ட் கொண்ட நகரியங்களில் சொந்த வீடு வாங்கப் பலரும் விரும்ப ஆரம்பித்திருக்கிறார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

முன் எப்போதும் இல்லாத வகையில், கோவிட் தொற்றுநோய் நம் அனைவரின் வாழ்விலும் ஆரோக்கியமான வாழ்க்கையின் முக்கியத்துவத்தைப் புரிய வைத்துள்ளது. இந்த விழிப்புணர்வால் தனி வீடுகள் மற்றும் அடுக்குமாடிக் குடியிருப்புகளுடன் ஒப்பிடும்போது, ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கையை அளிக்கும் கேட்டட் கம்யூனிட்டீஸ் மீது மக்களின் முதன்மையான கவனம் திரும்பி இருக்கிறது. ஒருங்கிணைக்கப்பட்ட வாழ்க்கை என்ற கருத்து வேகமாகப் பரவி வரும் நிலையில், வசிப்பவரின் அனைத்து சமூக, குடிமை மற்றும் பொழுதுபோக்குத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் பெரிய வளாகங்களுக்கு 2022-ல் தேவை இன்னும் அதிகரிக்கும் எனலாம்.

Real Estate
Real Estate

பசுமை வீடுகளுக்கான தேவை

மாறிவரும் வாழ்க்கை முறைகள் பசுமை வீடுகளுக்கான (Greenhomes) தேவையை முன்னை விட அதிகரித்திருக்கிறது. இதனால், ரியல் எஸ்டேட் துறையும் மாற்றம் கண்டுள்ளது. இப்போது வீடு வாங்குபவர்கள் வழக்கமான குடியிருப்புகளை விட, அதிக காற்றோட்டம் மற்றும் வெளிச்சம் வீட்டுக்குள் நன்றாக வரும் வீடுகளைத்தான் அதிகம் விரும்புகிறார்கள். இந்தப் பசுமை வீடுகள் மூலம் மின் விளக்குகள், மின் விசிறிகள் பயன்பாட்டைக் குறைத்து மின்சாரத்தை வெகுவாகச் சேமிக்க முடியும்.

மேலும், இந்தப் பசுமை வீடுகள் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படுத்தாத பொருள்களைக் கொண்டு கட்டப்பட்டதாக இருக்கின்றன.

ரியல் எஸ்டேட்டை ஆளும் தொழில்நுட்பம்

தொற்றுநோய் பாதிப்பிருந்து தப்பிக்கவும் இதர பணிகளை எளிதாகச் செய்யவும் தொழில்நுட்பம் உதவியுள்ளது. கடந்த பத்தாண்டுகளில் கட்டுமான செயல்முறைகள், சுற்றுச்சூழல் நிலைத்தன்மை மற்றும் அடுக்குமாடிக் குடியிருப்புகளின் விற்பனை ஆகிய விஷயங்களில் தொழில்நுட்ப மேம்பாட்டிற்காக அதிக முதலீட்டை ரியல் எஸ்டேட் துறை மேற்கொண்டுள்ளது.

பல பிரபல ரியல் எஸ்டேட் பில்டர்கள், தொற்றுநோய் பரவலின் போது முன்னெப்போதும் இல்லாத வகையில் தொழில்நுட்பத்தை நன்கு பயன்படுத்தியுள்ளனர்.

Real estate
Real estate

ரியல் எஸ்டேட்டில் மில்லினியல்கள் முதலீடு

கோவிட் 19 வைரஸ் பரவலின் போது புதிய இயல்பு வாழ்க்கைக்குப் பலரும் பழகி இருக்கிறோம். வீட்டிலிருந்து வேலை (work-from-home) என்பது பல்வேறு செலவுகளைக் குறிப்பாக பெட்ரோல், டீசல் போன்ற எரி பொருள்கள், ஆடை, அணிகலன்களுக்கான செலவை கணிசமாகக் குறைத்திருக்கிறது. இந்த நிலையில் மில்லினியல்கள் (Millennial) தங்கள் முதலீட்டுத் திட்டங்களை மறுபரிசீலனை செய்திருக்கிறார்கள்; செய்து வருகிறார்கள். குறிப்பாக, வீட்டு வாடகை ஏன் அதிகமாகக் கொடுக்க வேண்டும்? வீட்டிலிருந்தே வேலை என்கிற போது தங்களின் பட்ஜெட்டுக்கு ஏற்ற வீடு கிடைத்தால், அதை வாங்கி குடியிருக்கலாம் என யோசிக்கின்றனர்.

இதுவரைக்கும் இல்லாத வகையில் மிகக் குறைந்த வட்டியில் வீட்டுக் கடன், திரும்பக் கட்டும் அசல் மற்றும் வட்டிக்குக் கிடைக்கும் வரிச் சலுகைகள் ஆகியவை மில்லினியல்களை சொந்த வீடு வாங்க தூண்டியிருக்கிறது. இந்த நிலை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரியல் எஸ்டேட்டில் என்.ஆர்.ஐ முதலீடுகள்

வெளிநாட்டு இந்தியர்கள் (என்.ஆர்.ஐ-க்கள்) இந்தியாவில் வீடு வாங்கும் ஆர்வம் அதிகரித்துள்ளது. இந்தியாவில் சொந்த வீடு என்பது என்.ஆர்-ஐ-க்களுக்கு பாதுகாப்பு உணர்வைத் தருகிறது. இது பணி ஓய்வூதியத்தின் போது தாய் நாட்டிற்குத் திரும்புவதற்கு ஓர் உந்து கோலாக இருக்கிறது.

மிகக் குறைந்த வட்டியில் வீட்டுக் கடன், இந்திய ரூபாயின் வெளி மதிப்பு வீழ்ச்சி, அதிக வரிச் சலுகைகள் ஆகியவை என்.ஆர்.ஐ-க்களுக்கு இந்திய ரியல் எஸ்டேட் மீது ஆர்வத்தைத் தூண்டியிருக்கிறது.

Real Estate!
Real Estate!

ரியல் எஸ்டேட்டில் ஒருங்கிணைப்பு

நீடித்த ஊரடங்கு மற்றும் தொழில் முடக்கம் காரணமாக ரியல் எஸ்டேட் துறையில் பணப்புழக்கம் திடீர் அழுத்தத்துக்கு உருவானது. இதனால், ரியல் எஸ்டேட் சந்தையில் ஒருங்கிணைப்பு (consolidation) ஏற்பட்டது. மேலும், கடந்த 2021-ம் ஆண்டில் வீடு வாங்குபவர்களும் மிகவும் எச்சரிக்கையுடன்தான் செயல்பட்டார்கள். காரணம், 2020-ம் ஆண்டின் கோவிட் பாதிப்பு 2021-ம் ஆண்டிலும் தொடருமா என்கிற சந்தேகத்துடன் செயல்பட்டதுதான்.

ஆனால், நடப்பு 2022-ம் ஆண்டு ஒரு புதிய நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது. மத்திய, மாநில அரசுகளும் தொழில் முடக்கம் மற்றும் ஊரடங்கு இல்லாமலேயே தொற்று நோய் பரவலைக் கட்டுப்படுத்த கற்றுக்கொண்டிருக்கின்றன. மேலும், இரண்டு தடுப்பூசி போட்டிருப்பவர்களின் எண்ணிக்கையும் மிக அதிகமாக இருக்கிறது. மேலும், ஒமிக்ரான் பெரியளவில் உயிர் சேதத்தை ஏற்படுத்தவில்லை என்பது அரசு மற்றும் நாட்டு மக்கள் இடையே நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது.

வாடிக்கையாளர்களிடம் நல்ல பெயர், நம்பகத்தன்மை, அதிக வெளிப்படைத்தன்மை கொண்ட பில்டர்கள் முன்னை விட அதிக எண்ணிக்கையில் வீடுகளை விற்கத் தொடங்கியுள்ளனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism